இன்ஸ்டாகிராமில் சமையல் வீடியோவை பதிவிட்ட சிவாங்கி.

தமிழில் பிரபல தொலைக்காட்சி சேனலாக விளங்கும் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் அனைவருக்கும் பரிச்சயமானார் சிவாங்கி கிருஷ்ணன். தனது குழந்தைத்தனமான பேச்சு மற்றும் நடவடிக்கையால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் இந்நிகழ்ச்சிக்கு பிறகு வெள்ளி திரையிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

தற்போது பின்னணி பாடகியாகவும் வலம் வரும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்து தற்போது நடைபெற்று வரும் சீசனில் குக்காக போட்டியிட்டு வருகிறார். இதற்கிடையில் தனது சமூக வலைதள பக்கத்தில் எப்போதும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வரும் இவர் தற்போது முதல் முறையாக சமையல் செய்யும் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அதில் ரேடிஷ் குல்ஃபி செய்து காட்டிய சிவாங்கியின் வீடியோவை ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர்.