சென்னையில் கனமழை நீடிக்குமா? : ஆய்வு மையம் தகவல்

பிரபல Dance Master திடீர் மரணம் - அதிர்ச்சியில் ரசிகர்கள் | Siva Shankar Master Passed Away | RIP

Siva Shankar Master Passes Away : தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடிகராகவும் டான்ஸ் மாஸ்டர் ஆகவும் வலம் வந்தவர் சிவசங்கர் மாஸ்டர். இவர் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான திருடா திருடி படத்தில் இடம்பெறும் மன்மத ராசா என்ற புகழ்பெற்ற பாடலுக்கு நடனம் அமைத்தார்.

இது மட்டுமல்லாமல் பல்வேறு பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார். தமிழில் கண்ணா லட்டு தின்ன ஆசையா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். ஹைதராபாத்தில் வசித்து வந்த இவர் குடும்பத்தோடு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

பிரபல Dance Master திடீர் மரணம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்

சிவசங்கர் மாஸ்டருக்கு நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் திரையுலக பிரபலங்களிடம் உதவி கேட்ட நிலையில் தனுஷ், சோனு சூட் என பல பிரபலங்கள் உதவி செய்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி சிவசங்கர் மாஸ்டர் உயிரிழந்துள்ளார்.

இதனை சோனு சூட் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இரங்கல் தெரிவித்துள்ளார். இவர் 800க்கும் அதிகமான படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். மகதீரா திரைப்படத்திற்காக தேசிய விருதை வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. ‌