நடிக்க வந்த கறி கடைக்காரர் பேசுவது எல்லாம் கேட்டு முத்துவிற்கு சந்தேகம் வருகிறது. 

தமி‌ழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் விஜயா பார்த்து உங்கள சம்மந்தி என்று கூப்பிடவே மனசு வரல, நீங்க அவ்வளவு யங்கா யூத்தா இருக்கீங்க என கூறுகிறார். இதனால் விஜயா வெக்கப்பட்டு நிற்கிறார். பிறகு ரோகிணியோட அப்பா 100 தட்டு சீர்வரிசை வைக்க தான் சொன்னாரு அதுக்கு 100 பேர மலேசியாவில் இருந்து கூட்டிட்டு வரணும். நிறைய பேருக்கு பீட்சா கிடைக்கல அதனால வர முடியல என்று சொல்ல எல்லோரும் கன்பியூஸ் ஆக மாமா விசாவை தான் அப்படி Fun-ஆ சொல்றாரு என சமாளிக்கிறார். 

அதன் பிறகு உள்ளே வரும் முத்துவை பார்த்து இளநீர் வெட்டுற பையன் என்று சொல்ல யாரைப் பார்த்து என்ன சொல்றீங்க என கேட்க கையில் இளநீரோட நிக்கறதுனால அப்படி சொன்னதாக சொல்ல அவன் என்னுடைய இரண்டாவது பையன் முத்து என அண்ணாமலை அறிமுகம் செய்து வைக்க பாப்பா சொன்ன குடிகார முத்து இவர் தானா என்று கேட்க எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். 

வீட்ல நடந்த விஷயங்கள் கொஞ்சம் மாமா கிட்ட சொன்னேன் அதனால அவர் இப்படி கேட்டுட்டாரு யாரும் எதுவும் மனசுல வச்சுக்க வேண்டாம் என்று சொல்லி சமாளிக்கிறார் ரோகினி. அவள் பிறகு சுருதி நீங்க மலேசியாவில் எங்க இருக்கீங்க என் பிரண்டும் மலேசியாவில் தான் இருக்கா நீங்க எந்த ஏரியால இருக்கீங்க என ஏரியா பெயரை சொல்லி கேட்க இந்த பொண்ணு என்னமா சாப்பாடு பேரெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கு என கேள்வி கேட்க திரும்பவும் எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். முத்துவை இளநீர் விட்டுட்டு வர சொல்ல மீனா அருவாள் எடுத்து வந்து கொடுக்க ஷார்ப்பாக இல்லையே என்று சொல்ல கத்திக்கு சாணம் பிடிக்கணும் என வார்த்தையை விட்டு சிக்க பார்க்கிறார் கறி கடைக்காரர். 

அவர் இப்பவும் யூமரா தான் பேசிக்கிட்டு இருக்காரு நீங்க ஜார்ஜ் டவுன்ல இருக்கிறதை பற்றி கேட்கிறார்கள் என்று சொல்ல ஆமா அங்கிருந்தா வரேன் என சமாளிக்கிறார் கறி கடைக்காரர். பிறகு முத்துவும் செல்வமும் சேர்ந்து இவரை பார்த்தா மலேசியா கார் மாதிரியே தெரியல, குடிக்க வச்சு தான் இவர்கிட்ட இருந்து உண்மையை வாங்கணும் என பிளான் போடுகின்றனர். 

பிறகு ரோகிணி அவரை ரூமுக்குள்ள அழைத்துச் சென்று நீங்கள் சொல்லிக் கொடுத்த டயலாக்கை மட்டும் பேசினா போதும் கிளம்பற வரைக்கும் அது தவிர வேற எதுவும் பேசக்கூடாது என வார்னிங் கொடுக்கிறார். 

அடுத்ததாக விஜயா ரோகினி ஸ்ருதி மூவரும் காய்கறி வெட்டி கொண்டிருக்கும் போது வெளியே வரும் கறிக்கடைக்காரர் அண்ணாமலை தேங்காய் துருவிக் கொண்டிருப்பதை பார்த்து சம்மந்தியை ஏன் தேங்காய் துருவ விட்டீங்க என்று கேட்க நம்ப வீட்டு வேலையை நம்ப தானே செய்யணும் என கூறுகிறார் அண்ணாமலை. 

நாச்சியார் பாட்டி என் பையன் ரயில்ல என்ஜின் டிரைவரா இருந்தார் என்று சொல்ல டிரைவரா என கறிக்கடைக்காரர் இருக்க முத்து அது என்ன டிரைவர் என்று இருக்கிறீர்கள் என என்ட்ரி கொடுக்கிறார். பிறகு நீங்க என்ன தம்பி வேலை செய்றீங்க என்று கேட்க கார் டிரைவர் என சொல்ல திரும்பவும் டிரைவரா என இழுக்கிறார். 

அடுத்ததாக இப்படி வெட்டிட்டு இருந்தா நாளைக்கு தான் சமைப்பீங்க போல, கொடுங்க நான் வெட்டுறேன், நம்ம வீட்டு வேலையை நாம தானே செய்யணும் என கத்தியை தீட்டி சரசரவென வெட்டி தள்ள விட்டு இவர் என்னவோ கறிக்கடைல கொத்து கறி போடுகிற மாதிரியே பண்றாரு என சொல்ல ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். செல்வமும் நம்ம கணேஷ் அண்ணா இப்படித்தான் கொத்துக்கறி போடுவாரு என சொல்ல முத்து என பேசி ஷாக் கொடுக்கிறார். 

விஜயா இவர் சரசரவென காய்கறிகளை வெட்டி தள்ளுவதை பார்த்து ஆச்சரியப்படுகிறார். ரோகிணி இவரின் இருந்தா மாட்டிக்குவோம் என குடிக்க சுடு தண்ணி கேட்டீங்களா வாங்க ரூமுக்குள்ள எடுத்து வச்சிருக்கேன் என்று சொல்லி ரூமுக்கு அழைத்துச் செல்கிறார். முத்துவுக்கு சந்தேகம் அதிகமாகிறது. இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது. ‌ 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.