ரோகினி மனோஜை அவமானப்படுத்த மீனா குடும்பத்தில் மரியாதையை இழந்துள்ளார் முத்து.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் மீனா என் அப்பா நினைவு நாளுக்காக கூப்பிட அவரது அம்மாவும் சீதாவும் வீட்டுக்கு வந்திருக்க விஜயா அவரே அல்பாயீஸ்ல போய்ட்டாரு அதை எதுக்கு இங்க வந்து சொல்லிக்கிட்டு இருக்கீங்க என்று அவமானப்படுத்தி பேச மீனா எதுக்கு அப்பாவை பத்தி பேசுறீங்க என்று கோபப்படுகிறார்.

இதைத் தொடர்ந்து அண்ணாமலையிடம் சொல்லிவிட்டு அவர்கள் இருவரும் கிளம்ப மீனா வழி அனுப்ப வர எதிரே முத்து வருகிறார். ஆனால் முத்து எதுவும் பேசாமல் உள்ளே வந்துவிட மீனா நீங்கே போங்கம்மா என்று அவர்களை வழி அனுப்பி விட்டு உள்ளே வருகிறார்.

முத்து அப்பாவிடம் சாப்டியா பா என்று கேட்க அண்ணாமலை உன் மாமியாரும் சீதாவும் வந்துட்டு போனாங்க என்று சொல்ல முத்து பார்த்தேன் பா, பேசுறதுக்குள்ள கிளம்பிட்டாங்க என்று கூறுகிறார். நாளைக்கு மாமனாருக்கு நினைவு நாள் வருது நீ அங்க போயிட்டு வா என்று சொல்ல சவாரி இருக்கு என்று கூறுகிறார். நீதான் முன்னாடி இருந்து எல்லாத்தையும் பண்ணனும் என்று அண்ணாமலை சொல்ல அங்க போனா சில பேர் முகத்தை பார்க்க வேண்டியது இருக்கும் என்று கூறுகிறார். ஆனால் அண்ணாமலை நீ போயிட்டு வரணும் அதுதான் சரியா இருக்கும் என்று சொல்ல முத்து பதில் பேசாமல் கிச்சனுக்கு சென்று தண்ணீர் குடிக்க அங்கு வந்த மீனா நீங்க என்னதான் பண்ணாலும் உங்கள மாப்பிள்ளைனு மதிச்சு கூப்பிட வந்தாங்க, ஆனா இதுதான் நீங்க குடுக்குற மரியாதையா என்று கேட்கிறார்.

நாளைக்கு வந்து அங்க கோபத்தை காட்டாம இருங்க என்று சொல்லி வெளியே வந்து இருக்கிறார். அதைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த மனோஜ் வேலைக்கு போன விஷயத்தை ரோகிணியுடன் சொல்ல ரோகிணி விளையாடாத மனோஜ் என்று சொல்ல மனோஜ் உண்மையா தான் சொல்றேன் அங்க வேலை பார்க்க முடியவில்லை என்று கூறுகிறார்.

இதனால் உச்சகட்ட கோபத்திற்கு செல்லும் ரோகினி உன்னால ஒரு இடத்துல கூட வேலை பார்க்க முடியாதா உனக்கு வேலை செய்யணும் என்ற எண்ணம் இருக்கா இல்லையா என கேள்வி கேட்கிறார். வித்யா அடிக்கடி சொல்லுவா அவருக்கு வேலை பார்க்கிற எண்ணமே இல்ல லேசி என்று சொன்னா அப்போ நீயும் என்னை சோம்பேறி என்று சொல்கிறாயா என்று மனோஜ் கேட்க உனக்கு கோவம் எல்லாம் வருதா எனக்கு தான் கோவம் வரணும் என்று சொல்கிறார்.

வேலை செய்யுற இடத்துல எல்லாருக்கும் அப்படித்தான் இருக்கும் குடும்பத்திற்காக எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு தான் வேலை செய்யணும் என்னையும் சிலர் வேலைக்காரி மாதிரி நடத்துவாங்க அதெல்லாம் பொறுத்துக்கிட்டு தான் வேலை செஞ்சுகிட்டு இருக்கேன் என்று சொல்லுகிறார். என்னால் அப்படி செல்ப் ரெஸ்பெக்ட் விட்டு வேலை செய்ய முடியாது என்று மனோஜ் சொல்கிறார்.

கூடிய சீக்கிரம் வேலையை தேடிக்கிறேன் என்று சொல்ல எப்படியும் அந்த வேலையையும் விட தான் போற, என்று பேக்கை எடுத்து கொண்டு கிளம்ப எங்க போற என்று கேட்க எனக்கு வேலை இருக்கு என்று வெளியே கிளம்புகிறார் ரோகினி.

மறுநாள் வீட்டில் எல்லா ஏற்பாடுகளையும் செய்து முத்துவுக்காக காத்திருக்க ஹவுஸ் ஓனர் ராகு காலம் வந்துடும் அதுக்கு முன்னாடி பூஜையை தொடங்குங்க என்று சொல்ல இவர்களும் பூஜையை தொடங்குகின்றனர். சத்யா கற்பூர ஆரத்தி காட்ட முயற்சி செய்ய கை வலியால் கீழே போட்டு விடுகிறார். இதனால் பார்த்தீங்களா நம்ம புள்ள நிலைமையை நம்ம வீட்டு மாப்பிள்ளை இப்படி பண்ணிட்டாரு என்று வருந்துகிறார் மீனாவின் அம்மா.

எல்லாரும் ஏன் மீனா முத்து இப்படி பண்ணாரு அவர் மாறவே மாட்டாரா என்று கேட்க சிலரை எல்லாம் மாற்றவே முடியாது என்று மீனாவின் அம்மா சொல்கிறார். மீனாவோட வாழ்க்கை நினைச்சா தான் எனக்கு கவலையா இருக்கு. மாப்ளனு அவர் மேல வச்சிருந்த மரியாதையே போயிடுச்சு என்று சொல்லிக் கொண்டிருக்க முத்து வந்து நிற்க உடனே இவர்கள் அமைதியாகி விடுகின்றனர். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.