மீனாவின் கடையால் விஜயா கடுப்பாக பார்க்கில் இருந்து சிக்கி உள்ளார் மனோஜ். 

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இன்னும் காபி வரல இந்த மீனா என்னதான் பண்றான்னு தெரியல என விஜயா கத்திக் கொண்டிருக்க அண்ணாமலை நீ கழுத மாதிரி இல்ல குதிரை மாதிரி கத்துனா கூட மீனா வரமாட்டா அவ பிசியாகிட்டா முத்து பாணியில் சொல்லப்போனால் அவ தொழிலதிபர் ஆகிட்டா. காலைல நாலு மணிக்கு எழுந்துச்சு பூக்கடைக்கு போய் பூ வாங்கிட்டு வந்து கடையை திறக்கிற வேலையை பார்க்க ஆரம்பிச்சிருப்பா என்று கூறுகிறார். 

நீயே போய் காபி போட்டு குடி என்று சொல்ல விஜயா முகம் மாற என்ன இதுக்கே கசாயம் குடிச்சா மாதிரி இருக்கு என்று நக்கல் அடிக்கிறார். பிறகு விஜயா காபி போட கிச்சனுக்கு சென்று விட்டா எல்லா வேலையும் என்னையே செய்ய வைத்து விடுவா போல என்று புலம்பிக்கொண்டே காபி பொடி தேட ஒவ்வொருத்தராக காபி கேட்டு வந்து கடைசியில் நாங்க வெளியில் சாப்பிடுகிறோம் என்று கிளம்பி செல்கின்றனர். 

அண்ணாமலையும் வெளியே போறேன் என்று கிளம்பி சென்று விடுகிறார். எல்லாரும் வெளியே சாப்பிடுகிறேன் என்று கிளம்பி போயிட்டாங்க நான் இப்ப எப்படி சாப்பிடுவது? நான் எங்க போய் சாப்பிடுவது என்று விஜயா புலம்பித் தள்ளுகிறார். பிறகு முத்து டிபன் எடுத்து வந்து வச்சு எல்லாரையும் கூப்பிட்டு சாப்பிட சொல்லுங்க என்று சொன்னது எல்லாரும் கிளம்பி போயிட்டாங்க நான் மட்டும்தான் இருக்கேன் அப்ப நீங்க சாப்பிடுங்க, மீதியை வெளியில யாருக்காவது கொடுத்துடறேன் என சொல்கிறார். 

அதைத் தொடர்ந்து இரவு எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்க திடீரென்று யாரோ கதவை தட்ட விஜயா தூக்கம் கலைந்து கதவை திறக்க அவசரமா ரெண்டு மாலை வேண்டும் என்று கேட்டு யாரோ இருவர் வந்திருக்க விஜயா கடுப்பாகி மாலை எல்லாம் கிடையாது அவங்க ஊருக்கு போய் இருக்காங்க என்று சொல்லி கதவை சாத்தி விடுகிறார். 

மறுநாள் இதை வைத்து பிரச்சனை செய்ய முத்து கஸ்டமர் வந்தா எங்களுக்கு சொல்ல வேண்டியது தானே இப்போ உங்களால எங்களுக்கு லாஸ் என்று சொல்ல விட்டா என்னையே ஆர்டர் எடுக்க சொல்லுவ போல என்று கேட்க எடுத்தா என்ன தப்பு என்று முத்து பதிலடி கொடுக்கிறார். ஸ்ருதி அங்கே வந்து நைட் டைம்ல எல்லாம் கஸ்டமர் வந்தா ஆன்ட்டிக்கு தூக்கம் கெடாத அதுக்கப்புறம் அவங்களுக்கு சுகர் பிபி எல்லாம் வந்துடும் என்று சொல்ல விஜயா அதிர்ச்சி அடைகிறார். 

மனோஜ் தன்னுடைய பங்குக்கு நான் ஒரு பெரிய கம்பெனில பெரிய வேலையில இருக்கேன் என்னை பாக்க நிறைய பேர் வீட்டுக்கு வருவாங்க இப்படி வாசல்ல கடைய போட்டு உட்கார்ந்து இருந்தா அவங்க என்ன நினைப்பாங்க என் கௌரவம் என்ன ஆகிறது? என்று பேச முத்து திட்டி அனுப்பி விடுகிறார். 

அதைத் தொடர்ந்து மீனா பூக்கடை வியாபாரத்தை பார்க்கத் தொடங்க முத்து சவாரி ஒன்றுக்காக வந்திருக்க அவரிடம் பூக்கடை பற்றிய நோட்டீசை கொடுத்து உங்களுக்கு ஏதாவது பூ வேணும்னா இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க என்று கூறுகிறார். பக்கத்தில் பார்க் இருக்க பார்க்கில் நிறைய பேர் இருப்பாங்க அங்க போய் கொடுக்கலாம் என்று உள்ளே வரும் முத்து அங்கிருக்கும் செக்யூரிட்டியிடம் நோட்டீசை கொடுத்து இதை வரவங்க எல்லாருக்கும் கொடுங்க என்று சொல்லிக்கொடுத்து ஐம்பது ரூபாய் பணத்தையும் கொடுக்கிறார். 

திடீரென மனோஜ் பார்க்கில் வேர்கடலை சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்க்கும் முத்து அதை வீடியோ எடுக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.