ரூமில் படுத்திருந்த மீனாவை இழுத்து வந்து வெளியே தள்ளி உள்ளார் விஜயா. 

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் விஜயா ரோகினிக்கு உடனே தாலி செயின் வாங்கி போடணும் என்று சொல்லி அண்ணாமலை இடம் பேச அதை மனோஜ் வாங்கி போடுவாங்க நீ கொஞ்சம் அமைதியாக இரு. மூணு மருமகளையும் ஒரே மாதிரி பாரு அப்பதான் பிரச்சனை வராது என்று சொல்ல மீனாவும் ரோகிணியும் ஒன்னா என்று விஜயா கேள்வி கேட்கிறார். அண்ணாமலை மனோஜ் சம்பாதிச்சு தாலி செயின் எடுத்துக் கொடுப்பான் என்று சொல்லி வெளியே வருகிறார். 

அதைத்தொடர்ந்து விஜயா ரோகினியிடம் சென்று என்னம்மா இது இப்படியேவா வெளியே போகப் போற என்று கேட்கிறார். யாராச்சும் நீ மஞ்சள் கயிரோடு இருக்கிறத பாத்தா என்ன சொல்லுவாங்க நம்ம குடும்ப கவுரவம் என்ன ஆகிறது? எவ்வளவு பணத்துக்கு தாலிச் செயினை அடகு வச்சிருக்க சொல்லு கீழ வாடகைக்கு இருக்கவங்க கிட்ட பணத்தை வாங்கி நகை மீட்டு விடலாம் என்று சொல்ல ரோகிணி அதையெல்லாம் வேண்டாம் என்று சொல்கிறார். மீனாவை பற்றி விஜயா தரக்குறைவாக பேச இதைக் கேட்ட இது யாரைப் பத்தி சொல்றீங்க ஆன்ட்டி என்று கோபப்படுகிறார். நான் பொதுவா சொன்னேன் என்று விஜயாவை நீங்க மீனாவை தான் சொன்னீங்களே எனக்கு தெரியும். ரோகினி நகையை அடகு வச்சதுக்கு மீனா எப்படி பொறுப்பாவாங்க? எங்கம்மா தான் பணம் வேண்டாம்னு சொன்னாங்களே இவங்களே வச்சுக்க வேண்டியது தானே என்று பேசுகிறார். 

அடுத்ததாக ரோகினி வித்யாவை சந்தித்து நடந்த விஷயத்தை சொல்லி இப்போதைக்கு என்ன காப்பாற்ற போறதே இந்த மஞ்ச கயிறு தான் இந்த பாக்கும்போது மனோஜ்க்கும் என் மாமியாருக்கும் ஒரு கில்ட் வந்துகிட்டே இருக்கும் அது போதும் அதை வச்சு கொஞ்ச நாள் ஓட்டிடுவேன் என்று சொல்கிறார். 

பிறகு மீனா காய்ச்சலாக உட்கார்ந்திருக்க அதை பார்த்துவிட்டு முத்து ஹாஸ்பிடல் கூப்பிட மீனா அதெல்லாம் வேண்டாம் என்று சொல்கிறார். சரி நீ உள்ள படுத்து ரெஸ்ட் எடு என்று சொல்லிவிட்டு மாத்திரை வாங்க மெடிக்கல் ஷாப் செல்கிறார். இந்த நேரத்தில் மனோஜ் மற்றும் ரோகினி வீட்டுக்கு வர மனோஜ் டயார்டா இருக்கு நான் போய் படுக்கிறேன் என்று ரூமுக்குள் என்னுடைய மீனா படுத்து தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்து விஜயாவிடம் சென்று விஷயத்தை சொல்லி கூட்டி வருகிறார். 

இதைப் பார்த்த விஜயா மீனாவை எதுக்கு பார்க்க அண்ணாமலை வீட்டுக்குள் வர அவரிடம் மீனா பாருங்க எது பண்ணி இருக்கா என்று சொல்ல அண்ணாமலை அவளுக்கு உடம்பு முடியல போல அதனால படிச்சு தூங்குற எழுப்ப வேண்டாம் என்று சொல்லி ரூமுக்கு செல்ல அதையும் கேட்காமல் விஜயா மீனாவை தட்டியெழுப்பி அவ்வளவு சொல்லியும் கொஞ்சம் கூட வெட்கம் இல்லாம ரூம் புடுச்சுக்கிட்டு இருக்க என்று திட்டுகிறார். வேணும்னு தானே சீக்கிரம் வந்து படுத்துகிட்டு இருக்க என்று கோபப்படுகிறார். 

நீ எல்லாம் ஜென்ரல் வார்டில் தான் படுக்க வேண்டும் என்று மீனா தரதரவென வெளியே இழுத்து வர முத்து எதிரே வந்து நிற்க விஜயா அதிர்ச்சி அடைகிறார். மனோஜ் நான் நாளை நான் உழைச்சிட்டு வரேன் எனக்கு ரெஸ்ட் எடுக்க ரூம் வேண்டும் என் ரூம் குடுத்துருங்க என்று கேட்கிறார். அதேபோல் ரோகினில் நானும் நாளெல்லாம் க்ளைண்ட் எங்ககிட்ட பேசிட்டு தான் வருவேன், ரெஸ்ட் எடுக்க கூட இந்த வீட்ல இடம் இல்ல என்று சொல்கிறார். 

முத்து ஹால்ல வந்து படுத்து ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதானே என்று சொல்ல மனோஜ் உன்னை மாதிரி நான் ஒரே இடத்தில் உட்கார்ந்து காரை ஓட்டிட்டு வரல நடந்து தொண்டை வலிக்க பேசி  என்னோட ப்ரைனை யூஸ் பண்ணி வேலை பண்ணிட்டு வரேன் என்று சொல்கிறார். ஸ்ருதி மீனா உடம்பு முடியல அதனால தான் போய் படுத்தாங்க எதுக்கு இவ்வளவு பிரச்சனை என்று கேட்க ரோகினி அடுத்த வாரம் உங்க முறை வரும்.. நீங்க வெளியே வந்து படிக்கும்போது தான் இதெல்லாம் தெரியும் என்று சொல்ல நான் இப்படி எல்லாம் சண்டை போட்டுட்டு இருக்க மாட்டேன் ஒரு வாரம் என் அம்மா வீட்டுக்கு போயிட்டு அங்க தங்கியிருந்துட்டு வருவேன் என்று சொல்ல விஜயா ஷாக் ஆகிறார். 

மனோஜ் ஸ்ருதி சொல்றதுதான் சரி நாங்களும் ஒரு வாரம் ஹோட்டல்ல ரூம் எடுத்து தங்கிட்டு வரோம் என்று சொல்ல விஜய்யா பாத்திங்களா ரெண்டு பேரும் என்ன சொல்றாங்க என்று அண்ணாமலையிடம் முறையிட அவர் இந்த ரூம் பிரச்சனை பெரிய பிரச்சனையா போயிட்டு இருக்கு மீனாவுக்கு உடம்பு சரியில்ல இன்னைக்கு நைட்டு நீ விஜயா ஓட இந்த ரூம்ல படுத்துக்க நானும் முத்துவும் இந்த ரூம்ல படுத்துக்குறோம் என்று சொல்ல மனோஜ் அப்போ எனக்கு ரூம் என்று கேட்க நீயும் எங்க கூட படுத்துக்க என்று சொன்னதும் அப்ப ரோகிணி எங்க படுப்பா என்று கேட்க விஜயா ரோகினி நீ என்கூட படுத்துக்க என்று சொல்கிறார். 

மீனா ரூமுக்குள் வந்ததும் தராதரம் இல்லாதவங்க கூட எல்லாம் படுத்து தூங்க வேண்டியது தான் இருக்கு என்று விஜயா வார்த்தையால் நோகடிக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.