ரூம் விசயத்தில் பார்த்துக் கொடுத்த ஐடியாவால் மனோஜ்க்கு அப்போ வைத்துள்ளார் முத்து.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் ரவி, ஸ்ருதி வேலைக்கு கிளம்ப அண்ணாமலை கொஞ்சம் இரு உங்க எல்லார்கிட்டயும் ஒரு விஷயம் பேச இருக்கின்றேன் எல்லோரையும் ஒன்று சேர்க்கிறார். 

இதைத் தொடர்ந்து முன்னாடி மூணு பசங்க மட்டும் இருந்தாங்க இருக்குற மூன்று ரூம்ல ஒரு ரூம்ல நாங்க இருந்தாலும் ரெண்டு ரூம்ல அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு இருந்தாங்க, இப்போ மூணு பேரும் மூணு குடும்பமா இருக்கீங்க. முத்து மீனா மட்டும் ஹால்லையும் மொட்டை மாடியிலயும் படுத்து தூங்கறது அவ்வளவு சரியா இல்லை அதனால நான் மாடியில ஒரு ரூம் கட்டலாம்னு முடிவு பண்ணி இருக்கேன் என்று சொல்கிறார். உடனே முத்து முத்து எதுக்குப்பா அதெல்லாம் வேண்டாம் என்று சொல்கிறார். பாட்டி நீ அமைதியா இருடா அவன் எடுத்திருக்க முடிவுதான் சரியென்று சொல்கிறார். 

அதன் பிறகு மனோஜ் யாருக்குப்பா என்று கேட்கிறார். அதானே ரூம் என்றதும் ஓடி வந்துடுவியே என்று முத்து மனோஜை கலாய்க்கிறார். ஸ்ருதி எதற்கு ஒரு ரூமா கட்டணும் ஒரு ப்ளோரே கட்டிடலாமே என்று சொல்கிறார். விஜயா ஸ்ருதி சொல்றதுதான் சரி அப்படியே ஒரு ஆள் ஒரு கிச்சன் ஒரு அட்டாச் பாத்ரூம் அப்படின்னு கட்டிடலாம் என்று சொல்ல முத்து இவங்க யாரையோ தனி குடித்தனம் வைக்க ஏற்பாடு பண்றாங்க என்று பல்பு கொடுக்கிறார். 

மீனா ஆடம்பர செலவெல்லாம் வேண்டாம் சிம்பிளா செய்யலாம் என்று சொல்கிறார். ரோகிணி ரூமோட சேர்த்து அட்லீஸ்ட் வந்து அட்டாச் பாத்ரூம் ஆவது இருக்கட்டும் என்று சொல்கிறார். அடுத்து மனோஜ் ரூம் கட்டறதுக்கு சரிப்பா பணம் யார் கிட்ட இருக்கு என்று கேட்க முத்து கவலைப்படாத உன்கிட்ட கேட்க மாட்டாங்க என்று பதில் அளிக்கிறார். அண்ணாமலை யாரும் பணம் தர வேண்டாம் நான் என்னுடைய பென்ஷன் பணத்துல கட்டுறேன் என்று சொல்கிறார். 

உடனே முத்து வேண்டாம் பா உன்னுடைய பணம் உன்கிட்டயே இருக்கட்டும் அதுதான் உனக்கு பாதுகாப்பு.. நீ யார்கிட்டயும் கைநீட்டும் நிலைமை வரக்கூடாது என சொல்கிறார். பாட்டி முத்து சொல்றதும் சரிதான் என்று சொல்ல அண்ணாமலை என்னம்மா நீங்களும் இப்படி சொன்னா அப்போ ரூம் கட்டுவது எப்படி இவங்க இப்படியே இருந்து விட வேண்டியது தானா என்று கேட்க பாட்டி நான் ஒரு ஐடியா சொல்றேன் என்று சொல்கிறார். 

இருக்கிற மூன்று ரூம்ல நீங்க இருக்கீங்க மத்த ரெண்டு ரூம்ல ரெண்டு பேர் இருக்காங்க. இனிமே அந்த ரெண்டு ரூமை மூன்று பேரும் மாறி மாறி யூஸ் பண்ணட்டும் என்று ஐடியா கொடுக்க மனோஜ் ரோகினி அதிர்ச்சி அடைகின்றனர். அண்ணாமலை நீங்க சொல்றதும் நல்ல ஐடியா என்று சொல்கிறார். 

இப்போ முத்து மீனா வெளியே தூங்குறாங்க அடுத்த வாரம் ரோகிணி மனோஜ் வெளிய தூங்கட்டும். அதுக்கு அடுத்த வாரம் ரவி ஸ்ருதி வெளியே தூங்கட்டும். இப்படி மூணு பேரும் மாறி மாறி ரூம் யூஸ் பண்ணட்டும். அப்பதான் எல்லாரும் சந்தோஷமாக இருக்க முடியும் வம்சமும் விருத்தி ஆகும் என்று சொல்ல மனோஜ் எதுக்கு பாட்டி இதெல்லாம் முத்துவும் அவன் பொண்டாட்டியும் தான் வெளியேவே தூங்குறேன்னு சொல்றாங்களே அப்படியே விட வேண்டியது தானே என்று கேட்க ஆனா இப்போ அப்படி சொல்ல மாட்டேன் என்று முத்து ஆப்பு வைக்கிறார். 

பாட்டி நீ சொன்னது சூப்பர் ஐடியா என்று கைத்தட்டி விசில் அடிக்கிறார். விஜயா ரோகினி ஸ்ருதி இரண்டு பேரும் பணக்கார வீட்டு பொண்ணுங்க அவங்க வெளியில் எப்படி தூங்குவாங்க அதெல்லாம் வேண்டாம் என்று சொல்ல அவங்க எங்க இருந்து வேணா வந்து இருக்கட்டும் இந்த வீட்ல வாழ வந்த எல்லோரும் ஒரே மாதிரி தான் இருக்கணும் என்று பதிலடி கொடுக்கிறார் பாட்டி. இவ்வளவு நாளா வெளியில் தூங்கிட்டிருந்த முத்துவும் மீனாவும் அடுத்த ஒரு வாரத்துக்கு மனோஜ் ரோகிணி ரூம்ல தூங்கட்டும் அவங்க ஹால்ல தூங்கட்டும் என்று சொல்கிறார். 

பிறகு பாட்டி கிச்சனுக்கு வர மீனா அவரிடம் எதுக்கு பாட்டி இதெல்லாம் நாங்க ஹாலிலேயே தூங்குறோம். எங்களால மத்தவங்களுக்கு கஷ்டம் வேண்டாம் என்று சொல்ல பாட்டி நீ ஹால்லயும் முத்து மொட்டை மாடியிலயும் தூங்கினா உங்களுக்கு எப்படி குழந்தை பிறக்கும்? நீ என்ன குந்தி தேவியா அவன் மொட்டை மாடியில் இருந்து பார்த்ததும் கர்ப்பமாக என்று திட்டுகிறார். புருஷன் பொண்டாட்டி அன்னோன்யமா இருந்தால் தான் வம்சம் விருத்தி அடையும் குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும் அதனால நான் சொல்றத நீ செய். நீ ரொம்ப இறங்கி போன கடைசி வரைக்கும் அப்படியே இருக்க வேண்டியதுதான் உனக்கான இடத்தில் விட்டுக்கொடுக்காத என்று அறிவுரை சொல்கிறார். 

அதைத் தொடர்ந்து மனோஜ் தன்னுடைய பார்க் நண்பரை ஷோரூமுக்கு அழைத்து வந்து நான் தான் இந்த கடைய வாங்க போறேன் என்று சுற்றிக் கட்டுகிறார். அதேபோல் ரோகினி வித்யாவை கொண்டு வந்து கடையை சுற்றி காட்டுகிறார். ஓனர் சீட் காலியாக இருந்ததும் மனோஜ் ஓடிப்போய் உட்கார பார்க் நண்பர் நீ சொன்னா மாதிரியே உக்காந்துட்டு இருப்பது போலவே ஒரு வேலையை தேடிக்கிட்ட என்று கலாய்க்கிறார். சரி எழுந்திரு ப்ரோ ஓனர் பார்த்தா ஏதாவது சொல்ல போறாரு என்று சொல்ல மனோஜ் இனிமே நான் தான் ஓனர் என்று சொல்கிறார். கடையிலும் கைக்கு மாறல என்று கலாய்க்கிறார் பார்க் நண்பர். இதையெல்லாம் பார்த்து ரோகிணி முகம் மாறுகிறார். 

இதைத்தொடர்ந்து கடைக்கு என்ன பேர் வைக்க போறீங்க? பெரிய நடிகையா கூப்பிட்டு திறங்க அப்பதான் உங்க கடைக்கு ஒரு விளம்பரம் கிடைக்கும் என்று சொல்கிறார். வீட்டுக்கு வந்ததும் மனோஜ், ரோகினி ரூமுக்குள் இருக்க மீனா அவர்கள் வெளியே வராததால் ஹாலில் பாய் போட ஸ்ருதியின் ரவியும் இந்த வாரம் நீங்க ரூம்ல தானே தூங்கணும் என்று கேட்கின்றனர். அவங்க இன்னும் வெளிய வரல தூங்கிட்டாங்க போல என்று மீனா சொல்ல முத்து மனோஜ் ரூம் கதவைத் தட்டி வெளிய கூப்பிடுகிறார். இந்த வாரம் நாங்க தான் ரூம்ல தூங்கணும் என்று சத்தம் போட ரோகிணி அதுதான் வெளியே வந்துட்டோம்ல என்று கோபப்படுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.