ஹாஸ்பிடலில் வைத்து முத்துவை அவமானப்படுத்தி உள்ளார் சத்தியா. 

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சத்யா ஹாஸ்பிடலில் இருக்க அவரது அம்மா சாப்பிட என்ன கொடுக்க சொன்னாங்க என்று சீதாவிடம் கேட்க இப்போதைக்கு கஞ்சி மட்டும் கொடுக்க சொல்லி இருக்காங்க என்று கூறுகிறார். 

பிறகு மீனா உள்ளே வர மாப்பிள்ளைக்கு சொல்லிட்டியா வந்துட்டு இருக்காரா என்று கேட்க சொல்லிட்டேன் சவாரிக்கு போய் இருக்கிறதா சொன்னாரு ரொம்ப தூரம் போயிருக்காரு என்று சொல்ல சரி அவர் மட்டும் என்ன பண்ணுவாரு அவர் வேலையை கெடுக்காத பொறுமையா வரட்டும் என்று சொல்கிறார். அதன் பிறகு அவரது அம்மா துணியையும் கஞ்சியையும் எடுத்து வர வீட்டுக்கு கிளம்பி செல்கிறார். 

பிறகு மீனா வீட்டுக்கு வர அண்ணாமலை உன் தம்பிக்கு எப்படி இருக்கு என்ன ஆச்சு என்று கேட்க பைக்கில் இருந்து கீழே விழுந்துட்டானாம் என்று சொல்ல மனோஜ் உன் தம்பிக்கு தான் பைக் கிடையாது திருட்டு பைக்கா என்று கேட்டு அவமானப்படுத்துகிறார். அண்ணாமலை மனோஜை திட்ட விஜயா அவன் என்ன தப்பா கேட்டுட்டான். முத்துவோட பைக்கை திருடன் வந்தவன் என்று சொல்ல இரண்டு பேரும் கொஞ்சம் அமைதியா இருங்க என்று அண்ணாமலை கோபப்படுகிறார். இடையில் ஸ்ருதி வேற மீனா உங்க தம்பி திருடனா என்று கேட்கிறார். 

பிறகு முத்து வெளிய வர நீங்க வீட்டுக்கு வந்துட்டீங்களா அப்புறம் எதுக்கு ஹாஸ்பிடல் வரல என்று கேட்க அவன் தேவையில்லாத வேலை பண்ணிட்டு போய் கீழ விழுந்து வருவான் நான் வந்து பார்க்கணுமா என்று கோபப்பட மீனா அதிர்ச்சி அடைகிறார். இங்க வருவீங்கனு அம்மா எதிர்பார்த்துட்டு இருந்தாங்க. மூணு பொம்பளைங்க என்ன பண்றதுன்னு தெரியாம தவிச்சுக்கிட்டு இருந்தோம் என்று சொல்ல காலேஜ் போற பையன் காலேஜ் போறானா என்ன பண்றானு பாக்கணும் அப்படியே விட்டா இப்படித்தான் நடக்கும் என்று கோபப்பட அவ இப்போ ஒழுங்கா தான் இருக்கா என்று மீனா சொல்ல கிழிச்சான் என்று கோபப்படுகிறார். உண்மையையும் சொல்ல முடியாமல் தவிக்க அண்ணாமலை நீ பண்ணது ரொம்ப தப்பு என்ன இருந்தாலும் அவன் உன்னுடைய மச்சான். அந்த குடும்பத்துக்கு அப்பாவா இருக்க வேண்டியது நீதான் நாளைக்கு காலைல முதல் வேலையா நீ போய் அவனைப் பார்த்து ஆறுதலா பேசிட்டு வா என்று சொல்ல முத்து முதலில் சவாரி இருக்கு என்று சொல்கிறார். பிறகு அண்ணாமலை சவாரியை அப்புறம் பாத்துக்கலாம் என்று திட்ட முத்துக்கு போயிட்டு வருவதாக கூறுகிறார்.

அதைத் தொடர்ந்து ஹாஸ்பிடல் மீனாவின் அம்மா போன் பேச வெளியே போக சீதா மாத்திரை வாங்க மெடிக்கல் ஷாப் செல்ல அங்கு வரும் முத்து கை எப்படி இருக்கு என்று கேட்க அதான் உடைச்சு விட்டீங்களே அப்புறம் எதுக்கு வந்தீங்க என்று சத்தியா பேச நீ பண்ண வேலைக்கு வேற என்ன பண்ணுவாங்க என்று கேட்க சத்தியா என் பிரண்டு மேல கைய வச்சா சும்மா இருக்க சொல்றீங்களா? என்று திமிராக பேசிக் கொண்டிருக்க நான் உன்னை அடிச்சது அதுக்காக இல்லை, உன் வீட்டுக்கு உன்ன பாக்க வந்தேன் காலேஜ் போனேன் நீ ரெண்டு மூணு நாளா காலேஜ் வரவில்லை என்று சொன்னார்கள். ஆமா கட் அடிச்சுட்டு வெளியே சுத்த போனேன், அதுல என்ன இருக்கு அது என்ன பெரிய தப்பா? என்று நக்கலாக பேசுகிறான். 

முத்து கோபப்பட்டு வீடியோவை காண்பிக்க சத்தியா கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாமல் ஆமா நான் தான் பண்ணேன் அதுக்கு என்ன இப்ப என்று கேட்க முத்து திருட்டு வேலை பண்ணிட்டு தப்பே பண்ணாத மாதிரி பேசுற என்று கோபப்பட இதில் என்ன தப்பு இருக்கு அன்னைக்கி உங்க வீட்டுக்கு வந்திருந்தபோது உங்க அம்மா என் மேல திருட்டு பட்டம் கட்டுனாங்க அதனால தான் அப்படி பண்ணேன் என்று சொல்கிறார். அதுக்கு பதிலா நீங்க கைய ஒடைச்சிட்டீங்க அதோட எல்லாம் சரியா போச்சு விடுங்க என்று சொல்ல முத்து தப்பு பண்ணிட்டேன்னு பார்த்தா திமிரா பேசிகிட்டு இருக்க என்று சொல்ல சத்யா இப்ப என்ன உங்க கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கணுமா என திமிரா பேசுகிறான். 

உங்க அம்மா உன் மேல பெரிய நம்பிக்கை வைத்திருக்காங்க, உங்கள் அக்கா என் தம்பி நல்லா படிச்சு பெரிய இடத்துக்கு வரணும்னு ரொம்ப ஆசையோட இருக்கா அவங்களுக்கு எல்லாம் தெரிஞ்சா எவ்ளோ கஷ்டப்படுவாங்க என்று முத்து சொல்ல ஏழையா பிறக்குறது தப்பு கிடையாது ஏழையா சாகிறது தான் தப்பு. எனக்கு புடிச்ச மாதிரி வாழ்க்கையை நான் வாழ போறேன் நீங்க பணம் தான் எல்லாம். 

உங்க வீட்லயே பணக்கார மருமகளை எப்படி நடத்துறாங்க எங்க அக்காவ உங்க அம்மா எப்படி நடத்துறாங்க, ஏன் உங்களுக்கே உங்க வீட்ல மரியாதை இருக்கா. சாதாரண டிரைவர் தானே நீ உன்னால என் அக்காவுக்கு ஒரு நகை வாங்கி பாட முடிஞ்சதா தாலியை இப்பதான் எடுத்துக் கொடுத்து இருக்கேன் இன்னும் எல்லா நகையும் வாங்கி கொடுக்க 20 வருஷம் ஆகும் என அவமானப்படுத்த முத்து நூறு வருஷம் கூட ஆகட்டும் நான் நேர்மையா உழைச்சு வாங்கி தருவேன் என்று சொல்ல அக்கா வீட்டுக்காரர் மரியாதையா பேசிக்கிட்டு இருந்தேன். தேவை இல்லாமல் எனக்கு அட்வைஸ் பண்ற வேலையெல்லாம் தேவையில்லை போயா என்று சத்யா முத்துவை அவமானப்படுத்துகிறான். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.