ஸ்ருதியை வெளுத்து வாங்கியுள்ளார் முத்து.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அண்ணாமலை ஹாஸ்பிடலில் இருக்கும் விஷயம் முத்துவுக்கு தெரிய வர அவர் செல்வத்தை கூட்டிக்கொண்டு பதறியடித்து ஓடுகிறார். அவருக்கு ஸ்டண்ட் வச்சதால் கொசு மருந்து அடிச்சது அலர்ஜி ஆகி இந்த மாதிரி ஆகி இருக்கு பயப்பட வேண்டிய மாதிரி எதுவும் இல்லை என கூறுகின்றனர்.
சரியான நேரத்தில் வந்து ஹாஸ்பிடலில் அட்மிட் செய்ததால் பெரிய பிரச்சனை இல்லை என்று சொல்லி 15 ஆயிரம் பணத்தை கட்ட சொல்ல முத்து பணத்துக்கு என்ன செய்வது என தவிக்க மீனா தாலியை கொடுக்க முயற்சிக்க முத்து வேண்டாம் என்று கூறிவிடுகிறார். செல்வம் டீயூவ் கட்ட வைத்திருந்த பணத்தை எடுத்துக் கொடுத்து ஹாஸ்பிடல் பில்லை கட்டுகிறார்.
ஹாஸ்பிடல் வந்த விஜயா எல்லாத்துக்கும் காரணம் மீனா தான் என்று சத்தம் போட கொசு மருந்து அடித்தது ஸ்ருதி என்ற விஷயம் தெரிய வந்ததும் வாயை பொத்திக் கொள்கிறார். பிறகு ரவி மற்றும் மனோஜ் வர முத்து ரவியை பிடித்து திட்டுகிறார். மரியாதையா உன் பொண்டாட்டிய கூட்டிட்டு வீட்டை விட்டு வெளியே போயிடு என்ன வேலை பண்ணி வச்சிருக்கு அந்த பொண்ணு என கோபப்படுகிறார். ரவியும் ஸ்ருதியின் செயலால் கடுப்பாகிறார்.
அதன் பிறகு அண்ணாமலையை வீட்டுக்கு அழைத்து வர சுருதி அதுக்குள்ள அனுப்பிட்டாங்களா அப்போ பெரிய பிரச்சனை இல்ல என்று பேச முத்து கோபப்பட்டு திட்ட என்னை எதுக்கு திட்டிட்டு இருக்கீங்க இது எதிர்பாராதவிதமாக நடந்த விபத்து என கூறுகிறார். அவருக்கு கொசு மருந்து ஆகாதுன்னு எனக்கு எப்படி தெரியும் நான் எல்லாரும் நல்லா இருக்கணும் டெங்கு மலேரியால வந்துட கூடாதுன்னு தான் அடிச்சேன் என்று சொல்ல முத்து நீ வேணும்னே தான் அடிச்சி இருப்ப விஷம் என்று கோபப்படுகிறார்.
இதனால் முத்துவுக்கும் சுருதிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட சுருதி ரவியை அமைதியா இருக்க சொல்லு என்று கோபப்படுகிறார். ரவி நீ அமைதியா இரு என்று ஸ்ருதியிடம் கோபப்பட இந்த வீட்ல எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைச்சது என்னுடைய தப்புதான் என்று ரூமுக்குள் சென்று விடுகிறார்.
அதன் பிறகு ரவி அண்ணாமலையிடம் மன்னிப்பு கேட்க நீ எதுக்குடா சாரி சொல்ற அதான் எனக்கு ஒன்னும் ஆகலல, போய் உன் பொண்டாட்டிய சமாதானப்படுத்து என அனுப்பி வைக்கிறார். பிறகு முத்து கட்டிலை எடுத்து சென்று ரூமுக்குள் போட்டு அண்ணாமலையை அங்கே அனுப்பி வைத்து விடுகிறார்.
இங்கே ரவிக்கும் சுருதிக்கும் இடையே வாக்குவாதம் உருவாக செஞ்ச தப்ப ஒத்துக்க ஏத்துக்க முடியல, அவ்வளவு திமிரா இருக்க என்று ரவி சொல்ல சுருதி வேக வேகமாக வந்து அண்ணாமலையிடம் மன்னிப்பு கேட்கிறார். திரும்பவும் வாக்குவாதம் வர ஒருவரை ஒருவர் தாக்க கையில் கிடைப்பதை எடுத்துக் கொள்ள பிறகு நீயும் அடிக்க வேண்டாம் நானும் அடிக்க வேண்டாம் என்று சொல்லி பொருளை கீழே வைத்து சமாதானத்திற்கு வருகின்றனர்.
அடுத்து வெளியான ப்ரோமோ வீடியோவில் விஜயாவிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தை அடித்தது மீனாவின் தம்பி சத்யா தான் என்பது தெரிய வருகிறது.