மீனாவால் முத்துவுக்கு சோதனை வந்துள்ளது. 

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி விஜயாவுக்கு ஃபேஸ் பேக் போட்டு விட்ட சுடுதண்ணி எடுத்து வந்த மீனா அதை பார்த்துவிட்டு எனக்கு இது முகத்தில் ஏதோ பூசி வச்சிருக்கீங்க என்று கேட்க விஜயா இதெல்லாம் அவளுக்கு தெரியாது மா என்று மீனாவை திட்டி வெளியே அனுப்புகிறார். 

அதனைத் தொடர்ந்து ரூமுக்குள் குளிர் தெரியணும் ஏசி ஆப் பண்ண வேர்க்குது என சுருதி மீண்டும் ஆன் பண்ண இருவரும் இப்படியே மாறி மாறி ஆப் ஆன் செய்து சண்டை போட ட்ரிப்பாகி வீட்டில் கரண்ட் கட் ஆகிறது. இதைடுத்து மீனா மெழுகுவர்த்தி ஏற்ற முத்து தண்ணீர் குடிக்க கீழே வர விஜயா ஃபேஸ் பேக்கோடு வந்து நிற்பதை பார்த்து முத்து பயந்து அலறுகிறார். 

இந்த சத்தம் கேட்டு எல்லோரும் வெளியே வர மனோஜ் மற்றும் ரோகிணியும் விஜயாவை பார்த்து அலறுகின்றனர். விஜயா பேய் மாதிரி இருப்பதாக சொல்கின்றனர். பிறகு முத்து பியூஸ் செக் பண்ணி ட்ரிப் ஆகி இருப்பதை சரி செய்து யாரு சுவிட்சை ஆன் பண்ணி ஆன் பண்ணி ஆப் பண்ணி இருப்பாங்க என்று சொல்ல ரவி அதை கரண்ட் வந்துடுச்சுல்ல விடுங்க என்று சமாளிக்கிறார். 

பிறகு இவர்கள் ரூமுக்கு வந்து திரும்பவும் உன்னாலதான் என்று சண்டை போட விஜயா இதை கேட்டு விடுகிறார். மறுநாள் காலையில் முத்து மீனா மார்க்கெட்டுக்கு பூ வாங்க வர முத்து ஆட்டோவ வெளியே போடறேன் என்று சொல்ல மீனா இங்கேயே போடுங்க நான் எல்லாத்தையும் எப்படி தூக்கிட்டு வருது? நான் வர ஆட்டோக்காரர் அண்ணா இங்கதான் நிறுத்துவாரு என்று சொல்ல முத்து வேறு வழியின்றி அங்கே நிற்க டிராபிக் போலீஸ் வந்து பைன் போடுகின்றனர். 

எல்லாம் உன்னால தான் என்று முத்து மீனாவிடம் கோபப்பட நான் இங்கு நிறுத்த சொன்னா இங்கேயே நிறுத்திப்பீங்களா போலீஸ பார்த்ததும் அப்படி தள்ளி நிறுத்த வேண்டியதுதானே? ஆட்டோக்கார அண்ணா எங்கள இங்க யாருக்கு விட்டு அப்படி தள்ளி தான் நிப்பாரு நாங்க வர்றதை பார்த்ததும் ஆட்டோ எடுத்துட்டு வருவாரு என்று சொல்ல இதெல்லாம் இப்ப சொல்லு என்று திட்டுகிறார். 

பிறகு ஆட்டோவில் வந்து கொண்டிருக்கும் போது ஒரு டீ கடையில் நிறுத்த சொல்ல நீ சொல்ற இடத்தை எல்லாம் நிறுத்த முடியாது என்று சொல்ல எனக்கு பசிக்குது என்று மீனா இறங்கி நீங்களும் நாங்க டீ சாப்பிடுங்க என்று கூப்பிட முத்து வரலை என அடம்பிடிக்க கடைக்காரர் சவாரியா வந்தவங்களே கூப்பிடுறாங்க நீ என்ன பா பிகுவ் பண்ற வா என்று கடைக்காரர் கூப்பிடுகிறார். 

பிறகு மீனா வடை வாங்கி முத்துவுக்கு கொடுக்க கடைக்காரர் அதை பார்த்து பொண்டாட்டி கூட புருஷனுக்கு இப்படி எல்லாம் செய்ய மாட்டாங்க ஆனா உனக்கு சவாரி வந்தவங்க செய்றாங்க நீ கொடுத்து வச்சவங்க என்று சொல்ல கடையில் இருந்த இன்னொருத்தர் அவங்க நிஜமாகவே புதுசா பொண்டாட்டி தாண்டா நீ வேலைய பாரு என பல்பு கொடுக்கிறார். 

இங்கே வீட்டில் விஜயா ரவிக்கும் ஸ்ருதிக்கும் ஏதோ பிரச்சனை நாம கேட்கணும் என்று அண்ணாமலை இடம் சொன்ன அவர் அதெல்லாம் கேட்காத என்று சொல்ல விஜயா இனிமே என்னால சும்மா இருக்க முடியாது நான் கேட்கிறேன் என்று சொல்லி வெளியே வந்ததும் ஒரு நிமிஷம் என நிறுத்தி எதையோ உளற‌ உங்களுக்கு என்ன ஸ்ரோக் வந்துச்சாண்டி ஹாஸ்பிடல் போலாமா என்று கேட்டு பல்பு கொடுக்கிறார் சுருதி. 

அதெல்லாம் இல்லமா உனக்கு ரவிக்கு ஏதாவது பிரச்சனையா என்று கேட்க ஸ்ருதி பதில் சொல்லாமல் நிற்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.