ஹாஸ்பிடல் சேர்க்கப்பட்ட கிருஷ்ஷை பார்க்க வந்து முத்து மீனாவிடம் சிக்கி உள்ளார் ரோகினி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசொட்டில் முத்து மற்றும் மீனா ஹாஸ்பிடலுக்கு வந்திருக்க டாக்டர் மாத்திரை கொடுத்து மூன்று நாளைக்கு ரெஸ்ட் எடுக்கணும்னு சொல்லி இருக்கிறார். இதை சொல்லிக் கொண்டே முத்து மீனா ஆஸ்பிட்டலில் இருந்து வெளிய வர ரோகிணியின் அம்மா கிரிஷ்ஷை கூட்டிக்கொண்டு கண்ணீருடன் வர இதைப் பார்த்து இவர்கள் ஷாக் ஆகின்றனர்.

இருவரும் கிரிஷ்க்கு என்னாச்சு என்று கேட்க விளையாட்டுக்கு இருக்கும்போது வண்டிக்காரன் ஏத்திட்டு போயிட்டதாக சொல்கின்றனர். பிறகு டாக்டர் எமர்ஜென்சி வார்டுக்கு கூட்டி சென்று ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்று சொல்கிறார். முத்து மற்றும் மீனா இவர்களுடன் காத்திருக்கின்றனர்.

அதன் பிறகு ரோகினியின் அம்மா ரோகிணிக்கு போன் பண்ண மனோஜ் டேபிளில் போன் ரிங்காக ரோகிணி உனக்கு தான் போன் யாரென்று கேட்க நம்பரை பார்த்துவிட்டு ரோகிணி ஷாக் ஆகிறார். என்னோட கிளைண்டு தான் என்று சொல்லி சமாளித்து தனியாக சென்று எனக்கு போன் பண்ண கூடாதுன்னு சொல்லி இருக்கேன் இல்ல என்று கோபப்படுகிறார். கிரிஷ்ஷை ஹாஸ்பிடலில் சேர்த்து இருக்கேன் என்று அழுது கொண்டே சொல்ல ரோகிணி அதிர்ச்சி அடைகிறார்.

ரோகினி அவனுக்கு என்ன ஆச்சு என்று கேட்க நடந்த விஷயங்களை அறிந்து நான் உடனே கிளம்பி வரேன் என்று சொல்ல நீ இப்போ வர வேண்டாம் முத்துவும் மீனாவும் இங்கே இருக்காங்க என்று சொல்கிறார். அவங்க எப்படி அங்க? நீ போன் பண்ணி சொன்னியே என்று கேட்க இல்ல மீனாவுக்கு உடம்பு சரியில்லாமல் வந்திருக்காங்க என்று சொல்கிறார். அவங்க போனதும் போன் பண்றேன் அப்புறம் நீ கிளம்பி வா என்று சொல்லி ஃபோனை வைக்கிறார்.

மகனைப் பார்க்க வேண்டும் என்ற பதட்டத்தில் ரோகிணி கடை விளம்பரத்திற்காக சில பொருட்களை எடுத்துக்கொண்டு ஹாஸ்பிடலுக்கு கிளம்பி வருகிறார். நாங்க புதுசா ஹோம் அப்ளையன்ஸ் கடை திறந்திருக்கோம் ஹாஸ்பிடலுக்கு தேவையான பொருட்களை எங்க கடையில வாங்குங்க. இப்போதைக்கு இந்த பொருளை ஃப்ரியா தருவோம் என்று சொல்லி எல்லா குழந்தைகள் வார்டிலும் வைத்துக் கொண்டே வர கிரிஷ் ரூமுக்கு வரும்போது முத்து மீனா வெளியே வர அதை பார்த்து ரோகினி ஷாக் ஆகிறார்.

மீனா நீங்க என்ன இங்க என்று கேட்க நான் பிசினஸ் விஷயமா ஆஸ்பிட்டல்ல டீலிங் பேச வந்தேன் என்று சொல்லி சமாளிக்கிறார். ரோகினியின் ஐடியாவை கேட்ட முத்து இது கூட நல்லா தான் இருக்கு நீ வைக்கிற பொருளோட என்னோட விசிட்டிங் கார்டு வை கார் தேவைப்படுறவங்க எனக்கு போன் பண்ணுவாங்க என்று சொல்லி கார்டை கொடுக்கிறார்.

அதன் பிறகு நீங்க கிளம்பிட்டீங்களா என்று ரோகினி கேட்க இல்லை கேன்டீன் போய்ட்டு வரோம். கிரிஷ் கூட யாரும் இல்ல அவங்க பாட்டியும் ரொம்ப பயப்படுறாங்க. டாக்டர் என்ன சொல்றாருன்னு பாத்துட்டு கிளம்பறோம் என்று சொல்லி கேன்டின் செல்கின்றனர். அடுத்ததாக உள்ளே வந்த ரோகினி கிரிஷ்ஷை பார்த்து அழுது புலம்புகிறார். உன் விஷயத்துல என்னால எதுவுமே பண்ண முடியல என்று கண் கலங்க அவரது அம்மா சீக்கிரம் உன் வீட்டில் கிரிஷ்ஷை பத்தி பேசு என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.

பிறகு ரோகிணி வெளியே வர மீனா அவரை பார்த்துவிட்டு உங்க வேலை முடிஞ்சிடுச்சா என்று கேட்கிறார். நீங்க வீட்டுக்கு கிளம்பலையா என்று ரோகிணி திரும்பவும் கேட்க நாங்க கொஞ்ச நேரம் இருந்துட்டு போறோம் என்று சொல்கின்றனர். முத்து துபாய்ல அப்படி அந்த பொண்ணுக்கு என்ன தன் வேலை. குழந்தையையும் அம்மாவையும் விட்டுட்டு அப்படி வெளிநாட்டுல சம்பாதிக்க என்ன அவசியம் இருக்கு. அந்த பொண்ணு மட்டும் வந்தா அப்படியே நாலு அடி கொடுக்கணும் என்று கோபப்பட அது எதுக்கு உங்களுக்கு இன்று ரோகிணி கேள்வி கேட்டு சிக்கி கொள்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.