ரூம் கிடைத்தும் ஹாலுக்கு துரத்தப்பட்டுள்ளனர் மனோஜ் மற்றும் ரோகிணி. 

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மீனா ரூமுக்குள் வர விஜயா ரோகினி எங்கே என்று கேட்க அவங்க சாப்பிட்டு இருக்காங்க வருவாங்க நீங்க படுத்து தூங்குங்க என்று சொல்கிறார். தராதரம் இல்லாதவங்க கூட எல்லாம் படுத்து தூங்க வேண்டியது தான் இருக்கு என்று விஜயா தொல்ல மீனா தலையில் பாயை விரித்து போட்டு எனக்கு கீழ படுத்தா தான் தூக்கம் வரும் நீங்க மேல படுத்துக்கோங்க என்று படுத்துக் கொள்கிறார். 

அதன் பிறகு ரோகினி ரூமுக்கு வர அவரிடம் மீனாவை பற்றி தரக்குறைவான பேசி நீ வந்து படுமா என்று படுத்துக் கொள்ள சொல்கிறார். மறுபக்கம் முத்து தரையில் பாயை விரித்து போட்டு படுக்க அண்ணாமலை நீயும் மேல வந்து படு என்று கூப்பிட மனோஜ் மூணு பேர் எல்லாம் படுத்த சரியா இருக்காது என்று சொன்னதும் முத்து நான் கீழ படுத்துகிறேன் நீ நல்லா தூங்கு பா என்று சொல்கிறார்.

ஒரு பக்கம் முத்து கதை சொல்றேன் என்று மனோஜை தூங்க விடாமல் செய்ய மறுபக்கம் விஜய் குறட்டை விட்டு ரோகினியை தூங்க விடாமல் செய்கிறார். ரோகிணி தூங்க முடியாமல் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வர மனோஜ் ஏற்கனவே டைனிங் டேபிள் அருகே உட்கார்ந்து இருப்பதை பார்க்கிறார். 

ரோகிணியை பார்த்த மனோஜ் நீ என்ன வெளியே வந்துட்ட என்று கேட்க உங்க அம்மாவோட குறட்டை சத்தத்துல தூங்க முடியல என்று சொல்கிறார். மனோஜிடம் நீ எதுக்கு வெளியே வந்துட்ட என்று கேட்க இந்த முத்து பேசிக்கிட்டே இருக்கான். தூக்கமே வரல என்று சொல்கிறார். கடைசியா திரும்பவும் வந்த இடத்தில் வந்துட்டோம் இன்னைக்கு வெளிய தான் படுத்து தூங்கணுமா என்று வருத்தப்பட்டு பாயை விரித்து படுக்கின்றனர். 

மறுநாள் காலையில் மீனா லேட்டாக எழுந்து வர விஜயா மகாராணிக்கு இப்பதான் தூக்கம் போச்சா என்று சத்தம் போடுகிறார். டைம் என்ன ஆகுது எல்லாரும் வேலைக்கு கிளம்புவாங்க சாப்பாடு செய்யணும்னு உனக்கு தெரியாதா என்று கோபப்பட மீனா எனக்கு உடம்பு முடியல உனக்கு ஒரு நாளாச்சு அவங்க அவங்க அவங்களுக்கு தேவையானது சமைச்சுக்கலாம் இல்ல என்று சொல்கிறார். 

என்னடி நீ எனக்கு ஆர்டர் போடுறியா என்று சத்தம் போட அண்ணாமலை அவர் தான் உடம்பு முடியலன்னு சொல்ற இல்ல இன்னைக்கு ஒரு நாள் வேற ஏதாவது சமைக்க வேண்டியது தானே என்று கேட்க அவ நடிக்கிறா என்று பேசுகிறார். 

பிறகு மனோஜ், ரோகினி வந்து சாப்பாடு கேட்க இன்னும் சமைக்கவே இல்ல என்று சொல்ல நாங்க பிசினஸ் பண்றோம் சரியா தூங்கவும் முடியாமல் சாப்பிடவும் முடியாமல் போன எப்படி என்று மனோஜ் கேள்வி கேட்கிறார். பிறகு ரவி ஸ்ருதி வந்துவிட நாங்க கிளம்பனும் சாப்பிடலாமா என்று கேட்க இன்னும் இவ சமைக்கவே இல்ல என்று விஜயா சொல்கிறார். அண்ணாமலை மீனாவுக்கு உடம்பு முடியல என்று சொல்ல ஏண்டி நான் என்ன ஆச்சு அப்படின்னா இன்னும் ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதானே என்று சொல்கிறார். அண்ணாமலை மீனா மட்டும்தான் சமைக்கணுமா இந்த வீட்ல மத்த ரெண்டு மருமகள் இருக்கீங்கல என்று சொல்ல ஸ்ருதி ஐயோ அங்கிள் எனக்கு சமைக்கலாம் தெரியாது அதனால தான் நானே ஒரு செஃப்பை கல்யாணம் பண்ணிக்கிட்டு இருக்கேன் என்று சொல்கிறார். ரவி அப்போ எதுக்காக தானா கல்யாணம் பண்ணிக்கிட்டியா என்று கேட்க ஸ்ருதி அதுக்காகவும் தான் என்று சொல்கிறார். சரி நாங்க ரவியோட ரெஸ்டாரன்ட்ல சாப்பிட்டுக்கிறோம் என்று கிளம்பி செல்கின்றனர். 

அண்ணாமலை ரோகிணியிடம் நீயாவது சமைக்க கூடாதா என்று கேட்க இல்ல அங்கிள் எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு. நாங்கள் வெளியே சாப்பிடுகிறோம் என்று சொல்லி கிளம்பி செல்ல விஜயா பாரு நாலு பேரை வெறும் வயித்தோட போய் இருக்காங்க இப்போ உனக்கு சந்தோஷமா.? அவங்க வெளிய போய் சாப்பிட்டுப்பாங்க நாம எங்க போய் சாப்பிடுவது? இன்று கோவப்பட முத்து இனிமே மீனா யாருக்காகவும் சமைக்க மாட்டா.. உனக்காக மட்டும்தான் சமைப்பா.. மத்தவங்களுக்கு தேவையானதை அவங்களையே சமைச்சுக்க சொல்லு என்று ஷாக் கொடுக்கிறார். 

இதையடுத்து மீனா கிச்சனுக்கு போய் வேலைகளை செய்ய முத்து நினைத்த விட காய்ச்சல் அதிகமா இருக்கு என்று ஹாஸ்பிடல் கிளம்ப சொல்லி கூட்டிச் செல்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.