முத்து மீனாவுக்கு எதிராக கூட்ட சேர்ந்து பிளான் போட்டுள்ளார் விஜயா. 

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் ரோகினி ரூமுக்கு வந்து மலேசியா மாமாவிடம் நாளைக்கு உங்களுக்கு போன் வரும் உங்க பொண்டாட்டிக்கு உடம்பு சரியில்லன்னு சொல்லுவாங்க என்று சொன்னதும் எனக்கு ஜோடியா சொல்லவே இல்ல யார் அந்த ஆர்டிஸ்ட் என்று கேட்கிறார். 

ரோகிணி என் கோபத்தை கிளறாமல் கேளுங்க என்று நாளைக்கு போன் வரும் அந்த போன் வந்ததும் நீங்க ரொம்ப டென்ஷன் ஆகணும் மத்ததெல்லாம் நான் பாத்துக்குறேன் நீங்க பேக்கை தூக்கிட்டு ஊருக்கு கிளம்பிட்டே இருக்கணும் என்று சொல்கிறார். அப்ப மணிரத்தினம் படம் வாய்ப்பு என்று கேட்க பொய் என் பிரண்டு வித்யாவை பாருங்க அவ வாய்ப்பு வாங்கி கொடுப்பா என சொல்கிறார்.  

அதன் பிறகு மறுநாள் காலையில் விஜயா காபி போட்டு கொண்டு வர அண்ணாமலை காபியா கொடு நானே கேட்கலாம் இருந்தேன் என்று சொல்ல இது உங்களுக்கு இல்ல சம்பந்திக்கு என்று நேராக மலேசியா மாமா ரூமின் கதவை தட்டுகிறார். 

வெளியே வந்த அவரும் காபியை வாங்கிக்கொண்டு இன்றைக்கு என்ன சமையல் என கேட்க நேற்று எல்லாம் சைவம் இன்னைக்கு அசைவம் ஆட்டை வெட்ட சொல்லி இருக்கோம் என்று சொல்ல வெட்டியாச்சா, பீஸ் சைசு தான் ரொம்ப முக்கியம் என சொல்கிறார். 

அதன் பிறகு விஜயா என்னென்ன சமைக்கிறோம் என்று லிஸ்ட் சொல்ல மலேசியா மாமா ஆவலோடு சாப்பிட தயாராக நீ பார்த்த தோழி ஒரு போன் வந்தது போல பதறி அடித்து உள்ளே ஓடி வருகிறார். என்னம்மா என்ன ஆச்சு என்று கேட்க ஒரு நிமிஷம் ஆன்ட்டி என்று போனை பேசிவிட்டு மாமாவிடம் ஆண்ட்டிக்கு உடம்பு சரி இல்லையாம் என்று சொல்ல அவர் விஜயாவிடம் ஆன்ட்டி உங்களுக்கு உடம்பு சரியில்லையா என்று கேட்க நம்ப ஆன்ட்டிக்கு உங்க ஃவைப்புக்கு மறந்துட்டீங்களா என்று கேட்கிறார். 

மலேசியா மாமா நேத்து பேசினோம்ல மறந்துட்டேன் என்று சொல்ல முத்து என்ன பேசினீங்க என்று கேட்க அவங்களையும் கூட்டிட்டு வந்து இருக்கலாம் என்று பேசினோம் என்று சொல்கிறார். பிறகு ரோகினி உங்கள உடனே ஊருக்கு கிளம்பி வர சொல்றாங்க என்று சொல்ல மாமா எனக்காக விதவிதமா சமைச்சு இருக்காங்க சாப்பிட்டு நாளைக்கு காலையில கிளம்பறேன் என்று சொல்கிறார். 

ரோகினி அவரது காலை மிதிச்சு கிளம்ப சொல்ல மலேசியா மாமா ஊருக்கு கிளம்பி செல்கிறார். அதன் பிறகு ரோகிணி நாமளும் ஊருக்கு கிளம்பலாம் என்று சொல்ல விஜயாவும் ஆமா இனிமே நமக்கும் என்ன வேலை இருக்கு கிளம்பலாம் என்று சொல்ல பாட்டி இன்னும் ரெண்டு நாள் இருந்து தான் போகணும், போர் அடிக்காம இருக்க நிறைய விளையாட்டுகளை ஏற்பாடு பண்ணி வச்சிருக்கேன் என்று சொல்கிறார். 

பிறகு ஸ்ருதி முத்து சும்மா சும்மா நம்மள அவமானப்படுத்திட்டே இருக்காரு இந்த போட்டியில் அவர் ஜெயிக்க விடக்கூடாது நாம தான் ஜெயிக்கனும் என்று ரவியிடம் பேசுகிறார். 

மறுபக்கம் ரோகினி மனோஜிடம் அந்த முத்து மீனாவை ஜெயிக்கவே விடக்கூடாது. ஒவ்வொரு முறையும் அவங்க கிட்ட தோத்துகிட்டே தான் இருக்கிறோம் இந்த முறை நாம தான் ஜெயிக்கணும் என சொல்கிறார். 

அண்ணாமலை முத்து மீனாவுக்கு இதெல்லாம் பழக்கம் உண்டு அதனால அவங்க தான் ஜெயிப்பாங்க என்று சொல்ல விஜயா அவங்க புராணத்தை ஆரம்பிச்சிட்டீங்களா என்று சலித்துக் கொண்டு மனோஜ், ரவி, ஸ்ருதி மற்றும் ரோகினியிடம் அந்த முத்து, மீனா ஜெயிக்கவே கூடாது நீங்க தான் ஜெயிக்கணும். நீங்க ஜெயிக்கிறதுல தான் என்னுடைய கௌரமே இருக்கு என கூறுகிறார். 

இன்னொரு பக்கம் முத்து மீனாவிடம் போட்டிக்கு ரெடியா? நாம தான் ஜெயிக்கணும் என்று சொல்ல யார் ஜெயிச்சா என்னங்க குடும்பமா சேர்ந்து விளையாட போறோம் அதுவே பெரிய சந்தோஷம்தான் என்று சொல்ல பாட்டி மீனாவோட மனசு இங்கு யாருக்குமே இல்ல என நினைக்கிறார். 

உடனே ஒரு பிளானை போட்டு எல்லாரையும் கூப்பிட்டு பெண்கள் எல்லாம் ஒரு டீம் ஆண்கள் எல்லாம் ஒரு டீம் என பிரிக்கிறார். பெண்கள் டீமுக்கு அண்ணாமலை தலைவராகவும் ஆண்கள் டீமுக்கு விஜயாவை தலைவராகவும் நிர்ணயிக்கிறார். 

அதன் பிறகு உரியடி போட்டி தொடங்க முதலாவதாக மனோஜ் களத்தில் இறக்க அவர் எல்லோரிடமும் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு கம்பை எடுத்துக்கொண்டு நேராக பானையை உடைக்க ஓட அவரைப் பிடித்து கண்ணை கட்டி சுத்தி விடுகின்றனர். மனோஜ் பானையை தேடி தடுமாறுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.