பணத்தை ஆட்டையை போட்ட மனோஜ், மறுபக்கம் மீனாவுக்கு முத்து அதிரடி கண்டிஷன் போட்டுள்ளார். 

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் முத்து பயங்கர கோபத்தில் உட்கார்ந்து இருக்க மீனா ரூமுக்குள் வந்ததும் உங்க அம்மா வீட்டுக்கு போனியா என்று கேட்க ஆமா என்று சொல்ல யாரை கேட்டு போன என்று முத்து கேள்வி கேட்க யாரு கேட்கணும் என மீனா பதில் கொடுக்கிறார். 

நான் உன்னை போக சொன்னேனா உன் தம்பிக்கு போய் அட்வைஸ் பண்ண சொன்னா அப்புறம் எதுக்கு அவன் என்கிட்ட வந்து சத்தம் போட்டுட்டு போறான்? நான் யார்கிட்டயும் இவ்வளவு பொறுமையா இருந்ததில்லை உன் தம்பி என்னுடைய பொறுமையை ரொம்ப சோதிக்கிறான் என்று சொல்ல என்னங்க ஆச்சு அவன் எதுக்கு உங்கள பார்க்க வந்தான் என்று கேள்வி கேட்கிறார். 

உடனே முத்து உண்மையை சொல்ல முடியாமல் அது போய் உன் தம்பி கிட்டயே கேளு இனிமே நீ அந்த வீட்டுக்கு போகாத என்று சொல்ல அப்ப நான் எங்க அம்மாவையும் சீதாவையும் எப்படி பார்க்கிறது என்று கேள்வி கேட்க அவங்கள இங்க வர வச்சு பேசு, இல்லையா கோவிலுக்கு போய் பாரு உன் தம்பி இருக்க வீட்டுக்கு போகாத என்று சொல்கிறார். என் மேல கொஞ்சமாச்சும் மரியாதை இருந்தா இதை செய் என்று சொல்லிவிட்டு முத்து வெளியே சென்று விட மீனா வருத்தப்பட்டு நிற்கிறார். 

பிறகு சத்யாவுக்கு போன் போட்டு நீ எதுக்கு மாமாவை போய் பார்த்த என்று கேள்வி கேட்க அதை அவர்கிட்டயே போய் கேளு என்று பதில் சொல்ல ரெண்டு பேருக்குள்ள என்ன பிரச்சனை என்று எனக்கு தெரியல, ஆனா உங்க ரெண்டு பேர் நடுவுல மாட்டிக்கிட்டு நான் தான் தவிக்கிறேன் என்று சொல்கிறார். இப்ப அவர் என்னை நம்ம வீட்டுக்கு போக கூடாதுன்னு சொல்லிட்டாரு என்று சொல்ல இப்ப நீ புருஷன் பேச்சை தானே கேட்கணும் ஞாபகம் வீட்டுக்கு வர வேண்டாம் நம்ம குடும்பத்தை நான் பாத்துக்கிறேன். எனக்கு இது சரின்னு தோணுதோ அதை தான் நான் செய்வேன் என்று சொல்லி போனை வைக்கிறார். 

பிறகு சுருதி ரவிக்கு தொடர்ந்து மெசேஜ் செய்து கொண்டே இருக்க பக்கத்திலேயே இருக்கும் ரவி இப்ப எதுக்கு தேவையில்லாம மெசேஜ் பண்ணிட்டு இருக்க என்று கோபப்பட நாம ட்ரிப் வருமா இல்லையா என்று கேள்வி கேட்க ரவி என்னால வர முடியாது என உறுதியாக சொல்லிவிடுகிறார். நானே சம்பாதிச்சு உன்னை கூட்டிட்டு போறேன் என்று சொல்ல இது நேரம் பார்த்து ஸ்ருதி நம்ம போன் பண்ணுகிறார். 

ஸ்ருதி அவரிடம் அவன் வரலைன்னு சொல்லிட்டா மா நீங்க ரெண்டு பேரும் போய்ட்டு வாங்க அவனே சம்பாதிச்சு கூட்டிட்டு போறானாம். அப்படின்னா 50 வருஷம் கழிச்சு தான் நாங்க ஹனிமூன் போவோம். உடனே போனும்னா ரெண்டு பேர் மட்டும் போவாங்க பாருங்க கட்டுமரம் அதுல தான் போகணும் என்று சொல்லி ஃபோனை வைக்க ரவி உனக்கு கூட என் மேல நம்பிக்கை இல்ல-ல என்று கோபப்பட்டு எழுந்து வெளியே சென்று விடுகிறார். 

மறுநாள் மனோஜ் விஜயாவிடம் வேலையை விட்டுட்டேன் இன்னைக்கு வேற ஒரு கம்பெனிக்கு இண்டர்வியூ போக போறேன் இது பெரிய வேலை என்று சொல்லி பணத்தைக் கேட்க விஜயா என்னிடம் பணம் இல்லை என்று சொல்லிவிடுகிறார். அவர் கிச்சனுக்கு சென்றதும் மனோஜ் ரூமுக்குள் சென்று அண்ணாமலையின் பாக்கெட்டில் இருந்த 300 ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு வந்து விடுகிறார். 

பிறகு அண்ணாமலை பாக்கெட்டில் வைத்த பணத்தை காணவில்லை என்று விஜயாவிடம் கேட்க விஜயா மனோஜ் தான் பணத்தை எடுத்தான் என்பதை அறிந்து கொண்டு நீங்க வெளிய போனபோது செலவு பண்ணி இருப்பீங்க என்று சமாளிக்கிறார். அண்ணாமலை இல்லை நான் பாக்கெட்ல தான் வச்சேன் என்று உறுதியாக சொல்ல உங்களுக்கு வயசாகிடுச்சு, ஞாபகம் இல்லாம போயிருக்கும் என்று சொல்ல மனோஜ் நைசாக வெளியே செல்ல அண்ணாமலை பிடித்து நிறுத்தி சில்லறை கேட்க என்கிட்ட காசு இல்லப்பா அக்கவுண்ட்ல தான் இருக்கு என அளந்து விட்டு எஸ்கேப் ஆகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.