மலேசியா மாமா முத்துவை சிக்க வைக்க ரோகினிக்கு அதிர்ச்சி தகவல் ஒன்று கிடைக்க அதிரடி டிராமா ஒன்றை களம் இறக்க உள்ளார். 

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் பித்து பிடித்தது போல உக்காந்திருக்க விஜயா உனக்கு என்னடா ஆச்சு என்று கேட்க ரோகினியும் மனோஜ் ஏன் பேசாம இருக்கீங்க என்னாச்சு என்று கேட்க ரவி வந்து பார்த்து குடிச்சிருக்கான் மா என்று சொல்ல இன்னொரு அதிர்ச்சி அடைகின்றனர். 

அதனைத் தொடர்ந்து முத்து தான் குடிக்க வச்சிருப்பான் என்று விஜயா தவறாக புரிந்து கொண்டு முத்துவை திட்ட நான் ஒன்னும் பண்ணல என்று முத்து சொல்ல ரோகினியும் குடிக்க வந்தால் நீங்கள் மட்டும் குடிக்க வேண்டியது தானே அவரை எதுக்கு குடிக்க வச்சீங்க என்று கோபப்பட மலேசியா மாமாவும் குடிச்சி இருப்பது தெரிந்து அங்கே போய் சத்தம் போடுகிறார். 

மனோஜ் எதுக்கு குடிக்க வச்சீங்க என்று கேட்க மலேசியா மாமா நானும் வேணான்னு தான் சொன்னேன் முத்துவும் அவனுடைய பிரண்ட்ஸும் தான் சேர்ந்து மாப்பிள்ளைக்கு ஊத்தி விட்டுட்டாங்க என்று பிளேட்டை திருப்பி போட எல்லோரும் முத்துவை பிடித்து திட்டுகின்றனர். பாட்டி குடும்பமா சந்தோஷமா இருக்கணும்னு சொல்லி வாய மூடல அதுக்குள்ள இப்படி பண்ணிட்டியே டா என போட்டு அடிக்கிறார். 

அண்ணாமலை இதெல்லாம் பார்த்தா அவ மனசு கஷ்டப்பட மாட்டானா அவனை நிம்மதியாவே இருக்க விட மாட்டீங்களா என்று கோபப்படுகிறார். செல்வம் உண்மையை சொல்ல வர முத்து வேண்டாம் என தடுத்து விடுகிறார். 

பிறகு ரோகிணி மனோஜை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போகலாம் என்று சொல்ல இப்ப என்ன அவன பேச வைக்கணும் அவ்வளவுதானே என்று சொல்லி முத்து மோர் கொடுக்க அதை குடித்த மனோஜ் மோர்ல உப்பு கம்மியா இருக்கு என பேச தொடங்குகிறார். 

பிறகு விஜயாவை பார்த்ததும் மாமா நீ மட்டும் தான் என் மேல ரொம்ப பாசமா இருக்கிறது என ஓடிப்போய் கட்டி பிடிக்க நாத்தம் தாங்காமல் பிடித்து தள்ளி விடுகிறார். பிறகு ரவியை பிடித்து என் தம்பி கல்யாணத்துக்கு என்னை கூப்பிடாம விட்டுட்டியேடா என்ன புலம்புகிறார்.

பாட்டியை பார்த்தது பிடித்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து அலப்பறை செய்ய ரோகினியை கண்டதும் கட்டிப்பிடித்து காலில் விழுந்து கதறுகிறார். நான் சீக்கிரம் ஏதாச்சு வேலைக்கு போயிடுறேன் என்னை விட்டு போயிடாத என புலம்புகிறார். பிறகு ரோகிணி மனதை ரூமுக்கு அழைத்துச் சென்று அடி வெறுக்கிறார். 

மனோஜ் அந்த மாதிரி நல்லா இருந்துச்சு ஒன்ஸ்மோர் கிடைக்குமா என்று கேட்கிறார். பிறகு இந்த சரக்கோட டேஸ்ட் போட்ட நல்லா தான் இருந்துச்சு என்று சொல்ல திரும்ப வேண்டுமா என்று கேட்க மனோஜ் ஆசையாக கிடைக்குமா என்று கேட்க ரோகினி மரியாதையா படுத்து தூங்குங்க இதுவே முதலும் கடைசியுமா இருக்கணும் என வார்னிங் கொடுக்கிறார். 

பிறகு செல்வமும் முத்துவும் பின்பக்கம் பக்கம் நின்று கொண்டு எனக்கு என்னமோ இந்த மலேசியா மாமா உன் மேல இன்னும் சந்தேகம் அதிகமா இருக்கு இந்த பார்லர் அம்மா என்னமோ டிராமா போடுது, இன்னைக்கு மலேசியா மாமா தப்பிச்சுட்டாரு நாளைக்கு பொறி வச்சு பிடிக்கிறேன் என்று பேசிக்கொண்டு இருப்பதை ரோகிணி கேட்டு விடுகிறார்.  ‌ 

இதனால் ரோகிணி ரூமுக்கு வந்து மனோஜ் எதுக்கு குடிக்க வச்சுக்க என்று மலேசியா மாமா தலையில் கொட்டி திட்டுகிறார். நாளைக்கு வேறொரு பர்பாமன்ஸ் வச்சிருக்கேன் என்று சொல்ல நீங்க பண்ணது வரைக்கும் போதும் நாளைக்கு காலையில உங்களுக்கு ஒரு போன் வரும் உங்க பொண்டாட்டிக்கு உடம்பு சரியில்லன்னு சொல்லுவாங்க நீங்க இங்க இருந்து கிளம்பி போயிட்டே இருக்கணும் என்று கூறுகிறார். என்னம்மா நீ அடிக்கடி கதையில டுவிஸ்ட் கொடுக்கிற, நீயே ஒரு கதையை எழுதி மணிரத்தினம் சார் கிட்ட கொடுத்திடு என சொல்கிறார் மலேசியா மாமா. இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.