ரோகிணி தாலியை அடகு வைக்க அண்ணாமலை முத்துவை பிடித்து திட்டியுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் இன்றைய எபிசோட்டில் ஏசியை திருப்பி கொடுத்த சுதாவுக்கு ரோகிணி பணத்தை திருப்பி தர சுதா இதுக்கெல்லாம் காரணம் முத்து தான். அவர் மட்டும் ஏசியை திருப்பி அனுப்பாமல் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது இல்ல, சரி நீங்க மட்டும் என்ன பண்ண முடியும் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

பிறகு மனோஜ் அவங்க தான் பணம் வேண்டாம்னு சொன்னாங்கலே அப்ப எதுக்கு கொடுத்த என்று கேட்க அவங்க சொன்னா அப்படியே விட்டுவிட முடியுமா அப்புறம் நமக்கு மரியாதை இருக்காது. ஸ்ருதி என்னை எப்படி மதிப்பா? என்று சொல்ல மனோஜ் உனக்கு ஏது அவ்வளவு பணம் என்று கேட்க தாலியை அடகு வைத்து விட்டதாக மஞ்சள் கயிரை எடுத்துக்காட்ட மனோஜ் ஷாக் ஆகிறார். பிறகு எனக்காக எதுக்கு இவ்வளவு பண்ணு என்று கேட்க நான் உன்னோட ஒய்ப் உன்னை எங்கேயும் தலைகுனிய விடமாட்டேன் என்று சொல்கிறார். 

அடுத்ததாக வீட்டுக்கு வந்த மனோஜ், ரோகினி கடையில் நடந்த விஷயத்தை சொல்லி முத்துவை ரவுண்டு கட்டுகின்றனர். மனோஜ் வேணும்னு தான் இப்படி பண்ணி இருக்கான். என்ன அவமானப்படுத்தணும் என்பதற்காகவே இப்படி செஞ்சிருக்கா.. எனக்காக ரோகினி அவளுடைய தாலியை அடகு வச்சு பணத்தை கொடுத்து இருக்கா என்று சொல்ல விஜயா இந்த வீட்டு மருமக இப்படி மஞ்ச கயிறோட நிற்கிறாய் என்று கவலைப்பட மீனாவும் ரொம்ப நாளா மஞ்ச கயிறோடு தான் இருக்கா என்று முத்து பதிலடி கொடுக்க அவளும் ரோகிணியும் பொண்ணா என்று கோபப்படுகிறார். 

ஸ்ருதி எங்கம்மாவும் எனக்கு போன் பண்ணி ரொம்ப வருத்தப்பட்டாங்க. முத்து அப்படி பண்ணியிருக்கக்கூடாது எங்க கிட்ட சொல்லி இருக்கலாம் இல்ல உங்ககிட்டயாவது சொல்லி இருக்கலாம் என்று பேச மனோஜ் எனக்கு வர கோவத்துக்கு உன்னை என்று முத்துவுடன் கோபப்பட என்னடா பண்ணுவ பண்ணு முத்து சரிசமமாக சத்தம் போட அண்ணாமலை நிறுத்துங்கடா நான் இங்க ஒருத்தன் இருக்கேன் நான் என்ன சிலையா என்று கோபப்படுகிறார். முத்து நீ பண்ணது தப்புதான். கூட்டுக் குடும்பமா இருக்கிற இடத்துல தன்னிச்சையா முடிவெடுக்க கூடாது. இனிமே இப்படி பண்ணாத என்று திட்டுகிறார். 

அதை பிறகு முத்து கிச்சனில் இருக்க மீனா நீங்க பண்ணது தப்புதான் என்று சொல்ல முத்து நான் என்ன தப்பு பண்ண நீயும் அப்படியே சொல்ற என்று கேட்க அவங்க என்ன திட்டம் போட்டு ஏத்தி அனுப்பினார்களோ அதை நீங்க நிறைவேற்றி வச்சிருக்கீங்க. இதுவே நீங்க மாமா கிட்ட சொல்லி இதை டீல் பண்ணிருந்தா இவ்வளவு பெரிய பிரச்சனை வந்திருக்காது என்று சொல்ல முத்து நீயும் சரியா தான் யோசிக்கிற ஏதோ கோபத்துல பண்ணிட்டேன் என்று சொல்ல அந்த கோபம்தான் உங்களை யோசிக்க விடாமல் பண்ணுது என சொல்கிறார். நம்ம கால வாரி விட நிறைய பேர் காத்திருக்காங்க யோசிச்சு பண்ணுங்க என்று அறிவுரை சொல்கிறார்.

அடுத்து ஸ்ருதி ரவியிடம் முத்து பண்ணது தப்புதான் நீ இல்லன்னு சொல்ல போறியா என்று கோபப்பட முத்து பண்ணது தப்புதான் என்று ரவியும் சொல்ல சுருதி நீயா இப்படி சொல்ற என்று ஆச்சரியப்படுகிறார். அதே சமயம் உங்க அம்மா பண்ணதும் தப்புதான் உங்க அம்மா ஏசி அனுப்புறேன்னு உன்கிட்ட சொன்னாங்களா இல்ல வீட்ல இருக்க பெரியவங்க கிட்ட தான் சொன்னாங்களா யாரையும் கேட்காம அவங்க எப்படி அனுப்பலாம்? என்று சொல்ல சுருதி அவங்க சப்ரைஸா அனுப்பி இருப்பாங்க என்று சொல்கிறார். சர்ப்ரைஸ் அனுப்புனா உனக்கு மட்டும் அனுப்பனும் இந்த வீட்டுக்குள்ள எந்த பொருள் வரணும் வரக்கூடாது என்று முடிவு பண்ண வேண்டியது எங்க அப்பா தான் என்று சொல்ல சுருதி நீ சொல்றது சரிதான் எங்க அம்மா பண்ணது தப்புதான் நீ என்று ஒப்புக்கொள்கிறார். இதை எல்லாம் நீ ஏன் வெளியே சொல்லலை என்று கேட்க உன்னை விட்டுக் கொடுக்கக் கூடாது என்றதுக்காக தான் சொல்லல என்று சொன்னதும் சுருதிக்கு ரவி மீதான காதல் அதிகமாகிறது. 

அடுத்ததாக விஜயா இந்த முத்துவும் மீனாவும் இந்த வீட்ல இருக்க வரைக்கும் பிரச்சனை தான் அவங்கள தனி கொடுக்கணும் வச்சிடலாம் என்று திரும்பவும் பேச்சை ஆரம்பிக்க அண்ணாமலை கோபப்படுகிறார். பிறகு இந்த வீட்டு மருமக ரோகிணி மஞ்சள் கயிற்றோட இருக்கா அவளுக்கு உடனே தாலி செயின் வாங்கணும் என்று சொல்ல அது அவ புருஷன் ஓட பிரச்சனை அவன் வாங்கி கொடுப்பான் என்று சொல்ல அதுவரைக்கும் இந்த வீட்டு மருமக இப்படியே இருப்பாளா? அது நமக்கு தானே அவமானம் என்று சொல்ல மீனா இவ்வளவு நாளா மஞ்சக்கயிறோட தான் இருக்கா அப்போ உன் கௌரவம் எங்க போச்சு என்று அண்ணாமலை கேள்வி கேட்டு மடக்குகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.