கோவிலுக்கு வந்த ரோகினி பாட்டி கேட்ட கேள்வியால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இது சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி வராத காரணத்தினால் மீனாவை கூப்பிட்டு சீதாவை காலேஜுக்கு அனுப்பி வச்சிடு, எங்க கல்யாண வயசுல இருக்குற ஒரே பொண்ணு சீதா தான் ஒரு வேலை அந்த பொண்ணு வரலைன்னா சீதாவை பிடித்து உட்கார வைத்து விடுவார்கள் என்று சொல்ல மீனா ஷாக் ஆகிறார்.

அதன் பிறகு ரவி வந்தாலும் அவனையும் அனுப்பியது ஒருவேளை இது மனோஜ் ஓடிப் போயிட்டா அவனும் பிடித்து உட்கார வைத்து விடுவார்கள் என்று சொல்ல அண்ணாமலை தேவையில்லாத பேச்சு வேண்டாம் நீ சவாரிக்கு போகணும்னு சொன்னல, போய் சீக்கிரம் வந்துடு என அனுப்பி வைக்கிறார்.

பிறகு எல்லோரும் ரோகிணிக்காக காத்திருக்க ஒரு கட்டத்தில் ரோகினி வித்யாவுடன் வந்து இறங்குகிறார். சீதா விஷயத்தை சொல்ல எல்லோரும் ரோகிணியை கூட்டிக் கொண்டு செல்ல கோவிலுக்கு வெளியே வருகின்றனர். வெளியே வந்து பாட்டி இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் இந்த விஷயத்தை மறைக்க போற என கேட்க ரோகிணி அதிர்ச்சி அடைந்து நிற்கிறார்.

உங்க அப்பாகிட்ட இந்த கல்யாணத்தை பத்தி இன்னும் சொல்லலையா என கேட்க அப்போதுதான் ரோகினிக்கு மூச்சே வருகிறது. அடுத்ததாக ரோகினியை உள்ளே கூட்டி செல்ல விஜயா ஏன் டல்லா இருக்க என்ன ஆச்சு எனக்கு விஷயம் தெரியும் பாட்டி எப்படி கேட்டதுனால நீ வருத்தமா இருக்க அதானே என்று கேட்க நீங்கதான் என்ன சரியா புரிஞ்சு வச்சிருக்கீங்க என ரோகினி சமாளிக்கிறார்.

பிறகு ரோகிணியும் வித்தியாவும் புடவை மாற்ற ரூமுக்கு வரும் வழியில் பிஏ போன் செய்து பொன்னியம்மன் கோவிலில் தான் கல்யாணம் நடக்கிறது என்ற விஷயத்தை சொல்லி அன்னதானம் போடுற இடத்துக்கு போய் பாரு என அனுப்பி வைக்க அங்கு ஓடிவரும் ரோகிணி போர்டில் எழுதி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

இந்த கல்யாணத்தை நடத்த விட மாட்டேன், உன் நாடகம் மொத்தத்தையும் வெளியே கொண்டு வந்து கல்யாணத்தை நிறுத்துவேன் என அதிர்ச்சி கொடுத்து போனை வைக்கிறார். ரூமுக்கு வந்த ரோகினி மனோஜிடம் எல்லா விஷயத்தையும் சொல்றதுதான் ஒரே வழி என சொல்ல வித்யா இப்போதைக்கு அதெல்லாம் வேண்டாம் அப்படி சொன்னால் இந்த கல்யாணம் நடக்காது, பார்லரும் கையை விட்டுப் போய்விடும் என சமாதானம் செய்கிறார்.

இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைய அதன் பிறகு வெளியான ப்ரோமோ வீடியோவில் மனோஜிடம் மொத்த உண்மைகளையும் சொல்ல முடிவெடுக்கிறார் ரோகினி. மனோஜ் சம்மதம் சொன்னால் இந்த கல்யாணம் நடக்கட்டும் இல்லையென்றால் வேண்டாம் என சொல்கிறார்.