வெறுப்பேத்தியே முத்துவால் மனோஜ்க்கு ஆக்சிடென்ட் ஏற்பட்டுள்ளது.

தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை.

இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் பார்வதியுடன் கோவிலுக்கு வரும் விஜயா முத்து மனோஜ் போட்டு படாத பாடு படுத்துறான் என புலம்புகிறார். பிறகு கோவிலில் அர்ச்சனை செய்ய வீட்டில் உள்ள எல்லோரது பெயரையும் சொல்லும் விஜயா முத்துவின் பெயரை மட்டும் சொல்லாமல் விட்டு விடுகிறார். பார்வதி இன்னொருத்தன் பெயர் சொல்லலையே என கேட்க விஜயா எனக்கு தேவையானவர்கள் பெயரை நான் சொல்லியாச்சு என கூறுகிறார்.

அப்போது கோவிலுக்குள் வந்த மீனா இதை கேட்டுவிட பிறகு முத்துவின் பெயரில் அர்ச்சனை செய்து என்னுடைய வாழ்க்கையை நல்லபடியாக மாற்றி கொடு என வேண்டுகிறார். அடுத்ததாக மீனா வீட்டுக்கு வந்து பூ கட்டிக் கொண்டிருக்க அப்போது அங்கு வரும் முத்து நானும் பூ கட்டுறேன் என சொல்லி மீனாவை பூ கட்ட தர சொல்லி கட்ட முயற்சி செய்ய கட்ட முடியாமல் போகிறது.

பிறகு மீனா அர்ச்சனை செய்ததாக சொல்லி முத்துவுக்கு விபூதி வைத்துவிட்டு உங்களுக்கு என்ன சாப்பாடு பிடிக்கும் என கேட்டேன் பசிக்கும்போது என்ன சாப்பாடு கிடைக்குதோ அது பிடிக்கும் என கூறுகிறார்.

அடுத்து வீட்டுக்கு வந்த விஜயா மனோஜ்க்கு மனோஜ்க்கு ஒரு கல்யாணம் பண்ண வேண்டும் என அண்ணாமலையிடம் சொல்ல முதலில் அவன் ஒரு நல்ல வேலைக்கு போகட்டும் அப்புறம் முத்துவுக்கு தர வேண்டிய பணத்தை கொடுக்கட்டும் அதுக்கப்புறம் கல்யாணத்தை பத்தி யோசிக்கலாம் என சொல்ல விஜய்யா முத்துவிற்கு கல்யாணம் ஆகி ஜோடியாக இருக்கும்போது இவன் மட்டும் தனியாக இருந்தால் நல்லா இருக்குமா என கல்யாணத்தைப் பற்றி தொடர்ந்து பேசுகிறார்.

இந்த சமயத்தில் அங்கு வரும் முத்து இவனுக்கு கல்யாணம்ன்னா பண்ணுங்க காதுகுத்துனா பண்ணுங்க எனக்கு சேர வேண்டிய பணத்தை எடுத்து வையுங்கள் என சொல்ல விஜயா அதெல்லாம் அவன் பணம் கொடுத்து விடுவான். அவன் பெரிய படிப்பு எல்லாம் படிச்சிருக்கான் உங்களைவிட கை நிறைய அவன் தான் சம்பாதிக்க போறான் என சொல்கிறார். ‌‌

இவன் எல்லாம் ஒரு அறிவாளியா ஒரு பொண்ணு ஈசியா ஏமாத்திட்டு பணத்தை சுருட்டிக்கிட்டு போயிட்டா இவனை அறிவாளின்னு சொல்லாதீங்க தலைக்கு மேலே என்ன இருக்கு அதுதான் உள்ளையும் இருக்கு என வெறுப்பேத்த மனோஜ் போதும் நிறுத்துங்க நானே ஒரு பொண்ணை உண்மையா காதலிச்சு ஏமாந்து போயிருக்கேன், என் வலி உங்க யாருக்கும் புரியாது என சொல்ல முத்து ஒரு பொண்ணை நீ ஏமாத்திட்டு போனியே அந்த வலி உனக்கு புரியாதா? அப்பாவோட வலி உனக்கு புரியாதா என கேள்வி மேல் கேள்வி கேட்க முத்து கோபமாக வீட்டிலிருந்து வெளியே கிளம்பி செல்கிறார்.

மீனா காபி கொடுக்க மாட்டேன் என சொன்னது முத்து வெறுப்பேற்றியதை நினைத்துக் கொண்டே செல்லும்போது ஒரு ஆட்டோவில் அடிபட்டு கீழே விழ அந்த வழியாக வரும் ரோகிணி மனோஜ்க்கு உதவ ஓடி வருகிறார். காலில் ரத்தத்தை பார்த்த மனோஜ் மயங்கி விழ ரோகிணி அவனை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்கிறார்.

பிறகு மீனா முத்துவுக்காக துணி அயர்ன் செய்து சந்தோஷப்படுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.