விஜயாவால் பாட்டி எடுத்த முடிவு ஒரு பக்கம் இருக்க மீனாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் வழுக்கி விழுந்த விஜயாவை பார்த்து முத்து பாட்டி இங்கே ஏதோ செய்த வினை ஒரு பழமொழி சொல்லுவாங்களே அது சரியா தான் இருக்கு என சொல்ல பாட்டி அந்த பழமொழியை சொல்ல நான் கீழே விழுந்தது உங்களுக்கு சந்தோஷமா இருக்கா என விஜயா கோபப்படுகிறார்.

அதன் பிறகு ரவி, மனோஜ் மற்றும் அண்ணாமலை ஆகியோர் விஜயாவை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்கின்றனர். பாட்டி இவ வேற வழுக்கி கீழ விழுந்துட்டா சகுனமே சரியில்ல, சரி ஹாஸ்பிடல் போயிட்டு வரட்டும் என்ன பண்ணலாம்னு முடிவு எடுக்கலாம் என்று சொல்லி உள்ளே சென்றுவிட மீனா வருத்தப்பட்டு நிற்கிறார்.

அதனைத் தொடர்ந்து பாட்டி அண்ணாமலைக்கு போன போடு விஜயாவுக்கு என்ன ஆச்சுன்னு கேட்கலாம் என்று சொல்ல அதற்குள் அவர்களே வீட்டுக்கு வந்து விடுகின்றனர். காலில் கட்டுடன் வரும் விஜயாவை பார்த்து முத்து பாட்டு பாடி வெறுப்பேற்ற என்னால நிக்கவே முடியல உட்கார வைடா என மனோஜிடம் புலம்புகிறார்.

அதன் பிறகு விஜயா என்னால பெட்டை விட்டு எழுச்சிக்க கூட முடியுமானு தெரியல கல்யாண வேலை வேற இருக்கு என்று விஜயா சொல்ல கல்யாணத்தை நிறுத்திடலாம் என்று சொல்ல மனோஜ் ஏண்டா என்று அதிர்ச்சி அடைய அம்மாவுக்கு கால்ல அடிபட்டு முடியாம கெடக்குறாங்க இப்போ உனக்கு கல்யாணம் தேவையா இதுதான் என் அம்மா மேல வச்சிருக்க பாசமா என கேட்டு ஷாக் கொடுக்கிறார்.

எல்லாம் இந்த மீனா வேலை வந்தது தண்ணீர் கீழே கொட்டி என்னை விழ வச்சுட்டா என சொல்ல முத்து மீனாவின் குடும்பத்தார் வந்து போனதால் வீட்டை கழுவ சொன்ன விஷயத்தை சொல்ல எல்லோரும் விஜயாவை பிடித்து திட்டுகின்றனர். நீ பண்ண தப்புதான் கடவுள் தண்டனை கொடுத்து இருக்காரு என சொல்ல எல்லாருக்கும் இப்ப சந்தோஷமா இருக்கா என்று விஜயா கோபப்படுகிறார்.

மேலும் சாந்தி முகூர்த்தத்திற்கு குறித்த நேரம் கடந்து போய்விட்டதால் மனோஜ் கல்யாணம் முடிந்த பிறகு வைத்துக் கொள்ளலாம் என்று பாட்டி சொல்கிறார். விஜயா இதைக் கேட்டு சந்தோஷப்பட்டு இந்த எல்லாரும் கலைந்து சென்ற பிறகு இந்த வீட்டில உனக்கு தான் எல்லாம் சடங்கும் முறையாக முதல்ல நடக்கணும், உனக்கும் ரோகினிக்கும் தான் முதல்ல குழந்தை பிறக்கணும் என்று சொல்கிறார். இதெல்லாம் கேட்டு மீனா அதிர்ச்சி அடைகிறார்.

மறுபக்கம் ரோகினியின் அம்மாவை பார்க்க அவரது சித்தி வந்திருக்க அந்த பிஏ கணக்கெடுப்பவர் போல விசாரிக்க க்ரிஷ் ரோகினி ஓட அண்ணன் பையன் என சொல்கிறார். ஆனாலும் சந்தேகம் தீராத அவர் அந்த ஏரியாவில் இருக்கும் ஒரு பெண்மணி இடம் கணக்கெடுக்க வந்ததாகவும் வீட்டில் யாரும் இல்லை என்று விசாரிக்க அவர் கல்யாணியோட பையன் தான் கிரிஷ் என்ற உண்மையை போட்டு உடைக்கிறார்.

இங்கே மறுநாள் காலையில் விஜயா கால் வழியில் தவித்துக் கொண்டிருக்கிற மனோஜ் வாக்கிங் ஸ்டிக் வாங்கி வந்து கொடுத்து இதை புடிச்சிட்டு நடக்கலாம் என்று சொல்லிக் கொடுக்க என்ன பார்த்தா கூன் போட்ட கெழவி மாதிரி இருக்கா எனக்கு இதெல்லாம் தேவையில்லை என கோபப்படுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

அதன் பிறகு வெளியான ப்ரோமோ வீடியோவில் பி ஏ ரோகிணிக்கு போன் போட்டு உன்னை பத்தி எல்லா விஷயமும் எனக்கு தெரியும் உனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கு அந்த பையன் பேரு கிருஷ் என்று சொல்ல ரோகிணி அதிர்ச்சி அடைகிறார்.