மனோஜை வேலையை விட்டு துரத்தியுள்ளார் ஓனர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் அண்ணாமலை முத்துவை பிடித்து ஏன்டா இப்படி இருக்க சத்தியா பார்க்கையில் பாவமா இருக்கு அவங்க அம்மா அவ்வளவு கஷ்டப்படுறாங்க என்று சொல்ல அவன் பண்ண வேலைக்கு என்று போனை எடுத்துக்காட்ட போக மீனா வெளியே நிற்பதை பார்த்து முத்து அண்ணாமலை இடம் எதுவும் சொல்லாமல் மறைத்து விடுகிறார்.
இனிமே யாரையும் அடிக்க மாட்டேன் பா உன்னை தலை குனிய விடமாட்டேன் என்று நினைத்து வாக்கு கொடுக்கிறார். அடுத்ததாக மனோஜ் லேட்டாக வீட்டுக்கு வர ரோகிணி ஏன் இவ்வளவு லேட் என்று கேட்க எல்லாரும் சாப்பிட்டு முடித்த பிறகு தான் வர முடியும் என்று சொல்லு ரோகிணி என்ன சொல்ற என்று கேட்க மனோஜ் வீட்ல எல்லாரும் சாப்பிட்டு முடித்த பிறகு தான் வர முடியுதுன்னு சொன்னேன் என்று சமாளிக்கிறார். மேலும் உன் மேல என்ன சாம்பார் வாசனையா இருக்கு என்று கேட்க அது புதுசா வந்திருக்க ப்ர்ம்யூம் என்று சொல்கிறார்.
மறுநாள் கார் செட்டில் எல்லோரும் முத்து காரை விற்று பேசிக் கொண்டிருக்க ஏதோ ஒரு ஆட்டோ உள்ளே வர கடைசியில் அது முத்து என தெரிய வருகிறது. எல்லோரும் முத்துவை பார்த்து கவலைப்பட எனக்கு ஒரு பிரச்சனை இல்ல கார் ஓட்டுறதை விட இது ரொம்ப ஈசியா தான் இருக்கு. நான் இப்பவும் சந்தோஷமா தான் இருக்கேன். என்கிட்ட நேர்மையும் தன்னம்பிக்கையும் இருக்கு என்று சொல்கிறார்.
இதைத் தொடர்ந்து மனோஜ் வேலை பார்க்கும் ஹோட்டலில
ஒருவருக்கு சாம்பார் கொண்டு வரும்போது சாப்பிட வந்தவர்கள் இது கொட்டி விட ஏற்பட்ட பிரச்சனையில் ஓனர் மனோஜ் வேலையில்லை என வெளியே துரத்துகிறார். அடுத்து மீனாவின் அம்மாவும் சீதாவும் வீட்டுக்கு வந்து அண்ணாமலை இடம் அவருக்கு நினைவு நாள் வருது என்று சொல்லி எல்லோரையும் வீட்டுக்கு கூப்பிட அண்ணாமலை மனசு உடைந்து போகிறார்.
விஜயா அதெல்லாம் எதுக்கு இங்க வந்து சொல்லிக்கிட்டு இருக்கீங்க உன் புருஷன் அல்ப ஆயுசுல போய்ட்டான் என்று சொல்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.