நண்பர்களுக்காக முத்து எடுத்த முடிவு ஒரு பக்கம் இருக்க மீனா கோபத்தில் பேசாமல் இருக்கிறார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் முத்து செட்டுக்கு வர அவர நண்பர்கள் நீ தேவையில்லாம அந்த சிட்டி மேல கைய வச்சதால மூணே நாள்ல மொத்த பணத்தையும் கொடுக்கணும்னு சொல்லிட்டு போயிட்டான். இல்லனா காரை தூக்கிடுவேன்னு மிரட்டுறான். உன்னால எங்க பொழப்பே போச்சு என்று புலம்ப முத்து அங்கிருந்து கிளம்பி சென்று விடுகிறார்.
இதையடுத்து ரவி மற்றும் ஸ்ருதி சைக்கிளில் ஸ்டுடியோவுக்கு செல்ல ரவி சைக்கிளை மிதிக்க முடியாமல் கஷ்டப்பட சுருதி நீ இறங்கு என்று சொல்லி ரவியை உட்கார வைத்து சைக்கிளை ஓட்டி செல்ல இதை ஸ்ருதியின் அம்மாவும் அப்பாவும் பார்த்து விடுகின்றனர். ஸ்ருதியின் அப்பா இவளுக்கு இதெல்லாம் தேவைதான் இன்னும் கொஞ்ச நாள் போனா பிளாட்பார்ம்க்கு வந்துருவா என்று ஆவேசப்பட அவருடைய அம்மா இனிமே சும்மா இருக்க கூடாது. அந்த ரவியை வீட்டோட மாப்பிள்ளையா வர வைக்கணும் அதற்கான வேலையை இன்னையில இருந்தே பண்றேன் என கிளம்பி செல்கிறார்.
அதன் பிறகு முத்து சிட்டியை வந்து பார்த்து எனக்கும் உனக்கும் தான் பிரச்சனை எதுவாக இருந்தாலும் என்கிட்ட பேசு எதுக்கு கார தூக்கிடுவேன்னு பசங்களை மிரட்டுற? அவங்க வட்டியை ஒழுங்கா கட்டிக்கிட்டு தானே இருக்காங்க என்று சொல்ல சிட்டி எனக்கு பணம் எல்லாம் ஒரு பிரச்சனையே கிடையாது. என்னை அடிச்சதுக்கு நான் எப்படி மனதை தேத்திக்கிறது? வேணும்னா ஒன்னு பண்ணலாம் நாளைக்கு செட்டுக்கு வர நீ என் கால்ல விழுந்து மன்னிப்பு கேளு. வட்டியை கூட தள்ளுபடி பண்ணிடறேன் அசல மட்டும் கொடுக்கட்டும் அது அவங்க எப்ப முடியுமோ அப்ப தரட்டும் என்று சொல்ல முத்து வண்டி மேல மட்டும் கைய வச்சு பாரு அப்புறம் இருக்கு என்று சொல்லி கிளம்புகிறார்.
வீட்டுக்கு வந்த முத்துவிடம் மீனா பேசாமல் இருக்க முத்து உண்மைய சொன்னா இன்னும் நீ கவலைப்படுவ, உன் தம்பி மேல அவ்வளவு நம்பிக்கை வைத்திருக்க என்று மனதிற்குள் பேசிக்கொண்டு மொட்டை மாடிக்கு சென்று விட மீண்டும் மீனா அருகே வந்து நிற்க தூக்கத்திலிருந்து மீனா கண் விழித்ததும் தண்ணீர் குடித்து விட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார். இனிமே இப்படி பண்ண மாட்டேன் ஒரு வார்த்தை கூட இந்த மனுஷனால சொல்ல முடியல அப்படி இருக்கும்போது நானா எதுக்கு போய் பேசணும் என்று மீனாவும் பேசாமல் படுத்து விடுகிறார்.
மறுநாள் சிட்டி செட்டுக்கு வந்து காரை எடுக்க போக அங்கு வரும் முத்து தடுத்து நிறுத்த சிட்டி நீ வருவேனு தெரியும் முத்து. கோவில்ல வந்து வேற மாதிரி நேரா கால்ல விழு என்று சொல்ல முத்துவும் பின்னாடி போய் கால்ல விழுவது போல் பில்டப் கொடுத்து இங்கு இருந்து எட்டி உதைச்சா நெஞ்செலும்பு முறிஞ்சு போயிடும் என்று வார்னிங் கொடுக்கிறார். எல்லாரும் கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்து விட்டு சிட்டியை துரத்தி விடுகின்றனர்.
பிறகு செல்வம் பணத்துக்கு என்ன பண்ண என்று கேட்க காரை வித்துட்டேன் என்று சொல்ல செல்வம் நீ என்னப்பா பண்ணுவ என்று கேட்க கார் கூடவேவா பொறந்த? இந்த வேலை இல்லனா இன்னொரு வேலை செய்து எப்படியும் பொழச்சிப்பான் என்று சொல்லி அங்கிருந்து கிளம்புகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.