முத்து போட்ட பிளான் கடைக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் இன்றைய எபிசோட்டில் முத்து வண்டியை தூக்கிட்டாங்க என்ற விஷயத்தை நண்பனுக்கு போன் போட்டு சொல்ல முயற்சிக்க போனை வாங்கி பேசிய தலைவர் நீ யாருன்னு தெரிஞ்சு போச்சு எதிர்க்கட்சிக்காரன் தானே எவ்வளவு பணம் வாங்கின? எனக்கு இன்னும் அரை மணி நேரத்துல எல்லா மாலையும் வந்து சேரனும் இல்லனா ரெண்டு மாலையை வாங்கிட்டு நான் வருவேன் என கூறுகிறார்.
மேலும் ஒரு மாலை இங்க இருக்க உன் நண்பனுக்கு இன்னொரு மாலை உனக்கு மாலையோட உன்னை தேடி கண்டிப்பா வருவேன் என்று மிரட்ட முத்து செய்வதறியாது தவிக்கிறார். மீனா கண்டிப்பா வண்டியை கண்டுபிடிச்சடலாம் என்று சொல்ல முத்து யோசிச்சு டிரைவர்கள் குரூப்பில் காலையில் எடுத்த போட்டோவை போட்டு இந்த வண்டியை எங்க பாத்தாலும் எனக்கு தகவல் கொடுங்க என வாய்ஸ் மெசேஜ் கொடுக்கிறார்.
இதைப் பார்த்த ஆட்டோ டிரைவர் ஒருவர் அதே வண்டியை பார்க்க அவர் அந்த வண்டியை பின்தொடர்வது மட்டுமல்லாமல் முத்துவிற்கு தகவல் கொடுத்து தன்னுடைய லைவ் லொகேஷன் எண் அனுப்பி வைக்கிறார். இதையடுத்து முத்துவும் மற்ற ஆட்டோ டிரைவர்கள் செல்வம் எல்லோரும் அந்த இடத்திற்கு வந்து வண்டியை சுற்றி வளைத்து ரவுடியை அடி வெளுக்க ரவுடிகள் எஸ்கேப் ஆகின்றனர்.
பிறகு முத்து நண்பனுக்கு போன் செய்ய மீண்டும் அவரது தலைவன் எடுக்க மாலை கிடைச்சிருச்சு இன்னும் 20 நிமிஷத்துல அங்கே இருப்பேன் என்று சொல்லி ஃபோனை வைத்து மாலையுடன் வந்திருக்க நான் மிரட்டுனதும் பயந்துட்டியா? இவன புடிச்சு கட்டிப்போடுங்கடா என்று சொல்ல முத்து நடந்த விஷயங்களை சொல்லி ஆதாரங்களையும் காட்ட தலைவர் உண்மையை புரிந்து கொண்டு இதெல்லாம் எதிர்க்கட்சி சதியா தான் இருக்கும் என சொல்கிறார்.
மேலும் முத்துவுக்கு பேசிய பணத்தைவிட ஐந்தாயிரம் ரூபாய் அதிகமாக கொடுத்து உனக்கு எந்த உதவியா இருந்தாலும் என்னை வந்து பாரு என சொல்கிறார். மறுபக்கம் சிட்டியிடம் ரவுடிகள் நடந்த விஷயத்தை சொல்ல என் பேர் எதுவும் சொல்லிடலையே என்று கேட்க இல்லை என்று சொன்னதும் சரி விடுங்க இந்த முறை தப்பிச்சுட்டான் அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம் என்று கூறுகிறார்.
அடுத்து முத்துவும் மீனாவும் பணத்துடன் கோவிலுக்கு வந்து மாலை கட்டியவர்களுக்கு சம்பளம் கொடுக்க அவர்கள் எதுக்கு பணம்? மீனா எங்க வீட்டு பொண்ணு நாங்கள் அவளுக்கு ஒத்தாசையா இருக்கணும்னு தான் வந்தோம் என சொல்கின்றனர். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.