மீனா திரும்பி வர சத்யாவால் ஷாக் ஆகி உள்ளார் முத்து. 

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் முத்து மீனாவை காணவில்லை என கம்ப்ளைன்ட் கொடுக்க ஸ்டேஷனுக்கு வர ஏற்கனவே சத்தியா அங்கு இருப்பதை பார்த்த செல்வம் என்னபா சத்தியா இங்கே இருக்கான் என்று சொல்கிறார். சத்யா இவர் தான் என் அக்காவோட புருஷன் இவர்தான் ஏதோ பண்ணி இருக்காரு அரெஸ்ட் பண்ணுங்க என்று சொன்னதும் சத்தியா விஷயம் தெரியாம நீ பாட்டுக்கு ஏதாவது பேசிட்டு இருக்காத கொன்னு போட்டு விடுவேன் என்று வார்னிங் கொடுக்கிறார். போலீஸ் அதிகாரி ஸ்டேஷன்ல வந்து என்னப்பா பேசிட்டு இருக்கீங்க என்று சத்தம் போடுகிறார். 

இதையடுத்து முத்து பிரச்சனை எல்லாம் இல்ல சார் என்று சொல்ல செல்வம் சாதாரண வாக்குவாதம் தான் என்று சொல்கிறார். போலீஸ் இது சாதாரண குடும்பப் பிரச்சனை மாதிரி தான் தெரியுது ஒருத்தர் காணாமல் 24 மணி நேரம் ஆனால் தான் கம்ப்ளைன்ட் எடுக்க முடியும் அதுதான் ரூல்ஸ். இந்த மாதிரி ஒரு நாளைக்கு மூணு நாலு கேஸ் வரும் என்று சொல்லி அனுப்புகிறார். வெளியே வந்த சத்தியா உண்மைய சொல்லுங்க நீங்க தான் என் அக்காவை ஏதோ பண்ணி இருக்கீங்க என்ன பண்ணீங்க சொல்லுங்க என்று கேட்க முத்து தேவையில்லாம பேசிட்டு இருக்காத என்று பொறுமையாக பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பி வருகிறார். 

இதை தொடர்ந்து தொடர்ந்து முத்து மீனா பூ கொடுக்கும் இடங்களுக்கு சென்று அவரை தேடுகிறார். எந்த இடத்திலும் மீனாவை காணாததால் கவலை அடைகிறார். இதையடுத்து ஒரு விநாயகர் கோவிலுக்கு சென்று நல்லவங்களுக்கு நீ எப்பவும் கெட்டது செய்ய மாட்டேனு எங்க பாட்டி சொல்லி இருக்காங்க, நான் இதுவரைக்கும் யாருக்கும் எந்த கெட்டதும் செஞ்சது இல்ல என் பொண்டாட்டி மேல நான் உயிரையே வச்சிருக்கேன் அவளை எப்படியாவது என் கண்ணில் காட்டிடு என்று கண்கலங்கி அழுகிறார். 

பிறகு செல்வம் முத்துவை வீட்டுக்கு அழைத்து வந்து விட்டுவிட்டு கிளம்பி செல்கிறார். முத்து மொத்தமாக உடைந்து போய் வீட்டுக்கு கொண்டு வர மீனா தண்ணீர் குடிப்பதை பார்த்து ஷாக் ஆகிறார். சொல்லாம கொள்ளாம எங்கே போனாய் என்று மீனாவை அடிக்க கை ஓங்க எல்லாரும் அங்கு வந்து விட அண்ணாமலை என்னடா பொண்டாட்டியை அடிக்க போற என்று சத்தம் போடுகிறார். விஜயா 2 அடி போடட்டும் அப்பதான் அவ அடங்கி இருப்பா என்று சொல்ல முத்து மீனாவை கட்டிப்பிடித்து எங்க மீனா போன? நீ இல்லாம என் உயிரே போயிடுச்சு என்று கண் கலங்கி அழுகிறார். 

மீனாவை பேச விடாமல் ஆளாளுக்கு கேள்வி கேட்க கடைசியில் மீனா இப்ப நான் கொஞ்சம் பேசிக்கிட்டமா என்று சொல்லி பிளாஸ்கட்டில் கோவில் கும்பாபிஷேகத்திற்காக மாலை கட்டும் வேலைக்கு சென்ற விஷயத்தை சொல்கிறார். மேலும் ஸ்ருதியிடம் சொல்லிட்டு தான் போனேன் என்று சொல்கிறார். 

அதாவது ஸ்ருதி இயர் பட்ஸ் போட்டுக் கொண்டு போனில் பேசிக்கொண்டிருக்கும் போது மீனா கோவில் கும்பாபிஷேகத்திற்காக மாலை கட்டப் போவதாகவும் வர லேட் ஆகும் வீட்ல இருப்பவர்கள் கிட்ட சொல்லிடுங்க என்று சொல்ல இதை கேட்காத ஸ்ருதி போனில் சரி ஓகே என்று சொல்ல மீனா தனக்கு தான் சொல்லுவதாக நினைத்து கொண்டு கிளம்பி செல்கிறார். பிறகு முத்து பல குரல் கிட்ட சொல்லிட்டு தான் போய் இருக்கா ஏண்டா பல குரல் இதை சொல்லல என்று கேட்க ரவி ஸ்ருதி கிட்ட சொல்லிட்டு போனாங்கன்னு எனக்கு இப்பதான் தெரியும் என்று சொல்கிறார். 

இதைத்தொடர்ந்து வீட்டுக்கு வரும் ஸ்ருதி மீனா வந்துட்டீங்களா முத்து உங்கள தேடி எங்கெங்கே போனதா சொன்னாங்க வீட்ல சொல்லிட்டு போயிருக்கலாம்ல என்று சொல்ல எல்லோரும் ஷாக் ஆகின்றனர். ஊரை சுத்த போய்ட்டு வீட்ல மாட்டிக்கிட்டதும் சொல்லிட்டு போனதா பொய் சொல்றா என்று விஜயா சொல்ல மீனா நான் எதுக்கு பொய் சொல்லணும் என்று கேட்கிறார். மனோஜ் ஒன்னு மீனா பொய் சொல்லணும் இல்ல என்று எதையோ சொல்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.