முத்து மீனாட்சி முகம் வெந்துள்ளார் விஜயா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் எல்லோரும் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருக்க ரொம்ப நேரம் மாலை கட்டியதால் எல்லோருக்கும் டயர்ட்டாக இருக்கிறது.

எல்லோருக்கும் தூக்கம் வர சீதா பொங்கல் தீபாவளி நாட்களில் மாலை கட்டுவது தூக்கம் வராமல் இருக்க ஒரு கேம் விளையாடுவோம்ல அது விளையாடலாம் என்று சொல்கிறார். ஸ்ருதி என்ன விளையாட்டு என்று கேட்க அந்த பாட்டு பாடுற கேம், ஆனால் பெயரில் வர பாட்டு மட்டும் தான் பாடணும் என சொல்கிறார்.

உடனே ஸ்ருதி இன்ட்ரஸ்டா இருக்கே விளையாடலாம் என்று சொல்ல முதலில் மீனாவை பாட சொல்கின்றனர். முதலில் ஐந்து மீனா பிறகு என் மல்லிகை என்று பழைய பாடலை பாடி அசத்த முத்து வியந்து பார்க்கிறார். அதைத்தொடர்ந்து முத்துவை பாட சொல்கின்றனர்.

கொஞ்ச நேரம் யோசித்து விட்டு பிறகு ரோஜா பூ சின்ன ரோஜா பூ என்ற பாடலை பாடுகிறார். அதைத் தொடர்ந்து அண்ணாமலையை ஒரு பாட்டு பாட சொல்கின்றனர். அவரும் ஒரு பழைய பாடலை பாட ஸ்ருதி விஜயாவை பாட சொல்ல மன்னிப்பு வச்சு வாடுதே மச்சான் எப்ப வர போற என்ற பாடலை பாடுகிறார். விஜயா பாடியதைக் கேட்டு உங்க மச்சான் இங்கதான் இருக்காரு என பூ கட்ட வந்தவர்கள் கலாய்க்கின்றனர்.

அடுத்து ரவி ஊதா ஊதா பூ பாடலை பாடி ஸ்ருதியோடு சேர்ந்து டான்ஸ் ஆடுகிறார். இதைத்தொடர்ந்து மாலை கட்ட வந்தவர்கள் எல்லோரும் சேர்ந்து செந்தூரப்பூவே செந்தூரப்பூவே என்ற பாடலை பாடுகின்றனர். கேம் முடிந்ததும் இதை விஜயா ரோகினி மற்றும் மனோஜ் தூக்கம் வருது ஆனா ரூமுக்கு போய் தூங்க முடியல ஒரே சத்தமா இருக்கு என பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

விஜயா ரவி மற்றும் ஸ்ருதியை போய் படுக்க சொல்ல ஜாலியா இருக்குல்ல இவங்க எல்லாரும் மாலைக்கட்டி முடித்ததும் போய் தூங்கலாம் என சொல்கின்றனர். நைட்டுக்குள்ள 500 மாலை கட்டி முடிக்க முடியாது அதெல்லாம் சும்மா கதை இவ்வளவு கட்டுனது பெரிய விஷயம் என்று விஜயா நெகட்டிவாக பேச ஸ்ருதி ஏன் ஆன்ட்டி இப்படி பாக்குறீங்க முடியும்னு என்கரேஜ் பண்ணுங்க அப்பதான் அவங்களும் கட்டி முடிப்பாங்க என்று சொல்கிறார். மீனா எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது நாங்க கட்டி முடிச்சிடுவோம் என சொல்கிறார்.

இப்படி எல்லோரும் சந்தோஷமாக இருப்பதை பார்த்த பார்வதி கண்கலங்கி விஜயாவை கிச்சனுக்கு கூட்டிச் செல்ல இந்த கூத்த வந்து பாருங்க உன்னை போன் பண்ணி வர சொன்னது தப்பா போச்சு நீயும் அவங்களோட சேர்ந்து மாலை கட்டிக்கிட்டு இருக்க என திட்ட குடும்பமா எவ்வளவு சந்தோஷமா இருக்காங்க என சொல்ல ஆனா பெரிய சந்தோஷம் என முகத்தை திருப்பி கொண்டு வெளியே வருகிறார்.

அடுத்ததாக வெளியில் மணி சத்தம் கேட்க சுருதி என்ன பெல் சவுண்ட் கேக்குது என்று கேட்க சீதா குல்பி வந்து போகுது என சொன்னதும் எல்லோரும் குல்பி சாப்பிடலாமா என்று ரவி ஸ்ருதி இருவரும் மனோஜையும் கூட்டிக்கொண்டு வெளியே சென்று எல்லோருக்கும் குல்பி வாங்கி வருகின்றனர்.

எல்லோருக்கும் குல்பி கொடுக்க விஜயா இந்த நேரத்துல குல்பி சாப்பிட்டா கோல்ட் ஆகாதா என கெட்ட ரவி அப்போ உங்களுக்கு வேண்டாவா என்று திருப்பி கேட்க வாங்கிட்டு வந்துட்டு வேஸ்ட்டா போயிடுமே என்று வாங்கி சாப்பிடுகிறார். மீனா எனக்கு வேண்டாம் தூக்கத்தில் முடித்தவுடன் என சாப்பிடாமல் இருக்க கூட இருந்தவர்கள் அதான் விட்டு தம்பிக்கு இன்னொரு கை இருக்கு ஊட்டி விடலாம்ல என்று சொன்ன எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல என்று முத்து மீனாவுக்கு ஊட்டி விட அதைப் பார்த்து எல்லோரும் ரசிக்க விஜயா கடுப்பாகி பார்வதியை கூட்டிக்கொண்டு ரூமுக்கு செல்கிறார்.

பிறகு பார்வதி கண் கலங்கி இருக்க என்ன ரொம்ப ஜில்லுன்னு இருக்காங்க கண்ணெல்லாம் கலங்கி இருக்கு என்று கேட்க முத்து மீனா இவ்வளவு அன்னோன்யமா இருக்கிறதை பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு, என் புருஷன் எனக்கு இப்படித்தான் ஊட்டி விடுவாரு என கண் கலங்குகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.