மீனாவை தேடி போன முத்துவுக்கு அதிர்ச்சி காத்திருக்க அண்ணாமலை ஆவேசப்பட்டுள்ளார். 

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ரோகிணி சமைத்த சாப்பாட்டை சாப்பிட்டு மனோஜ் தோசைக்கி இந்த ரசம் கூட சூப்பரா தான் இருக்கு ரோகினி அது ரசம் இல்ல சாம்பார் என்று சொல்கிறார். பிறகு மனோஜ் ரோகிணி அந்த தேங்காய் சட்னி பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு என்று சொன்ன அது புதினா என்று சொல்கிறார்.

ரவி புதினா சட்னி வெள்ளையா இருக்கு வந்துட்டு இருக்கேன் புதினா கொஞ்சமா தான் இருந்தது அதனால கொஞ்சம் மைதா மாவு சேர்த்து அரைச்சு என்று சொல்ல அப்ப இது புதினா சட்னி உள்ள மைதா சட்னி என்று கலாய்க்கிறார் ரவி. மனோஜ் எது எப்படி இருந்தா என்னடா நல்லா இருக்குல்ல சாப்பிடு என்று சொல்கிறார்.

அண்ணாமலை சாப்பிடாமல் இங்கும் அங்கும் நடத்தப்படி இருக்க விஜயா அவ வந்து இனிமே சமைக்க போறாளா வந்து சாப்பிடுங்க என்று சொன்ன சமைக்கிறதுக்கு மட்டும் தான் மீனா தான் இந்த வீட்டோட மருமக இவ்வளவு நேரமா இன்னும் வராமல் இருக்க அத பத்தி கொஞ்சமாவது கவலை இருக்கா என்று சொல்ல அவ ஊரை சுத்த போய் இருக்கா நான் எதுக்கு கவலைப்படணும் என்று கேள்வி கேட்கிறார். 

இதையடுத்து முத்து வர மீனா பத்தி ஏதாவது தெரிந்ததா என்று கேட்க இல்லை, எதுவுமே தெரியல எங்க காணாம போனானு புரியல என்று சொன்னதும் அண்ணாமலை நீயும் உங்க அம்மா மாதிரியே பேசாத எங்கையாவது பூ கொடுக்க போயிருப்பா அதனால லேட் ஆகி இருக்கும் என்று சொல்கிறார். ரோகிணி காலையிலேயே மீனா கோபமா தான் இருந்தாங்க முத்து கூட சண்டை போட்டுட்டு இருந்தாங்க என்று சொல்ல அண்ணாமலை என்ன ஆச்சு நீ என்ன சொன்ன என்று கேட்க உனக்கு நான் ஒன்னும் சொல்லல என்று நடந்த விஷயத்தை சொல்ல உனக்கு அறிவு இருக்கா? எதையும் யோசித்துப் பேச மாட்டியா அந்த பொண்ணுக்கு எவ்வளவு நாளைக்குத்தான் எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு இருப்பா என்று ஆவேசப்படுகிறார். 

விஜயா அவன் மனசுல இருக்குற தான சொன்னான் என்று சொல்ல அண்ணாமலை விஜயாவை பிடித்து திட்டுகிறார். பிறகு சீதா போன் செய்து அந்த சுதாகர் போன வாரம் தான் ஊருக்குள்ள வந்ததா சொல்றாங்க அவன் அக்கா ஏதாச்சும் பண்ணி இருப்பானோனு பயமா இருக்கு என்று சொல்ல முத்து நான் போய் பார்க்கிறேன் என்று போனை வைத்து விட்டு கிளம்புகிறார்.  

பிறகு மனோஜ் விஜய் அவை ரூமுக்குள்ள அழைத்துச் சென்று அந்த பொண்ணு ஏதாவது லெட்டர் எழுதி வச்சுட்டு போயிருக்காளானு பாத்தியா. என் மாமியார் குடும்பத்தார் காரணம் நீ ஏதாவது எழுதி வைத்துவிட்டு போய் ஏதாவது பண்ணிக்கிட்டா போலீஸ் உன்ன தான் கைது பண்ணும் என்று சொல்லி பயந்து இருக்க பிடிக்கலையா நான் ஒன்னும் சொல்லல அந்த முத்து தான் போல திட்டினான் என்று சொல்கிறார். 

சுதாகர் வீட்டுக்கு வந்து அவனது ஆட்களை அடித்து வீட்டுக்குள் நுழைய சுதாகர் ஆக்சிடென்டில் சிக்கி உடம்பு முழுக்க கட்டு போட்டுக்கொண்டு படுத்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அப்போ மீனாவை கடத்துனது சுதாகர் இல்லை என்று புரிந்துகொண்டு அங்கிருந்து கிளம்பி வருகிறார். மறுபக்கம் சிட்டி சத்யாவிடம் எனக்கு என்னமோ முத்து மேல தான் சந்தேகமா இருக்கு நீ போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்துடு என்று சத்யாவை  ஏற்றி விடுகிறார்.

பிறகு சத்யா போலீஸ் ஸ்டேஷனுக்கு கிளம்பி வர முத்து மீனா எங்க போனான்னு தெரியாம தவித்துக் கொண்டிருக்க அண்ணாமலை போன் செய்து நீ எதுக்கும் போலீஸ் ஸ்டேஷன்ல ஒரு கம்ப்ளைன்ட் கொடுக்குது என்று சொல்ல முத்து உன் ஸ்டேஷனுக்கு கிளம்பி வருகிறார். ஸ்டேஷனில் சத்யாவை பார்த்த செல்வம் என்னடா நம்ம சத்தியா எங்க இருக்கான் என்று சொல்ல இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.