ரோகிணி போட்ட புது ட்ராமா வால் மீனாவை வம்பு இழுத்துள்ளார் விஜயா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ரோகிணி வித்யா பியூட்டி பார்லரில் விஜயா மிரட்டிய விஷயத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றனர்.
வித்யா ஒரு பொய்யை சொல்லிட்டு இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் பயந்துகிட்டு இருக்க போற? பேசாம உண்மையை சொல்லுடி என்று சொல்ல ரோகிணி அப்படி சொன்னால் என்னை வீட்டை விட்டு துரத்திடுவாங்க, அதுக்காகவா இவ்வளவு கஷ்டப்பட்டு முதல்ல மனோஜ் மொத்தமா என் பேச்சை கேட்காமல் என்னுடைய கண்ட்ரோலுக்கு கொண்டு வரணும் அதுக்கப்புறம் உண்மைய சொன்னா கூட அவ என் பக்கம் நிக்கணும் என்று சொல்கிறார்.
அதனால இப்போதைக்கு ஒரே வழி தான் இருக்கு, பிரவுன் மணியையே திரும்பவும் வர வச்சு ஒரு புது கதை சொல்ல வேண்டியதுதான் என்று ரோகிணி அவருக்கு போன் போட்டு வர சொல்கிறார். இதனைத் தொடர்ந்து பிரவுன் மணி விஜயா வீட்டுக்கு வந்து இந்த முறை நல்லபடியா நடித்து மணிரத்தினம் படத்தில் வாய்ப்பு வாங்கிடனும் என்று உள்ளே நுழைகிறார்.
தனக்குத்தானே ஆக்சன் சொல்லிக்கொண்டு ரோகிணி பாப்பா ரோகிணி பாப்பா எனக்குப் பிற விஜயா வெளியே வந்து சுமந்து நீங்களா எப்ப வந்தீங்க என்று நலம் விசாரித்து ரோகிணியை கூப்பிடுகிறார். எல்லோரும் சத்தம் கேட்டு வெளியே வந்துவிட ரோகிணி எதுக்கு இப்ப வந்தீங்க என்கிட்ட பேசாதீங்க உங்க மேல நான் கோபமா இருக்கேன் என்று டிராமா போட முதல்ல கதவு ஜன்னல் எல்லாத்தையும் பாத்துக்குங்க என்று சாப்பிட வைத்து மீனாவை ஒரு பாத்திரம் இழுத்து வரச் சொல்லி அதில் எல்லோருடைய ஃபோனையும் ஸ்விட்ச் ஆப் செய்து போடச் சொல்கிறார்.
எல்லோரும் எதுவும் புரியாமல் இருக்க பிரவுன் மணி ஓட அப்பாவை கைது பண்ணிட்டாங்க பார்ட்னருங்க எல்லாம் சேர்ந்து மோசடி பண்ணி பழியை தூக்கி ரோகினி அப்பா மேல போட்டாங்க இப்ப அவரு மலேசியா ஜெயில்ல இருக்காரு என்று சொன்ன எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். ரோகிணி என்ன சொல்றீங்க என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்து நடிக்கிறார்.
ஆமா இப்போ சொத்து எல்லாம் முடக்கி வச்சிருக்காங்க என்று சொல்ல விஜயா அப்ப சொத்தெல்லாம் போச்சா என்று அதிர்ச்சியாக இல்லை அவர் மேல எந்த தப்பும் இல்லனு தெரிய வந்தால் திருப்பி சொத்து எல்லாம் ரிலீஸ் ஆகிடும் என்று சொல்கிறார்.
பிறகு விஜயா மனோஜ் செய்யும் ரோகினியையும் மலேசியாவுக்கு போய் அவங்க அப்பாவை வெளியே எடுக்கிறதுக்கு உதவி செய்ய சொல்ல மாமா இப்போ இவங்க வர வேண்டாம் எல்லாம் லாயர் பார்த்துப்பாங்க, இப்போ மாப்பிள்ளை வந்தா மாப்பிள்ளையையும் பிடிச்சு ஜெயில்ல போட்டு விடுவாங்க என்று சொல்ல மனோஜ் பயந்து போய் அதான் லாயர் பார்த்துக்கிறேன்னு சொல்ற இல்லன்னா அங்கிள் வெளிய வந்ததும் போய் பாத்துட்டு வரோம் என்று சொல்கிறார்.
இதையடுத்து மாமா ஊருக்கு கிளம்ப முத்துக்கு இதுல ஏதோ ஒன்னு இருக்கு அவ சொல்றதெல்லாம் பார்த்தா உன்ன மாதிரி தெரியல என்று சொல்ல மீனா உங்களுக்கு எல்லாத்தையும் சந்தேகம்தான் ரோகினி பார்க்கும்போது எனக்கே கஷ்டமா இருக்கு என்று சொல்கிறார்.
இதையடுத்து விஜயா பயங்கர கோபத்தில் இங்குமங்கும் சுற்றிக்கொண்டு இருக்க மீனா காபி கொண்டு வந்து கொடுக்க விஜயா அதை தட்டி விட்டு வீட்டுக்கு வந்த மகாலட்சுமி அம்மா வீட்டுக்கு போயிட்டா, வெளிநாட்டில் இருந்து வந்த குபேரனை கைது பண்ணிட்டாங்க ஒன்னும் இல்லாதவ இந்த வீட்டில உலாத்திக்கிட்டு இருக்கா என்று கோபப்படுகிறார்.
மீனா ஜாட மாடையா என்னை தானே சொல்றீங்க என்று கோபப்பட ஆமாண்டி உன்ன தான் சொல்றேன் என்று விஜயா பதில் கொடுக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.