மீனா காணாம கரித்து கொட்ட ஸ்வீட்டுடன் வந்து ஏமாந்துள்ளார் முத்து.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியலில் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் எபிசோடில் கார் செட்டில் சவாரியே வரல என்று செல்வமும் அவரது நண்பர்களும் புலம்பி கொண்டிருக்க முத்து வருகிறார். முத்து வந்ததும் ஒருவர் உனக்கு மட்டும் சவாரி வருது. ஜாலியா இருக்க என்று சொன்ன நான் ஜாலியா இருக்கேனு பாத்தியா என்று கோபப்படுகிறார். பிறகு ஒருவர் முத்துமிடம் 200 ரூபாய் கேட்க முத்து இல்லை என்று சொல்ல உன்கிட்ட இல்லாம இருக்காதுப்பா என்று திரும்ப கேட்க என்னமோ குடுத்து வச்சு கேக்குற மாதிரி கேக்குற என்று கோபப்படுகிறார்.

உனக்கு என்ன ஆச்சு ஏன் இப்படி கோபப்படுற? உனக்கு எதுக்கு உதவி பாய் என்று டிரைவரிடம் கேட்க காலையிலேயே என் பொண்டாட்டி கிட்ட சண்டை போட்டுட்டு வந்துட்டேன் ஏதாச்சும் வாங்கிட்டு போய் சமாதானப்படுத்த வேண்டாமா அதுக்குத்தான் என்று சொல்ல முத்து பொண்டாட்டி கிட்ட சண்டை வந்த சமாதானப்படுத்தணுமா? என்று கேட்க ஆமா இதுதான் உலக நியதி என்று சொல்கின்றனர்.

நானும் மீனா கிட்ட சண்டை போட்டுட்டு தான் வந்தேன் ஆனா என்ன வாங்கிட்டு போறதுன்னு தெரியலை என்று சொல்லி அவளுக்கு பிடிச்சது என்னன்னு அவகிட்ட நீ கேட்க வேண்டும் என்று மீனாவுக்கு போன் பண்ண போனை எடுக்காமல் இருக்கிறார். இதை அடுத்து செல்வம் ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் செல்கிறார்.

உப்பு புளி காரம் வெப் சீரிஸ் ப்ரோமோஷனுக்காக அன்னம் மிஸ் ஹோட்டலுக்கு வருகின்றனர். அங்கே முத்துவும் செல்வமும் சாப்பிட்டுவிட்டு மீனாவுக்காக அவர்கள் செய்த ஸ்பெஷல் ஸ்வீட்டை வாங்கிக் கொண்டு முத்து வீட்டுக்கு வருகிறார்.

ஏற்கனவே விஜயா வீட்டில் மீனாவை காணோம் சமைக்கல என்று புலம்பிக்கொண்டிருக்க வந்தது எங்கேயோ ஊரை சுத்த போயிட்டா என்று திட்டுகிறார். பிறகு முத்து வந்து மீனாவை தேட அண்ணாமலை அவ வீட்டில் இல்ல டா என்று சொல்கிறார். பிறகு முத்து மீனாவுக்கு போன் செய்ய போன் ஸ்விட்ச் ஆப் என வருகிறது. போன் பண்ணி வர சொல்லுவேன்னு போனை ஆப் பண்ணி வச்சுட்டு ஊர் சுத்துறா என்று கரித்துக் கொட்டுகிறார் விஜயா.

ரவி உட்பட ஒவ்வொருத்தராத வீட்டுக்கு வந்து விடுகின்றனர். மீனா வீட்டுக்கு வராத காரணத்தினால் பிடிக்கலையா இன்னும் அவர் வீட்டுக்கு வரல யார் சமைக்கிறது என்று கோபப்பட முத்து ஒருநாள் அவ இல்லனா எல்லாரும் பட்டினி இருக்க வேண்டியதுதான் அவளை புடிச்சு எதையாவது சொல்லிக்கிட்டே இருக்காங்க இப்ப அவளோட அருமை தெரியுதா என்று கேள்வி கேட்கிறார். உடனே விஜயா ரோகினியை கூப்பிட்டு இந்த மீனா இல்லனா இந்த வீட்ல எந்த வேலையும் நடக்காதுன்னு நினைச்சுட்டு இருக்காங்க. அத மாத்தணும் நீ இன்னைக்கு சமைச்சிடு என்று சொல்கிறார். ரோகினி எனக்கு ஓரளவுக்குத்தான் சமைக்க வரும் என்று சொல்ல விஜயா அதுவே போதும் போய் சமை என்று சொல்லி கிச்சனுக்கு அனுப்பி வைக்கிறார்.

இதையடுத்து முத்து சீதாவுக்கு போன் பண்ணி மீனா ஏன் இன்னும் வீட்டுக்கு வரல அவகிட்ட போன குடு என்று சொல்ல சீதா அக்கா இங்கே இல்லை என்று சொல்ல அப்படி சொல்ல சொன்னாளா நீ போனை கொடு என்று கேட்க சீதா மாமா உண்மையாகவே அக்கா இங்க வரல காலையில அம்மா போன் பண்ணும் இப்போது கூட கோபமா பேசியதா சொன்னாங்க என்று சொல்ல முத்து அப்படியா சரி பூ கொடுக்க போயிருப்பா இன்னும் வரல அதனாலதான் போன் பண்ணு நான் வந்தது உனக்கு போன் பண்ண சொல்றேன் என்று போனை வைக்கிறார்.

மீனாவின் அம்மா இவ்வளவு நேரம் வராமல் இருக்க மாட்டாளே எங்க போனான்னு தெரியலையே என்று மீனாவின் அப்பா ஃபோட்டோ முன்னாடி நின்று கண்கலங்க சத்யா அந்த ஆள் தான் ஏதாவது பண்ணி இருப்பாரு அதான் அக்கா எங்கையோ கோச்சிட்டு போயிருக்கா இங்கதான் வருவா என்று சொல்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.