முத்து சொன்ன வார்த்தையால் வீட்டை ரணகளமாக்கி உள்ளார் விஜயா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் முத்து வந்ததும் ரோகிணி அவருடைய அம்மாவிடம் அம்மா நீங்க ஏதோ முத்துவுக்கு காசு தரணும்னு சொன்னீங்களே என்று சொல்ல அவர் ஆமாப்பா எவ்வளவு செலவாச்சுன்னு சொல்லு நான் குடுத்துடறேன் என்று கேட்க என்னம்மா நீங்க நம்ப ஒரே குடும்பமா பழகிட்டு இருக்கும் அப்படி இருக்கும் போது இது கூட செய்ய மாட்டோமா என்று முத்து பணம் வாங்க மறுக்கிறார். 

பிறகு வாங்க இப்பவே டிஸ்சார்ஜ் ஆகலாம்னு சொல்லிட்டாங்க உங்கள பஸ் ஏத்திடுறேன் என்று கேட்க ரோகிணி அம்மா இல்லப்பா உங்களுக்கு வேலை இருக்கும்ல நீங்க கிளம்புங்க நாங்க பார்த்துக்கிறோம் என்று சொல்ல போற வழியில பஸ் ஸ்டாண்ட் வாங்க என்று அழைத்துச் செல்கிறார். பிறகு முத்து கிரிஷ்ஷை தூக்கிக் கொள்ள க்ரிஷ் ரோகிணிக்கு பாய் சொல்லியபடி கிளம்பி செல்கிறார். 

அடுத்ததாக மீனா அண்ணாமலைக்கு கஞ்சி செய்து கொடுக்க கஞ்சியை குடித்த அவர் நெல்லூர் செல்வதாக செல்ல முத்து வழக்கம்போல விஜயாவை பிடித்து கலாய்க்கிறார். பிறகு முத்துவின் நண்பன் வீட்டுக்கு வந்து கல்யாண பத்திரிக்கை கொடுக்க உனக்கு கல்யாணமா என்று கேட்க அவர் எனக்கு இல்ல என் அண்ணனுக்கு கல்யாணம் என்று பத்திரிக்கை கொடுக்கிறார். 

உஷாரா இரு ஒன்னு ஓடிப்போய்விட்டால் அந்த பொண்ணை புடிச்சு உன் தலையில் கட்டி வைத்து விடுவார்கள். அதுக்கப்புறம் காலம் முழுக்க கஷ்டப்படணும் அனுபவத்துல சொல்றேன் என்று சொல்லி நண்பனுடன் வெளியே கிளம்ப விஜயா மனதில் இருக்கிறது சொல்லிட்டான். இதுதான் இவங்க ஒரு வருஷமா வாழ்ந்து முடித்த லட்சணம் என்று சொல்கிறார். 

அதன் பிறகு முத்து உள்ளே வந்து தோசை ஊத்த சொல்ல மாவு இல்லை என்று சொல்கிறார். நீதானே மாவு இருக்கு தோசை ஊத்தி தரேன்னு சொன்னேன் என்று கேட்டேன் நான் இருக்கு என்ற ஞாபகத்துல சொல்லிட்டேன் அரைக்கல என்று சொல்கிறார். சரி உப்புமா செஞ்சு கொடு என்று சொல்ல ரவை இல்லை என்று சொல்கிறார். இப்படி யார் எது கேட்டாலும் சமைக்கல என்று சொல்லி ஷாக் கொடுக்கிறார். 

ரோகினி வந்து எனக்கு தோசை மட்டும் போதும் என்று சொல்ல இன்னும் எதுவும் சமைக்கல என்று சொல்கிறார். ஏன் மீனா என்று கேட்க உங்களுக்கு வேணும்னா நீங்களே சமைச்சுக்கோங்க பிரிட்ஜ் இருக்கு காய்கறி இருக்கு.. நீங்கதான் ஏபிசி ஜூஸ் போடுவீங்களே போட்டு குடிச்சுக்கோங்க என்று சொல்கிறார். விஜயா என்னடி எல்லாருக்கும் ஆர்டர் போட்டுட்டு இருக்க என்று கேட்க நான் யாருக்கும் ஆடர் போடல நீங்கதான் எல்லாரும் எனக்கு ஆர்டர் போட்டுட்டு இருக்கீங்க என்று பதில் அடி கொடுக்கிறார். 

மனோஜ் என்னடா நீங்க ரெண்டு பேரும் ஓவரா பண்றீங்க நான் பசியோட போகணுமா? நான் என்ன உன்னை மாதிரி ஒரே இடத்தில் உட்கார்ந்து பிசினஸ் பண்றேன் என்று பேசிய டயலாக் ஏன் திரும்ப பேச முத்து கொஞ்சம் அமைதியா இருடா நானே குழப்பத்துல இருக்கு என்று சொல்லி உனக்கு என்ன மீனா ஆச்சு என்று கேட்க உங்க அம்மா சொல்றது சரியா தான் இருக்கு என்று கோர்த்து விடுகிறார். என்ன சொன்னாங்க என்று கேட்க மீனா எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க விஜயா அவளுக்கு ஏதோ ஆகி இருக்கு போய் வேப்பிலை அடி என்று சொல்கிறார். 

இதையடுத்து முத்து என்னாச்சு மாமா என்று கேட்க நீங்க உங்க பிரண்டு கிட்ட என்ன சொன்னீங்க என்ன உங்க தலையில கட்டி வச்சுட்டாங்களா இன்னும் அதையும் ஞாபகத்துல தான் இருக்கீங்களா என்று கோபப்படுகிறார். உங்களை என்னால புரிஞ்சுக்கவே முடியல என்று சொல்ல முத்து நான் விளையாட்டா சொன்னது நீ இப்படி பேசிட்டு இருக்க என்று கோபப்பட்டு கிளம்பிச் சென்று விடுகிறார்.  

அதன் பிறகு மீனாவின் அம்மா போன் பண்ணி முத்து பற்றி விசாரிக்க மீனா கோபப்பட்டு போனை வைத்து விடுகிறார். வீட்டில் அவரது அம்மா மீனாவுக்கு மாப்பிள்ளைக்கும் ஏதோ சண்டை போல என்று பதற சத்தியா குடிச்சிட்டு ஏதாவது பேசி இருப்பார் அந்த ஆளுக்கு தானே வேலை என்று பேசிவிட்டு கிளம்பி செல்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.