கோபப்பட்டு ரவியிடம் சிக்கி உள்ளார் ரோகிணி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் க்ரிஷ்ஷிடம் மீனா நாளைக்கு உன்னுடைய கண் கட்டை அவிழ்த்து விடுவாங்க.. அதுக்கப்புறம் நீ எப்பவும் போல எல்லாரையும் பார்க்கலாம் என்று சொல்ல அம்மாவையும் பார்க்கலாமா என்று கிரிஷ் கேட்டதும் ரோகிணியும் அவரது அம்மாவும் அதிர்ச்சி அடைகின்றனர்.

மீனா பாவம் அவங்க அம்மா ஞாபகம் வந்துடுச்சு போல என்று சொல்லி வருத்தப்படுகிறார். ரோகிணி நம்ம அவன் அவங்க அம்மா போட்டோவ பாக்கணும்னு சொல்லிக்கிட்டே இருந்தா அதான் அப்படி சொல்றேன் என்று சமாளிக்க முயற்சி செய்கிறார். நீங்க மட்டும் அவன எப்படி தனியா வளப்பிங்க உங்களுக்கும் உடம்பு முடியவில்லை அல்ல உங்களுடைய பொண்ண வர சொல்லலாம்ல அவங்களுக்கு போன் பண்ணி குடுங்க நான் பேசுறேன் என்று சொல்லி மீனா சொல்ல அவ வேலையா இருப்பா பேச முடியாது என்று சமாளிக்கிறார். இந்த நேரத்தில் சுருதி ரவி வீட்டுக்கு வந்து விட மீனா மீண்டும் மீண்டும் நீங்க போன் பண்ணி குடுங்க நான் பேசுறேன் என்று கேட்க இதனால் ரோடு நீ கடுப்பாகி டைம் டேபிள் மேல் இருந்த பால் டம்ளரை கீழே தூக்கி போட இதை ரவி நோட் பண்ணி விடுகிறார்.

அதன் பிறகு ரவி ஸ்ருதியிடம் ரோகினி அண்ணி பால் டம்பளரை தெரியாம தட்டி விடல வேணும்னு தான் தூக்கி போட்டு இருக்காங்க என்று சொல்கிறார். அந்த குழந்தையும் அவங்க பாட்டியும் இந்த வீட்டுக்கு வந்தது அவங்களுக்கு பிடிக்கலை போல, ரூம் இல்லாம கஷ்டப்படுறாங்க போல. மனோஜ் தான் அப்படி இருக்கானு பார்த்தா அண்ணியுமா என்று ரவி சொன்னதும் ஸ்ருதி இத நேரடியா கேட்டுடலாம் என்று சொல்கிறார். பிறகு நேரடியாக ரோகினியிடம் சென்று உங்களுக்கு அங்கு இருக்கிறது பிடிக்கலையா சொல்லுங்க நான் வேணா அவங்க கிட்ட பேசுறேன் என்று சொல்ல ரோகிணி அதெல்லாம் ஒன்னும் இல்ல விடுங்க ஒரு நாள் தானே அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன் என்று சொல்கிறார். இனிமே கொஞ்சம் உஷாரா தான் இருக்கணும் என்று ரோகிணி முடிவெடுக்கிறார்.

பிறகு அங்கு வந்த முத்து பல குரல் என்ன சொல்லிட்டு இருந்துச்சு ஏதோ பேசிட்டு இருந்தீங்க என்று கேட்க நாங்க பேசினத ஒட்டு கேட்டீங்களா என்று ரோகிணி கேட்க நீங்க ஹால்ல நின்னு பேசினா எல்லாரும் கேட்கத்தான் செய்வாங்க என்று சொல்கிறார். நாங்க என்ன பேசணும் உனக்கு என்ன என்று ரோகிணி கேட்க இவங்க ரெண்டு பேரும் வந்ததில் இருந்து உன் நடவடிக்கை சரியில்லையே.. என்னமோ ஒன்னு இருக்கு அத நான் கண்டுபிடிச்சிட்டேன் என்று சொன்ன பிறகு பாத்துட்டு போய் என்ன கண்டுபிடிச்ச என்று கேட்க உனக்கு சொல்ல மாட்டேன் என்று ட்விஸ்ட் வைத்து கிளம்பிச் செல்கிறார்.

அதன் பிறகு க்ரிஷ் விஜயாவின் சேரில் உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருக்க கோவிலுக்கு போயிட்டு வந்த அண்ணாமலை விஜயாவை மட்டும் வீட்டை விட்டுவிட்டு பரசுவை பார்க்க கிளம்பி செல்கிறார். மேலே வந்த விஜயா க்ரிஷ் சேரில் உட்காந்திருப்பதை பார்த்து கோபப்பட்டு அவனை கீழே இறக்கி விடுகிறார். அம்மாகிட்ட வளர்ந்திருந்தா எங்க எப்படி நடந்துக்கணும்னு தெரியும் பாட்டு கிட்ட வளர்ந்ததுங்க எல்லாம் இப்படி தான் இருக்கும். வருங்காலத்தில் தருதலைகளாக தான் ஆகுதுங்க என்று சொல்கிறார்.

பிறகு மீனாவும் முத்துவும் எதுக்கு இப்படி பேசிட்டு இருக்கீங்க என்று கேள்வி கேட்கின்றனர். முத்து அவங்க என்ன பத்தி பேசுறாங்க நான் பாத்துகிட்டே தான் வளர்ந்து இருக்கு என்று சொல்ல ரோகினி அம்மா எங்களால பிரச்சனை வேண்டாம், நாங்க இப்பவே ஹாஸ்பிடல் போயிடுறோம் என்று சொல்ல முத்து அவங்க சொல்றாங்கன்னு நீங்க எதுக்கு போகணும் வாங்க என்று உள்ளே அழைத்துச் சென்று விடுகிறார். பிறகு விஜயா ரோகினிடம் நாளைக்கு உங்களை எப்படியாவது வெளியே அனுப்புற என்று கண்டிஷன் போட்டுவிட்டு ரூமுக்கு செல்கிறார். மீனா உள்ளே இருக்க இந்த ரூமாவது எனக்கு கிடைக்குமா கிடைக்காதா என்று கேட்க எப்ப பாத்தாலும் ரூம் ரூம் என்று உங்களால தான் இப்படி இருக்கான் என்று முத்து விஜயாவை திட்டுகிறார்.

அடுத்ததாக வீட்டு கிச்சனில் மீனாவிடம் இந்த பார்லர் அம்மா கிரிஷ் வந்ததுல இருந்து சரியில்ல எனக்கென்னவோ அதுக்கு குழந்தை பெத்துக்கணும்னு ஆசை வந்துடுச்சு போல என்று சொல்கிறார். ஒருமுறை வாந்தி எடுத்துச்சே அதிலிருந்து அதுக்கு இந்த ஆசை இருக்கு. கூடிய சீக்கிரம் நம்ம வீட்டுக்கு ஒரு பாப்பா வரும் போல என்று முத்து சொல்ல இதை ரோகிணி ஒட்டு கேட்க பின்னாடி நின்று மனோஜூம் ஒட்டும் கேட்டு உனக்குள்ள இப்படி ஒரு ஆசை இருக்குது எனக்கு தெரியாம போயிடுச்சு.. நீ ஓகே சொன்ன ஒரு குழந்தை பெத்துக்க ரெடி ஆகலாம் என்று மனோஜ் ரொமான்டிக்காக பேச ரோகினி முதல்ல போய் கடையை டெவலப் பண்ற வேலைய பாரு என்று திட்டி அனுப்புகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.