ரோகிணி முத்துவை கோர்த்து விட அண்ணாமலையால் மீனா முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் விஜயா ஸ்ருதிக்கு போன் போட்டு வீட்டுக்கு வா மா என்று பேச என் அப்பாவை அடிச்சவர் வீட்டுக்கு என்னால வர முடியாது என்று முகத்தில் அடித்தார் போல் சொல்கிறார். அவன் பண்ண தப்புக்காக நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன் என்று சொல்ல எனக்கு தண்ணீர் தாகமா இருக்கு நீங்க தண்ணி குடிச்சா எனக்கு தாகம் தீர்ந்திடுமா என்று ஸ்ருதி கேட்க விஜயா தீராது என்று சொன்னேன் அப்படித்தான் முத்து பண்ண தப்புக்கு நீங்க மன்னிப்பு கேட்டால் அது எப்படி ஏத்துக்க முடியும் என சொல்ல விஜயா உன்ன பாக்கணும் போல இருக்கு நான் வேணா உங்க வீட்டுக்கு வரட்டுமா என்று கேட்க நான் ஸ்டூடியோவுக்கு கிளம்பிடுவேன் அப்புறம் பேசுறேன் என ஃபோனை வைத்து விடுகிறார்.
அதனைத் தொடர்ந்து பார்வதியிடம் ஸ்ருதி பேசியதை சொல்லி புலம்ப ரவியே அப்படியே விட்டுடாத இப்பவே உன் போனை எடுக்க மாட்றான் உன் வீட்டுக்காரு முத்து ஓட வீட்டை விட்டு வெளியே பார்க்க ரெடியா இருக்காரு, இப்படி எல்லாரும் உன்னை விட்டு போயிட்டா மீண்டும் என்னை மாதிரி தனி மரமா தான் இருக்கணும் என சொல்லிவிட்டு கிளம்பிச் செல்கிறார்.
பிறகு ரோகினி கிச்சனில் மீனாவிடம் சுடு தண்ணி கேட்க மீனா சீரகம் போட்ட தண்ணியை கொடுக்கிறார். கவலைப்படாதீங்க சீக்கிரம் நல்லது நடக்கும் என்று ரோகிணிக்கு சொல்லி அத்தை தான் ரொம்ப ஏமாந்துட்டாங்க, இப்போ திரும்பவும் ரவியை பற்றி யோசித்து கவலைப்பட ஆரம்பிச்சிட்டாங்க என்று சொல்கிறார். ரோகிணி வேற எதை பத்தியும் யோசிக்காம இருந்தா சரிதான் என்று சொல்ல மீனா வேற எதைப்பற்றி யோசிக்கணும் என்று கேட்க ஒன்னும் இல்லை என்று சமாளித்து வெளியே வருகிறார்.
முத்துவும் அண்ணாமலையும் வீட்டுக்கு வர ரவி பெயருக்கு கொரியர் ஒன்று வர அண்ணாமலை ரவி இருக்கும் ஞாபகத்தில் ரவி ரவி என கூப்பிடுகிறார். அடுத்ததாக ரவி இல்லை என்பதை அறிந்து வருத்தப்படுகிறார். இருந்தாலும் அதை வெளிக்காட்டக் கொள்ளாமல் ரவி வந்திடுவான், விஜயா நீ கவலைப்படாத ரவி வந்துருவான் என்று சொல்கிறார். ரோகிணி இதுதான் சாக்கு என முத்து அடித்ததை எடுத்துப் பேசி கோர்த்து விடுகிறார்.
பிறகு எல்லோரும் தூங்கிய பிறகு முத்துவும் மீனாவும் ரவி ஸ்ருதி இந்த வீட்டுக்கு வரணும் மாமா ரொம்ப கவலைப்படுகிறார். மாமா எல்லாரும் ஒண்ணா இருக்கீங்க ஆசைப்படுறாரு நாம தான் ஏதாவது செய்யணும் என்று சொல்கிறார்.
மறுநாள் காலையில் ஸ்ருதி டப்பிங் கிளம்ப அவருடைய அம்மா இது வேலை வேண்டாம் போகாத என்று தடுக்க முயற்சி செய்ய என்னுடைய சுதந்திரத்தில் நீங்க தலையிடாதீங்க என சொல்லிவிட்டு கிளம்பி வருகிறார். டப்பிங் ஆபீஸ் ஸ்ருதியை பார்க்க மீனா வந்திருக்க அதே போல் ஹோட்டலில் ரவியை பார்க்க முத்து வந்திருக்கிறார். என்னடா மாமியார் வீட்லயே தங்கிடலாம்னு முடிவு பண்ணிட்டியா, ஒரு நாள் இருந்தோமா வந்தோமானு இருக்க வேண்டியதுதானே என பேசுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.