மரண பயத்தை காட்டி விஜயாவுக்கு பல்பு கொடுத்துள்ளார் ஸ்ருதி. 

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் இன்றைய எபிசோட்டில் ஸ்ருதி விளக்கேற்றும் முடித்தது விஜயா உப்பு, மிளகாய், பருப்பு ஆகியவற்றில் கையை வைத்து கடைசியாக தண்ணீரில் கை வைக்க சொல்லி சடங்கு செய்கிறார். 

அதைத் தொடர்ந்து அண்ணாமலை என் நண்பர் அரசு வீட்டுக்கு வந்து ஸ்ருதி மற்றும் ரவிக்கு வாழ்த்து சொல்கிறார். பிறகு பாலும் பழமும் கொடுத்து ரவியை பால் குடித்துவிட்டு ஸ்ருதிக்கு கொடுக்க சொன்ன ஏன் அவன் குடிச்சிட்டு நான் குடிக்கணும் நான் குடித்த பிறகு அவன் குடிக்கட்டும் என பாலை குடித்து ரவிக்கு கொடுக்கிறார். பிறகு நான் வாழைப்பழம் சாப்பிட மாட்டேன் ஆப்பிள் எதாவது இருக்கா என்று கேட்க விஜயா இந்த படம் தான் சாப்பிடணும் என்று சொல்ல சுருதி லைட்டாக சாப்பிட்டுவிட்டு ரவிக்கு கொடுக்கிறார். 

அதன் பிறகு விஜயா கிச்சனுக்கு வந்து மீனாவிடம் சமையல் ஆயிடுச்சா என்று கேட்கிறார். மேலும் சுத்திக்கிட்டு போய் பல்ல காமிச்சிட்டு பேசிகிட்டு இருக்காத நீ ஏதாவது சொல்லப் போய் அவ கோச்சிக்கிட்டு வீட்டுக்கு கிளம்பி போயிட போறா என்று பேசிக் கொண்டிருக்க ஸ்ருதி இனிமே உன்னோட வாழ முடியாது, நான் வீட்டுக்கு போறேன் என்னை தேடி வராத என சத்தம் போட விஜய்யா என்னாச்சுன்னு தெரியலையே பதறி அடித்து ஓடி வருகிறார். 

ரவி கேசுவலாக வெளியே நின்று இருக்க விஜயா என்னடா சொன்ன? ஏன்டா சுருதி வீட்டை விட்டு போறேன்னு சொல்றா என கேட்க ரவி நான் ஒன்னும் சொல்லலையே என்று கூறுகிறார். ஸ்ருதி பூஜையறையில் இருந்து வெளியே வர விஜயா என்னம்மா ஆச்சு என்று நான் எதுக்கு வீட்டை விட்டு போகணும் இன்னைக்கு தானே வந்திருக்கேன் நான் டப்பிங் வாய்ஸ் கொடுத்தேன் என்று சொல்கிறார். 

அடுத்து விஜயா ரூம் எல்லாம் சுற்றிக் காட்டி ரோகினிக்கும் பெரிய இடத்திலிருந்து வந்து இருக்கா அவங்க அப்பா மலேசியாவில் பெரிய பிசினஸ் பண்ற அங்க இருக்க மின்ட் டவரே இவங்களுக்கு சொந்தமானது தான் என அளந்து விட ஸ்ருதி அந்த டவர் வரலாற்றை சொல்லி இதை போய் நீங்க மலேசியாவுல சொன்ன உங்கள புடிச்சு ஜெயில்ல போட்டு விடுவார்கள் என்று விஜயாவுக்கு பல்பு கொடுக்கிறார்.

மேலும் உங்களுக்காக கஷ்டப்பட்டு ரவியோட அப்பா கிட்ட பேசி உங்களை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன் என்று சொல்ல ஸ்ருதி இதுக்கெல்லாம் முக்கிய காரணம் மீனா தான் அவங்க தான் என் மனதை மாற்றினார்கள் அம்மா கிட்டயும் போய் பேசினாங்க என்று சொல்லி திரும்பவும் விஜயாவுக்கு பல்பு கொடுக்கிறார். பிறகு எனக்கு டயர்டா இருக்கு கொஞ்சம் தூங்கணும் ரூமுக்கு போலாமா என்று ரவியை கூப்பிட விஜயா இன்னும் ரூமை ரெடி பண்ணவில்லை என்று சொல்கிறார். 

பிறகு சரி சாப்பிட்டு போயிட்டு அந்த வீட்டுக்கு போய் அங்க இருக்க துணி எடுத்துட்டு வந்துடலாம் என்று சொல்லி ரவியை அழைத்துக்கொண்டு செல்ல விஜயா மீனாவின் ரூமுக்கு வந்து சீக்கிரம் இந்த ரூமை கிளீன் பண்ணி கொடு, ரவி, ஸ்ருதிக்கு சாந்தி முகூர்த்தத்துக்கான நேரம் குறித்து இருக்கு என சொல்கிறார். அதெல்லாம் சரிதான் அதுக்கு எதுக்கு இந்த ரூம்? நாங்க தூங்குறது எப்படி என்று கேட்க விஜயா மீனாவின் குடும்ப நிலைமையை பற்றி சொல்லி அவமானப்படுத்துகிறார். 

மீனா நாங்க ஒரே ரூம்ல எல்லாரும் ஒண்ணா படுத்து தூங்குனது சரிதான் ஆனால் நான் எனக்காக இதை கேட்கல அவர் கார் ஓட்டிட்டு உடம்பு வலியோட டயர்டா வருவாரு அவர் எங்க படுத்து தூங்குவது என்று கேட்க மொட்டை மாடிக்கு போகட்டும் இல்ல அவ்வளவு பெரிய ஆள் இருக்கு அங்க படுத்து தூங்கட்டும் என சொல்கிறார். எனக்கு வெளிய படுத்து தூங்குவது ஒரு பிரச்சனையும் கிடையாது ஆனால் அவர் ஒத்துக்கணும்ல என்று கேட்க ஒத்துக்க வை, பொண்டாட்டினு நீ எதுக்கு இருக்க என விஜயா சொல்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.