அண்ணாமலைக்கு நேர்த்த அவமானத்தால் முத்து அதிர்ச்சி கொடுக்க விஜயாவின் திட்டம் பெயிலியர் ஆகிவிட்டது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இது சீரியலின் இன்றைய எபிசோட்டில் பெண் வீட்டார் விஜய்யா வீட்டுக்கு வந்திருக்க அவரது தோழி நீ இன்னமும் அப்படியே காலேஜ்ல பார்த்த மாதிரியே இருக்க ஸ்ரீதேவி மாதிரி இருக்குன்னு சொல்லுவாங்க உனக்கு கமல்ஹாசன் மாதிரி ஒரு மாப்பிள்ளை தான் கிடைப்பான் என்று சொல்லிக்கொண்டே இருப்போம் நீயும் அதே மாதிரி மாப்பிள்ளை தான் கிடைச்சிருக்காங்கன்னு சொல்லிட்டு இருந்த என்று சொல்ல விஜயா அதை எல்லாம் கேட்டு சந்தோஷப்படுகிறார்.

பிறகு மகன்கள் குறித்து விசாரிக்க மனோஜ் கார் டீலர் பிசினஸ் செய்வதாக கதை விடுகிறார். அது மட்டுமல்லாமல் முத்து நிறைய கார் வச்சுட்டு இருக்கான் கார் ஆப்பரேட்டரா இருக்கான் சென்னை முழுக்க நிறைய கார் ஓடுது என சொல்கிறார்.

மேலும் ரவி பாரினில் படிச்சிட்டு வந்து ரெஸ்டாரன்ட் ஆரம்பிக்க போறான், இப்ப ட்ரைனிங் போயிட்டு இருக்கான் என சொல்கிறார். அடுத்ததாக அண்ணாமலை வீட்டுக்கு வர இவர் கல்யாணமாகும் போது கமல்ஹாசன் மாதிரி தான் இருந்தாரு. சிக்ஸ் பேக் எல்லாம் வச்சுட்டு இருந்தாரு என்ன சொல்ல முத்து அப்பா இதெல்லாம் சொல்லவே இல்ல போட்டோல கூட பாக்கலையே என்று சொல்ல அண்ணாமலை நானே பார்த்ததில்லை என கூறுகிறார்.

பிறகு மீனா குறித்து கேட்க அவர் கோவிலுக்கு வெளியில பெரிய பூக்கடை வச்சிட்டு இருக்கா கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து எல்லா போகும் அங்கு வரும் பெரிய டீலர்ஷிப் என சொல்ல முத்து எதுக்கு பொய் சொல்றீங்க என்று சொல்லி மீனா ஒரு சின்ன பூ கடை தான் வச்சுட்டு இருக்கா கண்ணை மூடிக்கிட்டு பூ கட்டுவா நேர்மையா சம்பாதிக்கிற விஷயத்துல பொய் சொல்ல எங்களுக்கு கூச்சமா இல்ல என கூறுகிறார்.

விஜயாவின் தோழி என்ன விஷயம் என்று கேட்க ஒரு ஆளு இவர் ஓட்டுன ட்ரெயின் மேல வந்து விழுந்துட்டாரு, சரி அவருடைய குடும்பத்துக்காக ஏதாவது செய்யலாம் என்று போனா இவரை உருட்டி மறைத்து இவளை இவனுக்கு கட்டி வச்சுட்டாங்க என்று சொல்ல முத்து எப்படி கல்யாணம் நடந்துச்சு ஏன் நடந்துச்சு எல்லாத்தையும் விளாவரியா சொல்லுங்க என விஜயாவுக்கு செக் வைக்கிறார்.

பெண் வீட்டார் பக்கம் வந்திருந்த ஒரு நபர் என்ன சார் நீங்க இவ்வளவு முட்டாளா இருக்கீங்க, இந்த உருட்டல் மிரட்டலுக்கு எல்லாம் பயப்படலாமா பொழைக்கத் தெரியாத ஆளாக இருக்கீங்க என்று அவமானப்படுத்த முத்து கோபப்பட்டு அவரது சட்டையை பிடித்து சண்டை போடுகிறார். இதனால் விஜயாவின் தோழி இந்த சம்பந்தமே வேண்டாம் என கிளம்ப முத்து நாலு பிளேட் பஜ்ஜி 450 ரூபாய் ஜிஎஸ்டி இதெல்லாம் சேர்த்து 750 ரூபாய் என்று சொல்லி பணத்தை வாங்கிக் கொண்டு அவர்கள் வாங்கி வந்த பழத்தை திருப்பிக் கொடுத்து அனுப்புகிறார்.

பிறகு ரவியிடம் அப்பாவுக்கு மரியாதை கொடுக்கும் குடும்பத்தில் இருந்து தான் பொண்ணு எடுக்கணும் என ஸ்ரிக்ட்டா சொல்கிறார் முத்து. முத்து கிளம்பியதும் விஜயா மீனாவை பிடித்து நீ இதெல்லாம் திட்டம் போட்டு தான் செய்கிற, உன் திட்டம் எதுவும் பலிக்காது எவ்வளவு நாளைக்கு இப்படி ஆடுறேன்னு பாக்கலாம் என கோபப்படுகிறார்.

மறுபக்கம் ஸ்ருதிக்கு பிஸூக்கும் சம்பந்தம் பேசி முடிக்கின்றனர்‌. வரும் 15ஆம் தேதி கல்யாணத்த வச்சுக்கலாம் என தட்டு மாற்றிக் கொள்கின்றனர். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.