முத்துவை ரோகிணி சிக்க வைக்க மனோஜ்க்கு செக்மேட் காத்திருந்தது. 

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் வீட்டுக்கு வந்த ரோகினி விஜயாவிடம் போட்டுக் கொடுக்க அவர் என் வீட்டு பத்திரத்தை வைத்து அந்த கார வாங்கி கொடுத்திருக்காரு அப்போ அந்த காரு எனக்கு தானே சொந்தம், அத அவன் எப்படி விற்கலாம் என்று கோபப்படுகிறார். மேலும் ரோகிணி நாம கேட்கிறதை விட கேட்க வேண்டியவங்க கேட்டதும் சரியா இருக்கும் என்று சொல்ல விஜயா அண்ணாமலையிடம் விஷயத்தை சொல்லி கோபப்பட அவர் உனக்கு யார் சொன்னது என்று கேட்க பார்வதி என மழுப்புகிறார்.  ‌ 

அவர் முத்து வந்ததும் கேட்கிறேன் பேசிக்கலாம் என்று சொல்ல மறுபக்கம் மீனா பூக்கடைக்கு சென்று இருக்க அங்கு முத்து ஒரு பாட்டியை கூட்டிச் செல்ல ஆட்டோவில் வந்து இறங்க அதை பார்த்து மீனாவும் அதிர்ச்சி அடைகிறார். இவர் எதுக்கு ஆட்டோ ஓட்டுறாரு கார் என்ன ஆச்சு என கன்பியூஸ் ஆகிறார். 

பிறகு மீனா வீட்டுக்கு வர விஜயா அவரை நிற்க வைத்து உன் புருஷன் எது பண்ணாலும் உன்கிட்ட சொல்லிக்கிட்டு தானே பண்ணுவான், கார் என்ன ஆச்சு என்று கேட்க எனக்கு தெரியாது என்று கூறுகிறார். அண்ணாமலை முத்து ஆட்டோ ஓட்டுற விஷயம் உனக்கு தெரியுமா என்று கேட்க இல்ல மாமா இப்பதான் தெரியும் என்று சொல்ல விஜயா எப்படி நாங்க சொல்லியா என்று கேட்க இல்ல அத்தை நானும் இப்பதான் ஆட்டோ ஓட்டுவதை பார்த்தேன் என்று சொல்கிறார். 

கார் ஓட்டிட்டு இருந்தவன் இப்ப தெருத்தெருவா ஆட்டோ ஓட்றான் கார் என்ன ஆச்சு என்று கேட்க மீனா காரையும் தெருவுலதான் ஓட்டுவாங்க கடலில் ஓட்ட முடியாது என கவுண்டர் போட்டு விஜயாவை கலாய்க்கிறார். பிறகு முத்து வீட்டுக்கு வர விஜயா உக்கார வைத்து முத்துவிடம் கேள்வி மேல் கேள்வி கேட்க ரோகினி அன்னைக்கு மனோஜ் பொய் சொன்னாருன்னு இவரு டிவில எல்லாம் போட்டு காட்டினார், இன்னைக்கு இவர் எதுக்கு விஷயத்தை வீட்ல மறைச்சாரு என்று கேள்வி கேட்கிறார். 

ஆமா நான் ஆட்டோ தான் ஓட்டுறேன், பார்க்க்-ல படுத்துட்டு பொண்டாட்டியை ஏமாத்தல என்று பதிலடி கொடுக்கிறார். அது என் வீட்டு பத்திரத்தை வைத்து வாங்குன காரு, வித்த பணத்தை நீ என்கிட்ட தானே கொடுத்து இருக்கணும் என்ற விஜயா கேட்க முத்து கொடுத்து விடலாம் இவன் ஒரு 27 லட்ச ரூபாய் பணத்தை தூக்கிட்டு ஓடினான் அதை எடுத்து வைங்க அடுத்த நிமிஷம் செட்டில் பண்ணிடுறேன் என்று செக்மேட் வைக்க மனோஜ் எனக்கு வேலை இருக்கு என்று நைசாக நழுவி கொள்கிறார். 

அதைத்தொடர்ந்து அண்ணாமலை கார் என்ன ஆச்சு ஏன் வித்த என்ன பிரச்சனை என்று கேட்க கொஞ்சம் அவசர தேவைப்பா அதனால வித்துட்டேன். கண்டிப்பா அந்த பணத்தை அம்மாகிட்ட குடுத்துடுறேன்‌. நீயே உடம்பு முடியாம இருந்த, அதனாலதான் உன்கிட்ட சொல்ல வேண்டாம்னு நினைச்சேன். அதுக்கான காரணம் என்ன என்பது இப்ப சொல்ல முடியாது ஆனா கண்டிப்பா ஒரு நாள் உன்கிட்ட சொல்லுவேன் என்று சொல்லிவிட்டு எழுந்து செல்கிறார். 

பிரச்சனை பெருசா ஆகாமல் பல்பு வாங்கிய ரோகிணி என்ன ஆன்ட்டி அங்கிள் அவரை திட்டுவார் என்று பார்த்தால் எதுவுமே சொல்லல என்று கேட்க அவர் அப்படித்தான்மா இனிமே நாம என்ன பண்ண முடியும் என்று விஜயாவும் கை விரித்து விடுகிறார். 

அதைத்தொடர்ந்து மீனா கிச்சனில் இருக்க முத்து தண்ணீர் குடிக்க வர மீனா காரை பத்தி கேள்வி கேட்க வர அவர் கேட்க நினைக்கும் கேள்விகள் அனைத்தையும் முத்துவே கேட்க மீனா என்ன அறிவாளினு நினைப்பா? நீங்க கண்டிப்பா காரணம் இல்லாம காரை வித்திருக்க மாட்டீங்க, என்ன காரணம்? என்று கேட்க சத்யாவை பற்றி பேசி கோபப்பட அவனுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் என்று மீனாவும் கோபப்பட ஒரு பொண்ணு வெளியே போனா எங்க போற என்ன பண்றாங்க கேள்வி கேட்கிற நீங்க ஒரு பையனை மட்டும் கண்டுக்க மாட்டுறீங்க? எதுக்கு கவலைப்பட மாட்டறீங்க? எல்லா பெற்றோரும் இப்படித்தான் இருக்கீங்க என்று பதிலடி கொடுத்துவிட்டு வெளியே செல்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.