பணத்தை கொடுத்து மீனா வருத்தப்பட மறுநாள் காலையில் முத்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். 

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மீனா ஸ்ருதி கொடுத்த 2000 ரூபாய் பணத்தை கொடுத்து எல்லாரும் சொல்றது சரிதான் நான் இந்த வீட்ல கூட்டவும் சமைக்கவும் தான் லாயக்கு, எல்லாரும் படிச்சிருக்காங்க வேலைக்கு போறாங்க ஆனா நான் அப்படி கிடையாது இல்ல பூ கட்டுவது ஒரு பெரிய வேலைன்னு நெனச்சிட்டு இருந்தேன் ஆனா அதெல்லாம் ஒண்ணுமே இல்லன்னு புரிஞ்சுகிட்டேன் என்று சொல்லி வருத்தப்பட முத்து ஆறுதல் கூறுகிறார். 

பிறகு மீனா ஸ்ருதி கொடுத்த 2000 ரூபாய் பணத்தை முத்துவிடம் கொடுத்து எனக்கு முகத்தில் அடிச்ச மாதிரி சொல்லி ஸ்ருதியிடம் திருப்பி கொடுக்க மனசு வரல, அதனால் இத நீங்க ரவி கிட்ட கொடுத்துடுங்க என்று சொல்லி கொடுத்து விடுகிறார். 

மறுநாள் விடியற்காலையில் அஞ்சு மணிக்கு மீனாவின் அம்மா வீட்டில் திடீரென யாரோ கதவைத் தட்ட இவர்கள் கந்துவட்டி காரனாக இருப்பான் என்று பயந்து கையில் துடைப்பம் உள்ளிட்ட பொருட்களை வைத்துக்கொண்டு கதவை திறக்க முத்து பயந்து அலறுகிறார். 

அடுத்ததாக முத்து அவர்கள் எல்லோரையும் குளித்து ரெடியாக சொல்கிறார் சத்யாவிடம் ஒரு பேப்பரை கொடுத்து நீ போய் இதெல்லாம் பண்ணிக்கிட்டு நேரா நம்ம வீட்டுக்கு கீழே வந்துடு என்று அனுப்ப என்ன பேப்பர் அது காட்டுங்க என்ன எழுதி இருக்கு என்று சீதா கேட்க முத்து அது அவனோட வேலை, நீ உங்களோட பூ கட்டுற எல்லாருக்கும் போன் பண்ணி கொடு நான் உங்ககிட்ட பேசணும் என்று சொல்லி எல்லாரையும் முத்து வீட்டுக்கு வர சொல்கிறார். 

அடுத்ததாக வீட்டுக்கு வரும் முத்து மீனாவை குளிக்க சொல்லி ரெடியாக சொல்லி அனுப்ப மீனா தொடர்ந்து என்ன விஷயம் என்ன இது என்று கேட்டுக்கொண்டே இருக்க பேசாத எல்லாம் கொஞ்ச நேரத்துல உனக்கே தெரியும் என்று ரெடியாக சொல்கிறார். மீனாவும் ரெடி ஆகி வந்த பிறகு வீட்டில் இருப்பவர்களையும் ரெடியாக சொல்கிறேன் என்று எல்லாரையும் ரெடியாக சொல்ல எல்லோரும் எதுவும் புரியாமல் நிற்கின்றனர். 

ரோகிணி அங்கிள் நாங்க எல்லாரும் வேலைக்கு போகணும் என்று சொல்ல முத்து எல்லாம் நல்ல விஷயம் தான் பா.. ரெடியாக சொல்லு, அது பாத்தா கண்டிப்பா நீ சந்தோஷம்தான் படுவ என்று சொல்ல அண்ணாமலை அவன் சொன்னா ஏதோ ஒரு விஷயம் இருக்கும் ரெடியாயிட்டு வாங்க என்று சொன்னதும் எல்லோரும் ரெடியாகி வருகின்றனர். 

முத்து எல்லாரையும் கூட்டிக்கொண்டு கீழே வர வெளியே மீனாவின் குடும்பமும் அவர்களுடன் பூ கட்டுபவர்களும் இருப்பதை பார்த்து மீனா சந்தோஷப்படுகிறார். விஜயா இவங்கள வரவேற்கத்தான் எல்லாரையும் ரெடி ஆகி கீழ வர சொன்னானா என்று முகத்தை திருப்பிக் கொண்டு மேலே செல்ல அண்ணாமலை விஜயா இப்படி வா என்று வெளியே கூட்டி வருகிறார். 

வெளியே ஏதோ ஒரு கடை ஒன்று போட்டு தார்ப்பாய் போட்டு மூடப்பட்டிருப்பதை பார்த்து விஜயா இங்கு யாரு கடை போட்டது என்று கன்ப்யூஸ் ஆகிறார். மனோஜ் இது ரெசிடெண்ட்சியல் ஏரியா இங்க கடை எல்லாம் போடக்கூடாது நான் இப்பவே போலீஸ்க்கு போன் பண்ணி கம்பளைண்ட் பண்றேன் என்று போனை எடுக்க பண்ணு பண்ணு அம்மாவை தான் கைது பண்ணுவாங்க என்று முத்து ஷாக் கொடுக்கிறார். 

பிறகு தார்பாயை எடுக்க மாதர் குல தலைவி விஜயா மலர் அங்காடி என்ற பெயரில் பூக்கடை வைத்திருப்பது தெரிய வருகிறது. மேலும் உரிமையாளர் மீனா என குறிப்பிடப்பட்டிருப்பதை பார்த்து மீனா சந்தோஷப்படுகிறார். அண்ணாமலையும் இதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறார். 

முத்து மீனா இனிமே இந்த கடைக்கு நீ தான் ஓனர்.. இனிமே உன்னை நான் ஓனர் அம்மான்னு தான் கூப்பிடுவேன் என்று சொல்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.