வாசுதேவன் மீனாவை பிச்சை எடுக்க சொல்ல பொறுமை இழந்துள்ளார் முத்து. 

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் வாசுதேவன் மீனாவின் மீது திருட்டுப்பழி போட முத்து பொறுமையாக மீனா அப்படி செய்திருக்க மாட்டார் என்று எடுத்து சொல்கிறார். 

ஆனால் வாசுதேவன் மீனா நகை திருடுனதை நான் என் கண்ணால பார்த்தேன். அவ குடும்பத்த பத்தி எனக்கு நல்லாவே தெரியும் சொல்லி இருக்கா அவ தம்பி கூட உங்க வீட்டு வைக்க திருடினாமே, அதுக்கப்புறம் தான் இந்த கல்யாணமே நடந்ததுன்னு சொன்னா.. உங்க அப்பா அம்மா உன்னை இந்த மாதிரி வளர்த்து வெச்சிருக்காங்க பூக்கடை வச்சிட்டு தானே இருக்க, அதுவும் பத்தலனா பிச்சை எடுக்க வேண்டியதுதானே என்று அவமானப்படுத்தி பேச பொறுமைய இழந்த முத்து வாசுதேவன் கன்னத்தில் பளார் என ஒரு அறை விடுகிறார்.  ‌

அண்ணாமலை முத்துவை பொறுமையா இருடா என பிடித்து நிற்கவைக்க இவ்வளவு நேரம் நான் பொறுமையாதானப்பா இருந்தேன் அந்த ஆளு என்ன எல்லாம் பேசுறான் இன்று கோபப்படுகிறார். விஜயா அவர் சொன்னதுல என்னடா தப்பு இருக்கு அந்த குடும்பம் எல்லாம் தெரிந்திருக்கு என்று மீனாவின் குடும்பத்தை அவமானப்படுத்துவது போல இதுதான் சாக்குனு அவங்களை பேச வேணாம்னு சொல்லுப்பா என்று முத்து கோபப்படுகிறார். 

ரவியும் ஸ்ருதியும் அங்கு வந்த விட ஸ்ருதி நடந்தது என்ன என்று தெரியாமல் எங்க அப்பா மேல எப்படி கைய வைக்கலாம் என்று விட்டுவிடும் கோபப்படுகிறார். அண்ணாமலை சுருதி இங்கு நடந்தது என்னன்னு தெரியாம பேசாதம்மா என்று சொல்ல என்ன வேணா நடந்திருக்கட்டும் அவர் எப்படி எங்க அப்பாவை அடிக்கலாம் என்று கோபப்படுகிறார். முத்து நாங்க இங்க வந்ததுதான் தப்பு என்று மீனாவை கூட்டிக்கொண்டு வீட்டுக்கு கிளம்புகிறார். 

பிறகு பேசி பேசி பிரச்சனையை பெருசாக்குனது வாசுதேவன் தான் இந்த பிரச்சனையை இதோட விடுவோம் என்று சொல்கிறார். வாசு தேவனின் மனைவி இதுக்கு தான் அந்த குடிகாரனை வரக்கூடாதுன்னு சொன்னேன் இப்போ எல்லாருக்கு முன்னாடியும் எங்க மானம் போச்சு எங்க சொந்தக்காரங்க முன்னாடி என் வீட்டுக்காரனாவே கைய வச்சுட்டான். அவன் இருக்க வீட்ல எப்படி எங்க பொண்ணு வாழ அனுப்புறது என்று சொல்கிறார். வாசுதேவன் ஸ்ருதியிடம் சென்று உனக்காக ஆசை ஆசையா எல்லா ஏற்பாடும் பண்ண ஆனால் அவ என்ன அவமானப்படுத்திட்டா அச்சானை அவமானப்படுத்த வீட்டுக்கு நீ போகணும்னு யோசிச்சுக்க என சொல்கிறார்.

பிறகு அண்ணாமலை எதுவாக இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம் ரவி ஸ்ருதியை கூட்டிட்டு வீட்டுக்கு வா என்று சொல்ல சுருதி நான் வரல என்று ரூமுக்குள் சென்று விடுகிறார். ரவி நீ பேசி சமாதானப்படுத்தி வீட்டுக்கு கூட்டிட்டு வா என்று சொல்லி அண்ணாமலை கிளம்ப விஜயா ஸ்ருதியிடம் பேச முயற்சி செய்ய முடியாமல் போகிறது. ரோகிணி நல்ல வேலை பெரிய பிரச்சனை நடந்திருச்சு, என்னை மறந்துடுவாங்க என சந்தோஷப்படுகிறார். 

பிறகு வீட்டுக்கு வந்த விஜயா உச்சகட்ட டென்ஷனில் இருக்கிறார். மனோஜ் அங்கேயே சாப்பிடல சாப்பாடு ஏதாச்சு ஆர்டர் போடவா என்று கேட்க இப்போ உனக்கு சாப்பாடு தான் முக்கியமா என்று கோபப்படுகிறார் விஜயா. அந்த குடிகாரனை கூப்பிட வேணாம்னு படிச்சு படிச்சு சொன்ன யாராச்சு என் பேச்சை கேட்டாங்களா? சம்பந்த வீட்டுக்காரர் முன்னாடி என் மானம் மரியாதை எல்லாம் போச்சு அவங்க கிட்ட இல்லனா எப்படி பேசுவேன் எனக்கு எப்படி மரியாதை கொடுப்பாங்க என்று ஆவேசப்படுகிறார். 

அண்ணாமலை வீட்டுக்கு வர இப்போ உங்களுக்கு சந்தோஷமா என்று கோபப்படுகிறார். அவர் பேசினார் என்றால் இவன் எப்படி கையில் நீட்டி அடிக்கலாம்? மீனாவ பத்தி தப்பா பேசினா அவன் எப்படி அமைதியா இருப்பான் என்று அண்ணாமலை கேட்க ஏன் அவ குடும்பத்துக்கு என்ன இது புதுசா அவ பண்ணியிருந்தாலும் பண்ணி இருப்பார் என்று சொல்ல அண்ணாமலை விஜயாவை பிடித்து திட்டுகிறார். 

நீ நம்ம வீட்டு நகைன்னு சொன்னதுக்காகவே அவ தாலிய கழட்டி உங்கிட்ட கொடுத்திட்டு மஞ்சள் கயிறு போட்டுக்கிட்டு இருக்கா அப்படி இருக்கவே திருடுவாளா? இப்படி எல்லாம் பேசாத வாய் அழுகிடும் என கோபப்படுகிறார். ஸ்ருதி இனிமே இங்க வர மாட்டா, ரவியும் அவ கூடவே போய்ட்டான் என்று சொன்ன நான் ரவி கிட்ட பேசிக்கிறேன் என்று அண்ணாமலை ரூமுக்கு வருகிறார். 

ரவிக்கு போன் பண்ணி ஸ்ருதியை சமாதானப்படுத்தி வீட்டுக்கு கூட்டிட்டு வா என்று சொல்ல ரவி எனக்கு மட்டும் எதுக்குப்பா இப்படி மாறி மாறி பிரச்சனை வருது யாரோ பண்ண தப்புக்கு நான் எதுக்கு கஷ்டப்படணும்? என்று பேச நீ வீட்டுக்கு வா எதுவாக இருந்தாலும் பேசிக்கலாம் என்று சொல்ல அங்க வரணுமானு தோணுது என்று ரவி அதிர்ச்சி கொடுக்க அண்ணாமலை அப்போ உனக்கு நாங்க எல்லாம் வேண்டாமா என்று கேட்க எனக்கு தெரியலப்பா நான் அப்புறம் பேசுறேன் என ஃபோனை வைத்து விடுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.