சிந்தாமணி போடும் திட்டம், விஜயா எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
சிந்தாமணி புதிய திட்டம் ஒன்று போட விஜயா முடிவு ஒன்று எடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவிற்கு முத்து ஜூஸ் போட்டு கொடுத்துக் கொண்டிருக்க முருகனும் வித்யாவும் மீனாவை பார்க்க வருகின்றனர் உடனே முத்து இவங்க ரெண்டு பேரும் கூட்டு களவாணிகள் தானே என்று சொல்ல என்ன பண்றது பிரண்டா போயிட்டா நானும் ஒரு கட்டத்துக்கு மேல இதெல்லாம் வேண்டாம் உண்மைய சொல்லிடு என்று சொல்லிட்டேன் ஆனா அவ தான் கேட்கல அதே மாதிரி ரோகினி பத்தி எனக்கு நல்லா தெரியும் அவ ஒரு ஆளை எப்படி பேசினால் அவங்க பயப்படுவாங்கன்னு தெரிஞ்சு பேசுவா அதனால தான் மீனாவ பயமுறுத்தி இப்படி பண்ணிட்டா என்று சொல்லுகிறார். கிரிஷ் ஓட உயிருக்கு ஆபத்து ஆகிடும்னு நினைச்சு தான் மீனா உங்க கிட்ட உண்மைய சொல்லல என்று சொன்னால் அப்போ இப்போ எந்த முடிவையும் எடுக்கலையே என்று முத்து சொல்லுகிறார்.
நீங்க ரோகினியை சாதாரணமா எடை போடாதீங்க எனக்கு தெரிஞ்ச வரைக்கும் இப்போ அவ ஒரு ஆள புடிச்சிருக்கா அவங்க உதவிய வச்சு மனோஜ் எப்படியாவது அடைந்தே தீருவார் என்று சொல்ல உனக்கு எங்க அம்மாவ பத்தி தெரியாது அவங்க ஒரு முடிவு எடுத்தாங்கனா அதுல இருந்து மாத்த முடியாது என்று சொல்ல பிறகு முருகன் வித்யா இருவரும் மீனா எந்த தப்பும் இல்லை நீங்க வழக்கம் போல சந்தோஷமா வாழுங்க என்று சொல்லிவிட்டு சென்று விடுகின்றனர் உடனே ரவியும் ஸ்ருதியும் வந்து மீனாவை பார்க்க உடனே முத்து சரி நீங்க இருங்க நான் கிளம்புறேன் என சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார் ஸ்ருதி பேசாம டைவர்ஸ் கொடுத்துட்டு போயிடலாம் இவங்க தேவையில்லாம பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்காங்க என்று சொல்ல ரவி திடீர்னு அப்படி எதுவும் பண்ண முடியாது பேசி இதுதான் முடிவு பண்ணனும் நீ வீட்ல வந்து இப்படி பேசிகிட்டு இருக்காத நான் வேலைக்கு கிளம்புறேன்னு சொல்லிவிட்டு அவரும் சென்று விடுகிறார்.
மறுபக்கம் சிந்தாமணி ரோகினி அழைத்துக் கொண்டு வந்து வேறொரு வீட்டில் தங்க வைக்கிறார் அப்போது இந்த வீட்டில உன் பையன் உங்க அம்மாவை கூட நீ கூட்டிட்டு வந்து வச்சுக்கோ உனக்கு என்ன உதவி எப்ப வேணும்னாலும் நீ என்கிட்ட கேளு உனக்காக நான் இருக்கேன் என்று சொல்ல நான் உங்களுக்காக என்ன செய்யப் போறேன்னு தெரியல என்று சொல்லுகிறார். ஒண்ணுமே தெரியாம என்ன நடக்க போகுதுன்னு புரியாம இருந்த இப்ப நீங்க தான் என் கூட இருக்கீங்க நான் மனோஜ் கூட எப்படியாவது சேர்ந்து வாழணும் என்று சொல்ல அது நான் பார்த்துக்கிறேன் அது என்னோட பொறுப்பு முதல்ல அந்த வீட்ல என்ன நடக்குதுன்னு நாம தெரிஞ்சுக்கணும் முதல்ல நான் போய் மாஸ்டரை பார்க்கிறேன் இப்போ அவங்க எல்லாரும் என் மேல தான் தப்பு சொல்லுவாங்க முதல்ல அதை மாத்தணும் என்று சொல்லுகிறார். நான் முதல்ல போறேன் நீ கொஞ்ச நேரம் கழிச்சு அந்த வீட்டுக்கு வா என்று சொல்ல ஏற்கனவே பிரச்சினையா இருக்கு இப்ப வந்தா பெரிய பிரச்சினையாகும் என்று சொல்ல அப்படி வர்றதுதான் நல்லது அவங்க உன்னை ஏதாச்சு திட்டும்போது நான் வீடியோ எடுத்துக்கிறேன் ஏன்னா டைவர்ஸ் ஏதாவது பிரச்சினை வரும்போது அந்த வீடியோவை காட்டுனா உங்க மாமியார் உன்ன கொடுமை படுத்தின மாதிரி இருக்கும் நீ உன்னோட டிரஸ் எடுத்துட்டு போக வந்தேன்னு சொல்லு என்று சொல்லி ஐடியா கொடுக்கிறார்.
மறுபக்கம் மனோஜ் பாரில் குடித்துவிட்டு அவரது நண்பர் சந்தோஷிடம் ரோகிணி பற்றிய உண்மைகளை சொல்லி புலம்பி கொண்டு இருக்கிறார்.நான் போற அரை மணி நேரம் கழிச்சு நீ வா என்று சொல்லிவிட்டு சிந்தாமணி செல்கிறார் மறுபக்கம் முத்துவும் மீனாவும் வீட்டுக்கு வர குடும்பத்தில் இருப்பவர்கள் நலம் விசாரிக்க விஜயா மீனாவை திட்டுகிறார் இவை என்னைக்கு இந்த வீட்டு வாசப்படி கால் எடுத்து வச்சாலும் அதுக்கு அப்புறம் எதுவுமே சரியில்ல என்று சொல்ல முத்து அமைதியாகவே இருக்கிறார் உடனே மீனா ரோகினி கூட்டிட்டு வந்தது நான் கிடையாது என்று சொல்ல உடனே விஜயா என்ன சொல்லுகிறார்? அதற்கு முத்துவின் பதில் என்ன? என்பதை இன்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

