சுருதி எடுத்த முடிவு, நீத்துவால் கடுப்பான ரவி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

Web Ads

ஸ்ருதி முடிவு ஒன்று எடுக்க, நீத்து செய்த செயலால் கடுப்பாகி உள்ளார் ரவி.

siragadikka asai serial today episode update 28-01-26

siragadikka asai serial today episode update 28-01-26

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்று சிறகடிக்க ஆசை. இன்றைய எபிசோடில் மீனா ஸ்ருதியிடம் வீட்டுக்கு வரும்படி கூப்பிட அதற்கு அவர் அதற்கு ஒரு கண்டிஷன் இருக்கு ரவி அந்த ஹோட்டலுக்கு போகக்கூடாது என்று சொல்ல போக மாட்டாரு நாங்க நிறுத்திடுவோம் என்று மீனா சொல்ல அது மட்டும் இல்ல அந்த நீத்து ரவியை லவ் பண்ணலாம்னு சொல்லணும் அதுவும் இல்லாம என்கிட்ட வந்து மன்னிப்பு கேட்கணும் சோசியல் மீடியாவில் அவங்க போட்டோ போஸ்டுக்கு மன்னிப்பு கேக்கணும் என்று லிஸ்டை அடுக்கி கொண்டு போக மீனா சரி அதெல்லாம் நடக்கும் நீங்க வீட்டுக்கு வாங்க என்று கூப்பிட ஸ்ருதி வர முடியாது என்று சொல்லிவிடுகிறார் வேறு வழி இல்லாமல் ரவியும் மீனாவும் வந்து விடுகின்றனர்.

Web Ad 2

பிறகு வீட்டில் முத்து மனோஜ் ரவி மூவரும் நீத்து விஷயம் பற்றி பேசிக் கொண்டிருக்க முத்து வேற வழி இல்ல நீ அதுக்கு போன் போடு இனிமே ரெஸ்டாரண்டுக்கு வேலைக்கு வர மாட்டேன்னு சொல்லு என்று சொல்ல ரவியும் போன் போட்டு இனிமே உங்க ரெஸ்டாரண்டுக்கு நான் வேலைக்கு வரமாட்டேன் நீங்க ஏன் இப்படி நடந்துக்கிட்டீங்க என்று கேட்க மீண்டும் முத்துவிடம் பேசி அது போலவே நீத்து பேச ரவி கடுப்பாகிறார். எனக்கு தெரியும் ரவி நீங்க வரமாட்டீங்கன்னு அதனாலதான் நான் ஆல்ரெடி செப் அரேஞ்ச் பண்ணிட்டேன் அரேஞ்ச் பண்ணதுக்கு அப்புறம் தான் உங்ககிட்ட நான் என்னோட காதலை சொன்னேன் என்று சொல்லுகிறார் இப்போ நீங்க வந்து கேப்பீங்களா மாட்டீங்களா என்று கேட்க நான் எதுக்கு கேட்கணும் எனக்கு பொய் சொல்ல வராது ரவி நான் உண்மையா உங்களை காதலிக்கிறேன் என்று சொல்ல ரவி நான் கல்யாணம் ஆனவன் என்று சொல்லுகிறார்.

நீங்க கல்யாணம் ஆனவர்கள் தான உங்கள நான் லவ் பண்ண சொல்லலையே கல்யாணமும் பண்ணிக்க சொல்லல நான் லவ் பண்றேன் அவ்வளவுதான் என சொல்லி ஃபோனை வைத்து விடுகிறார். மறுநாள் காலையில் அண்ணாமலை முத்து மீனாவிடம் ரவிஸ்ருதி விஷயம் பற்றி கேட்க நீத்து பேசியதையும் ஸ்ருதி சொன்னதையும் அண்ணாமலை இடம் சொல்ல அண்ணாமலை விஜயாவை சுருதியிடம் பேச சொல்லுகிறார். முதலில் விஜயா பேச மறுக்க அண்ணாமலை பேச சொல்லுகிறார். ரவி வேண்டாமா மரியாதை இல்லாம பேசுவா என்று சொல்லாதடா என்கிட்ட மரியாதை தான் பேசுவா என்று சொல்லுகிறார் உடனே விஜயா ஃபோனை ஸ்பீக்கரில் போட்டு பேச சுருதி எடுத்தவுடன் யார் பேசுறது என்று கேட்க குடும்பத்தில் இருப்பவர்கள் சிரிக்கின்றனர் உடனே நான் அத்தை பேசுற என்று சொல்ல எந்த அத்தை என்று கேட்க உடனே நான் விஜயா பேசுற மாதிரி சொல்லுங்க நம்பர் பாக்காம எடுத்துட்டேன் என்று சொன்ன சரி நீ வீட்டுக்கு வாமா என்று சொல்ல எந்த வீட்டுக்கு என்று கேட்கிறார்.

நம்ம வீட்டுக்கு தான்மா இன்னைக்கு இருந்தாலும் உன்னோட வீடு என்று சொல்ல அந்த நீத்து மன்னிப்பு கேட்கிற வரைக்கும் நான் வரமாட்டேன் என்று உறுதியாக சொல்லி போனை வைத்து விடுகிறார். பிறகு மீனா என்ன சொல்லுகிறார்? ரோகிணி 250 வீட்டிற்க்கான பர்னிச்சர் ஆர்டரை பேச வர என்ன நடக்கிறது ?என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikka asai serial today episode update 28-01-26

siragadikka asai serial today episode update 28-01-26