மனோஜை காப்பாற்றிய முத்து, நிறைவேறிய சிந்தாமணி ரோகினியின் திட்டம்..இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
மனோஜை முத்து காப்பாற்ற, சிந்தாமணியும் ரோகிணியும் போட்ட திட்டம் நிறைவேறி உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா கண்டிப்பா நம்ம மனோஜ்க்கு நல்ல படிச்ச பொண்ணு அழகான பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி வைப்பேன் என்று சொல்ல சரி உங்க இஷ்டம் என சொல்லிவிட்டு குடும்பத்தினர் சென்று விட்டார்கள்.முத்துவும் நானும் சவாரிக்கு கிளம்புறேன்பா என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார் மறுபக்கம் மனோஜ் ஃபுல்லா குடித்துவிட்டு காரை எடுக்கப் போக சந்தோஷ் நான் வேணா ஆட்டோ புக் பண்ணி தரேன் என்று சொல்லியும் கேட்காமல் மனோஜ் காரை எடுக்கப் போக அந்த நேரம் பார்த்து நான்கு பெண் போலீசுவர சந்தோஷ் அவர்களை பார்த்தவுடன் சென்று விடுகிறார்.
உடனே அவர்கள் வந்து என்ன குடிச்சிருக்கியா என்று கேட்க இல்லை என்று மனோஜ் சொல்லுகிறார் அது உன்ன பார்த்தாலே தெரியுது என்று சொல்லிவிட்டு உடனே பக்கத்தில் இருக்கும் போலீசிடம் ரோகிணி போய் டெஸ்ட் பண்ற மெஷின் எடுத்துட்டு வா என்று சொல்ல ரோகிணியா அந்த ரோகிணிக்கு இரண்டு கல்யாணம் ஆயிடுச்சு ரெண்டு புருஷன் என்று சொல்ல அந்த போலீஸ் பெண்மணி கண்கலங்கி அழுகிறார். பாருங்க மேடம் எனக்கு இன்னும் ஒரு கல்யாணம் கூட ஆகல இவர் ரெண்டு புருஷன்னு சொல்றாரு. யாருன்னா எதனா பார்த்தா என்ன நினைப்பாங்க என்று அழுகிறார். உன்னோட ஸ்டேஷன்ல போய் தான் புரிய வைக்கணும் என்று மனோஜை அவர்கள் அரெஸ்ட் பண்ணி இழுத்துப் போக அந்த வழியில் முத்து வருகிறார். உடனே அவரிடம் என்ன விஷயம் என்று கேட்க நீங்களே கேளுங்க படிச்சவர் மாதிரி இருக்காரு குடிச்சிட்டு ரோகிணிக்கு இரண்டு கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொல்றாரு அதனால அவங்க அழறாங்க என்று சொல்லுகிறார்.
இப்பதான் மேடம் எனக்கு புரியுது அவனோட வைஃப் ரோகினி ஏற்கனவே அவங்க கல்யாணம் ஆகிட்டு இவன ரெண்டாவதா மறைச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க அதுல தான் இப்படி ஆயிட்டான் என்று சொல்ல சரி இவனை பார்க்கவும் கஷ்டமா தான் இருக்கு கூட்டிட்டு போங்க என்று சொல்ல முத்து காரில் அழைத்துச் செல்கிறார் மறுபக்கம் சிந்தாமணி வந்து விஜயாவிடம் பேச உடனே திட்டி கண்கலங்கி விஜயாஉம் அழுது பேச ரவி எங்க வீட்ல தான் பிரச்சனை என்னமோ உங்க வீட்ல பிரச்சனை மாதிரி அழுவுறீங்க என்று கேட்கிறார். மாஸ்டரும் எனக்கு கூட பொறந்தவங்க மாதிரி தான் என்று சொல்லுகிறார்.
அந்த ரோகினியை ஏதாவது பண்ணனும் மாஸ்டர் இப்ப மட்டும் என் கண்ணு இதுல வந்தா நான் என்ன பண்ண போற பாருங்க என்று சொல்ல கொஞ்ச நேரத்தில் ரோகினி வாசலில் வந்து நிற்கிறார் வழக்கம்போல் விஜயா ரோகிணி வந்தவுடன் உள்ளே விட வரவிடாமல் அசிங்கப்படுத்தி பேச உடனே அதனை சிந்தாமணி வீடியோ எடுக்க ஆரம்பிக்கிறார். என்னோட துணி தான் எடுக்க வந்தேன் என்று ரோகினி சொல்ல மாமா உங்க அப்பா வீட்டிலிருந்து கோடி கோடியா எடுத்துட்டு வந்துடலாம் எடுத்துட்டு போக வந்துட்டியா நீ உள்ளே வராத நானே தூக்கி வெளியே விசிறி அடிக்கிற எடுத்துட்டு போ என்று சொல்ல மீனா வேணாம் அத்தை நீங்களா எடுத்து போட்டீங்கன்னா ஏதாவது பிரச்சனையா ஆயிடும் அவங்களையே எடுத்துட்டு போட்டும் என்று சொல்ல உடனே சிந்தாமணி இவ என்ன நம்ம திட்டத்தை நேரடியாக சொல்றா என்று சொல்லிவிட்டு தயங்க விஜய்யா கேட்காமல் ரோகிணியின் பெட்டிகளை தூக்கி வெளியில் அடித்து விட்டு அவரை தள்ளி விட சிந்தாமணி எல்லோரையும் வீடியோ எடுக்கிறார். பிறகு மனோஜ் வர என்ன நடக்கிறது? ரோகினி என்ன சொல்லுகிறார்? முத்து என்ன சொல்ல போகிறார்? என்பதை இன்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

