சீரியல் நடிகை சம்யுக்தா ட்ரிபிள் கேம் ஆடிய விஷயம் ஆடியோ ஒன்றின் மூலம் அம்பலம் ஆகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் நடித்து அந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த விஷ்ணுகாந்தத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஒரே மாதத்தில் விவாகரத்து கேட்டு பிரிந்துள்ளார் சம்யுக்தா.

விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா என இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லி தொடர்ந்து வீடியோக்களையும் வெளியிட்டு வருவது மட்டுமல்லாமல் பேட்டிகளையும் அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சம்யுக்தா இனி விஷ்ணு காந்த் சாப்டர் க்ளோஸ் அவர் எப்படி அவமானப்பட்டு நிக்க போறார் பாருங்க என ஆவேசமாக பேட்டியில் பேசியதை தொடர்ந்து விஷ்ணுகாந்த் தன்னை காதலித்துக் கொண்டே சம்யுக்தா வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்துள்ளார் என்ற உண்மையை போட்டு உடைத்தார்.

அதோடு சம்யுக்தா தன்னுடைய அண்ணன் என சொல்லிக்கொண்டு ஒருவருடன் பேசும் ஆடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில் விஷ்ணுகாந்த் லவ்வை சொன்ன பிறகு ரவி என்ற நடிகருடன் தொடர்ந்து பேசி வந்ததை அவரே ஒப்புக் கொண்டுள்ளார். ரவி தன்னிடம் தகாத முறையில் நடந்ததால் அவனிடமிருந்து அந்த உண்மையை வெளியே கொண்டு வர வேண்டும் என்பதற்காகத்தான் பேசினேன் என சொல்கிறார்.

அதே சமயம் அண்ணன்கள் என சொல்லும் மூன்று பேரிடம் ரவியிடம் நான் பேசுவதில்லை அவன் எல்லாவற்றிலும் பிளாக் செய்து விட்டேன் என அங்கும் ஒரு பொய் சொல்லி நாடகமாடியுள்ளார் என்பது இந்த ஆடியோவில் தெரிய வருகிறது.

மேலும் விஷ்ணுகாந்திடம் ரவி தனக்கு ஒரு நல்ல நண்பன் மட்டுமே சொன்ன சம்யுக்தா அவரை காதலித்ததையும் தன்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததையும் மறைத்துள்ளார்.

இது ஆடியோவை கேட்ட ரசிகர்கள் இப்படியா ட்ரிபிள் கேம் ஆடுவீங்க என கேள்வி எழுப்பி வருகின்றனர்.