மேடையில் ரசிகைகளுக்கு உதட்டில் முத்தம்: பாடகர் உதித் நாராயண் செயல் சர்ச்சையானது

உதித் நாராயண், மேடையில் நடந்து கொண்ட நிகழ்வு சர்ச்சையாகி உள்ளது. இது பற்றிய விவரம் காண்போம்..

பின்னணி பாடகரான உதித் நாராயண், பல மொழிகளில் பாடி இருக்கிறார். மேலும், பத்ம பூஷண், லதா மகேஷ்கர் விருது, பத்மஸ்ரீ என பல உயரிய விருதுகளை பெற்றிருக்கும் இவர், தமிழில் அச்சச்சோ புன்னகை, காதல் பிசாசே, சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா என பல பாடல்களை பாடியுள்ளார்.

இவர், நேரலை நிகழ்ச்சியில் ‘டிப் டிப் பர்சா பானி’ என்ற பாடலை பாடிக்கொண்டிருந்தார். அந்த பாடலைக் கேட்டு மகிழ்ந்து போன ரசிகர்கள், அவருடன் செல்ஃபி எடுக்க மேடைக்கு அருகில் கூடினர்.

அப்போது, பெண் ரசிகர் செல்ஃபி எடுத்துவிட்டு, பாடகர் கன்னத்தில் முத்தம் கொடுத்தார். அப்போது, பாடகர், அந்தப் பெண் தலையை பிடித்து திருப்பி உதட்டில் முத்தம் கொடுத்தார்.

அது மட்டுமில்லாமல், மற்றொரு பெண் ரசிகை பாடகரை முத்தமிட்டு கட்டிப்பிடிக்க முயன்றபோது, உதித் நாராயண் அவரது கன்னத்தில் முத்தமிட்டார். அதோடு மட்டுமில்லாமல், செல்ஃபி எடுக்க வந்த மற்றொரு பெண்ணின் உதட்டிலும் முத்தம் கொடுத்தார். இதை கூட்டத்தில் இருந்தவர்கள் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இணையவாசிகள் பாடகர் உதித் நாராயணனை விமர்சித்து வருகின்றனர். இணையவாசி ஒருவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், அந்தஸ்துள்ள ஒரு பாடகர் பொதுவில் இப்படியா அசிங்கமாக நடந்து கொள்வது?
மற்றொரு இணையவாசி, அவரின் இந்த செயல் நமது கலாச்சாரத்தை அழித்துவிடும்’ என்றார்.
‘அவர் முத்தம் கொடுத்தபோது, கூட்டத்தில் இருந்த மக்கள் ஏன் ஆரவாரம் செய்தனர்’ என இன்னொருவர் கேட்டுள்ளார்.

இதில் என்ன தவறு? அவர் யாரையும் கட்டாயப்படுத்தி கொடுக்கவில்லை. ரசிகர்கள் அவர் மீது இருந்த அன்பால் வந்தார்கள். கடைசியாக வந்த பெண், அங்கு என்ன நடக்கிறது என்பதைப் பார்த்த பிறகு அருகில் வந்தார்’ என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

singer udit narayan kissed several female fan live show