மகேஷ் டிரைவர் வேலை பார்க்க கிளம்புவதாக மித்ரா கொளுத்தி போட ஆனந்தி மித்ரா தோழிகளுக்கு வார்னிங் கொடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிங்க பெண்ணே. இந்த சீரியலில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ஆனந்தியின் தோழிகள் மித்ராவின் அல்லக்கைகள் மீது தண்ணீரை எடுத்து ஊற்றி விட ரெண்டு கேங்கிற்கும் இடையே வாக்குவாதம் உருவாகிறது. கோகிலா தண்ணி தானே பட்டது அதுக்கு எதுக்கு வாய்க்கு வந்ததெல்லாம் பேசுறீங்க என்று கேட்கிறார்.
டயானா உன்கிட்ட எல்லாம் பேசணும்னு எங்களுக்கு அவசியமில்லை என்று சொல்ல ஆனந்தி என் அக்கா கிட்ட மரியாதை இல்லாம பேசாதீங்க அம்புட்டு தான் என்று வார்னிங் கொடுக்கிறார்.
மறுபக்கம் மகேஷ் வெளியில் கிளம்ப தயாராகிக் கொண்டிருக்க மித்ரா மகேஷின் அம்மாவிடம் தணிகாசலம் குரூப் ஆஃப் கம்பெனியோட எம்டி அதான் உங்க பையன் உங்க பையன் ஆனந்தி குடும்பத்துக்கு டிரைவர் வேலை பார்க்க கிளம்பிட்டு இருக்காரு என்று கொளுத்தி போடுகிறாள். இங்கே ஆனந்தி ஹாஸ்டல் வார்டனிடம் மன்னிப்பு கேட்கிறார்.