P.V Sindhu : பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றில் ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 24-26, 20-22 என்ற நேர் செட்டில் தென்கொரியாவின் சங் ஜி ஹீயனிடம் தோல்வி அடைந்தார்.
ஹாங்காங் ஓபன் பேட்மிட்டன் போட்டியில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 18-21, 30-29, 21-18 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீரர் பிரனாயை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டதில் இந்திய வீரர் சமீர் வர்மா, சீனாவின் சென் லாங்கை சந்திக்க இருந்தார். காயம் காரணமாக சென் போட்டியில் இருந்து விலக்கியதால் இந்திய வீரர் சமீர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.