வெந்து தணிந்தது காடு படத்தின் டப்பிங் பணியை நிறைவு செய்த சிம்புவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘மாநாடு’ படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சிம்பு நடித்து முடித்திருக்கும் படம் தான் “வெந்து தணிந்தது காடு”. இப்படத்தை கௌதம் மேனன் இயக்கியுள்ளார். இதற்குமுன் இந்த கூட்டணியில் வெளியான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதால் இப்படமும் சிம்புவிற்கு வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் கதாநாயகிகளாக கயாடு லோகர் மற்றும் சித்தி இட்னானி நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ‘வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ்’ சார்பில் ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரிக்கிறார். மேலும் இப்படத்தின் டீசர் மற்றும் போஸ்டர்கள் சமீபத்தில் ரிலீசாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் இப்படம் வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இப்படத்திற்கான டப்பிங் பணிகளை நடிகர் சிம்பு நிறைவு செய்துள்ளார். இது குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.