
Simitaangaran Vs Adchi Thooku : தளபதி விஜயின் சர்க்கார் படத்தில் சிங்கிள் ட்ராக் பாடலான சிமிட்டாங்காரன் சாதனையை வெறும் 3 மணி நேரத்தில் ஓரங்கட்டி உள்ளது தல அஜித்தின் அடிச்சு தூக்கு சிங்கிள் ட்ராக்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விசுவாசம் படத்திலிருந்து அடிச்சு தூக்கு என்ற சிங்கிள் ட்ராக் பாடல் நேற்று இரவு 7 மணி அளவில் யூடியூபில் வெளியாகி இருந்தது.
டி இமான் இசையில் மற்றும் குரலில் வெளியாகி இருந்த இந்தப் பாடல் ரசிகர் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது.
அது மட்டும் இல்லாமல் பல்வேறு சாதனைகளையும் அடித்து நொறுக்கி புதிய சாதனைகளை படைத்து வருகிறது.
அப்படித்தான் சர்க்கார் படத்தில் இருந்து வெளியாகியிருந்த சிமிட்டாங்காரன் பாடலின் 24 மணிநேர சாதனையை 3 மணி நேரத்தில் பிரேக் செய்து சாதனை படைத்துள்ளது.
அதாவது #Simtaangaran ஹாஷ்டேக் உருவாக்கப்பட்டு 24 மணி நேரத்தில் 221K முறை பயன்படுத்தப்பட்டு இருந்தது.
ஆனால் தற்போது விசுவாசம் சிங்கிள் ட்ராக்கிற்காக உருவாக்கப்பட்ட #AdchiThooku ஹாஷ்டேக் வெறும் 3 மணி நேரத்தில் 221K முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் சிமிட்டாங்காரன் சாதனையை 3 மணி நேரத்தில் அடித்து நொறுக்கியுள்ளது.