இன்ஸ்டாகிராமில் என்ட்ரி கொடுத்த தளபதி விஜயை வெல்கம் செய்துள்ள சிம்புவின் இன்ஸ்டா ஸ்டோரி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத டாப் ஹீரோவாக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் என் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி இருந்த பத்து தல திரைப்படம் கடந்த 30ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து வருகிறது.

இந்நிலையில் எப்போதும் சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் சிம்பு நேற்றைய தினம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என்ட்ரி கொடுத்த தளபதி விஜயை “வெல்கம் டு இன்ஸ்ட்டா தளபதி விஜய் அண்ணா” என்று அவரது இன்ஸ்டா ஸ்டோரியில் விஜயின் புகைப்படத்துடன் பதிவிட்டு வெல்கம் செய்திருக்கிறார் . அப்பதிவு தற்போது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வைரலாகி வருகிறது.