பன்னாட்டு நிறுவனத்தின் மதுபான விளம்பரத்தில் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்துள்ள சிம்புவை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

கோலிவுட் திரை வட்டாரத்தில் ரசிகர்களால் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் தற்போது வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் தயாராகி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து நடிகர் சிம்பு பத்து தல என்ற படத்தில் தீவிரமாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் சிம்பு விளம்பரத்தில் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்துள்ளார். அதாவது பன்னாட்டு நிறுவனத்தின் மதுபான விளம்பரத்தில் நடிப்பதற்கு அந்நிறுவன தரர்கள் சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். அதற்கு பெரிய தொகையையும் சம்பளமாகவும் பேசியுள்ளனர். ஆனால் நடிகர் சிம்பு அந்த விளம்பரத்தை நடிக்க முடியாது என்று மறுத்திருக்கிறார்.

இது போன்று ஏற்கனவே கே.ஜி.எஃப் படத்தின் ஹீரோ யாஷ் மற்றும் அல்லு அர்ஜுன் போன்ற சில நடிகர்களும் இந்த விளம்பரங்களில் நடிக்க மறுத்துள்ளார்கள் என்பது தெரிய வந்துள்ளது. இதனால் சிம்புவின் ரசிகர்கள் அவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.