கொரோனா குமார் படத்திலிருந்து நடிகர் சிம்பு வெளியேறியுள்ளார். 

Simbu Quit From Corona Kumar Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. மாநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். 

வரிசை கட்டி நிற்கும் படங்களின் லிஸ்டில் ஒன்றாக இருந்து வந்தது கொரோனா குமார். இதற்கு தமிழ் ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. 

பெல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருந்த இந்த படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்து தற்போது வரை எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாமல் இருந்து வந்தது. 

இப்படியான நிலையில் தற்போது இப்படத்திலிருந்து நடிகர் சிம்பு வெளியேறி விட்டதாகவும் அவருக்கு பதிலாக நடிகர் விஷ்ணு விஷால் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இது பற்றிய அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.