சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் பத்து தல திரைப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

தென்னிந்திய சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஒபெலி.என். கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பத்து தல’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

கன்னடத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டில் வெளியான “முஃப்தி” என்னும் திரைப்படத்தின் ரீமேக்காக உருவாக்கி இருக்கும் இப்படத்தில் ஏ ஜி ஆர் என்னும் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு மிரட்டலாக நடித்திருக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலும் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் முக்கிய அப்டேட் வரும் மார்ச் 3ம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்து உள்ளது. அதனால் மகிழ்ச்சியடைந்த ரசிகர்கள் அந்த அப்டேட் டீசர்ட் குறித்த அல்லது செகண்ட் சிங்கிள் பாடல் குறித்த என்ற கேள்விகளை கமெண்ட் செய்து மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இதனை வைரலாக்கி வருகின்றனர்.