நடிகர் சிம்புவுக்கு பெண் கிடைத்து விட்டதாகவும் விரைவில் திருமணம் எனவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ள இவர் டி ராஜேந்திரன் அவர்களின் மூத்த மகன் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.

தற்போது 40 வயதாகும் சிம்பு பல்வேறு காதல் தோல்விகளை சந்தித்து தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் சிங்களாக வாழ்ந்து வருகிறார். மேலும் இவருக்கு டி ராஜேந்தர் மும்மரமாக பெண் தேடி வருவதாக பல வருடங்களாக கூறப்பட்டு வருகிறது.

ஏற்கனவே சிம்புவின் திருமணம் குறித்து பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வந்த நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது நடிகர் சிம்புவுக்கும் இலங்கையைச் சார்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகளுக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் அதற்கான வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒவ்வொரு முறையும் சிம்புவின் திருமணம் குறித்து பரவும் தகவல்களுக்கு அவரது தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்த முறை இந்த தகவல் குறித்து என்ன பதில் சொல்ல போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.