
நடிகர் சிம்பு தன்னுடைய திருமணத்திற்கு க்ரீன் சிக்னல் காட்டி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு தற்போது மீண்டும் பிஸியான நடிகராகி வருகிறார். 35 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வரும் சிம்பு தற்போது ஓகே சொல்லியுள்ளார்.
சமீபத்தில் டி.ராஜேந்தர் அளித்த பேட்டி ஒன்றில் தற்போது சிம்புவே என்னை பெண் பார்க்க சொல்லி விட்டதாகவும் அதனால் தற்போது நல்ல பெண்ணை தேடி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனால் விரைவில் சிம்புவுக்கு திருமணம் முடிந்து விடும் என்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்து நல்ல பெண் கிடைக்க அவருக்கு வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.
